கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1,000 பெற தகுதியான குடும்ப தலைவிகளின் விண்ணப்பங்களை பதிவு செய்ய அரியலூர் மாவட்டத்தில் ஏற்கனவே முதற்கட்ட சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. 2-ம் கட்ட சிறப்பு முகாம்கள் ஜெயங்கொண்டம் தாலுகாவில் 162 ரேஷன் கடை பகுதிகளிலும், ஆண்டிமடம் தாலுகாவில் 67 ரேஷன் கடை பகுதிகளிலும், பேரூராட்சிகள், தாலுகாக்களில் இதுவரை சிறப்பு முகாம்கள் நடைபெறாத மீதமுள்ள பகுதிகளிலும் இன்று முதல் வருகிற 16-ந்தேதி வரை நடைபெற உள்ளது. விண்ணப்ப பதிவு முகாம்கள் ஞாயிற்றுக்கிழமை உள்பட அனைத்து வேலை நாட்களிலும் காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மதியம் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும். இதற்கான விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள் நேற்று முன்தினம் முதல் அந்தந்த ரேஷன் கடை பணியாளர்கள் மூலமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கு சென்று வினியோகிக்கப்பட்டு வருகிறது. விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள முகாமிற்கு, டோக்கன்களில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் குறித்த நேரத்தில் மட்டும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை, குடும்ப அட்டை நகல், மின்கட்டண ரசீது, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் சென்று பதிவு செய்திட வேண்டும்.

 




அரியலூர் மாவட்டத்தில் முதற்கட்ட சிறப்பு முகாம்களில் விடுப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு  இன்றும் அந்தந்த மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. விண்ணப்பங்கள் பெறப்பட்டு பல்வேறு காரணங்களால் முகாமில் வந்து பதிவு செய்ய தவறிய விண்ணப்பதாரர்கள், ஏற்கனவே தங்களுக்கு வழங்கப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள் கொண்டு வந்து பதிவு செய்து கொள்ளலாம்.

 

 

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.



 






ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண