ஷாருக்கானுக்கு தமிழ் சொல்லி தரும் அட்லீ... வெளியானது ஜவான் படத்தின் மேக்கிங் வீடியோ!


கடந்த ஜனவரி மாதம் ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த பதான் திரைப்படம் ஒட்டுமொத்த இந்தி திரையுலகையும் மிரள வைத்தது. பதான் வெற்றியை தொடர்ந்து ஷாருக்கான் ரசிகர்களுக்கு பூஸ்டர் படமாக உள்ளது ஜவான். படத்தை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஷாருக்கான் ரசிகர்கள், ஜவான் படத்தின் ஒவ்வொரு அட்டேட்களையும் தெறிக்கவிட்டு வருகின்றனர். அந்த வகையில் ஜவான் படத்தில் இடம்பெற்றுள்ள ‘வந்த இடம்’ பாடலின் மேக்கிங் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க


‘வீசும் காற்றில் விஷம் பரவட்டும்' .. பள்ளி மாணவனுக்கு அரிவாள் வெட்டு.. கொதித்தெழுந்த ஜி.வி.பிரகாஷ்


திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளி மாணவன், சக மாணவர்களால் வெட்டப்பட்ட சம்பவத்தில் நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ்குமார் ஆவேசமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  சாதிகள் இல்லையடி பாப்பா என சொல்லிக்கொடுக்கும் கல்வி நிலையங்களில் சாதிய பாகுபாடு பார்க்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இது அடிமைத்தனத்தில் தொடங்கி குற்றச்சம்பவங்கள் வரை நீண்டுக் கொண்டே செல்கிறது. மேலும் படிக்க


ஜெயிலர் வசூல் வேட்டை.. ரிஷிகேஷ் ஆசிரமத்தில் சாந்தமாக ரஜினிகாந்த்.. வைரலாகும் ஃபோட்டோ!


நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருப்பவர். கடந்த சில ஆண்டுகளாக அவரது உடல்நிலை மற்றும் கொரோனா பரவல் காரணமாக மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் இமயமலை போவதை தவிர்த்து வந்தார். தற்போது, ஜெயிலர் பட ரிலீஸூக்கு முன், இமயமலைக்கு கிளம்பிச் சென்றார் நடிகர் ரஜினி. இந்நிலையில், ரிஷிகேஷில் சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமத்தில் நடிகர் ரஜினிகாந்த் உள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் படிக்க


‘லட்சுமி மேனனை கல்யாணம் பண்ணப்போறேனா?’ : கடுப்பான விஷால்.. சோகத்தில் ரசிகர்கள்..


பிரபல சினிமா தயாரிப்பாளர் ஜி.கே.ரெட்டியின் இளைய மகனான விஷால், 2004 ஆம் ஆண்டு வெளியான ‘செல்லமே’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து திமிரு, சண்டகோழி, தாமிரபரணி, மலைக்கோட்டை, சத்யம், தோரணை,தீராத விளையாட்டு பிள்ளை, பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், பாயும் புலி, துப்பறிவாளன்,அயோக்யா, வீரமே வாகை சூடும் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார். மேலும் படிக்க


பீஸ்டிடம் கவிழ்ந்ததா ஜெயிலர்..! ரஜினி படத்தின் முதல் நாள் மொத்த வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா?


ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கி இருக்கும் ஜெயிலர் திரைப்படம் சினிமா ரசிகர்களை திருவிழாவாக கொண்டாட வைத்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சரவணன், யோகிபாபு, தமன்னா, அறந்தாங்கி நிஷா, சிவராஜ்குமார், சுனில், மிர்னா, வசந்த் ரவி, ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் படிக்க


கமல் ஹாலிவுட்டுக்கு சென்று படம் இயக்க வேண்டும்... அவர் இங்கு மாட்டிக்கொண்டிருக்கிறார்... ஏ.ஆர்.ரஹ்மான் பளிச்!


உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் சேர்ந்து படங்களில் பணியாற்றுவது மட்டுமில்லை தங்களுக்குப் பிடித்தப் படங்களை சேர்ந்து பார்க்கவும் செய்கிறார்கள். இந்த முறை என்ன என்ன படங்களை பார்த்தார்கள் தெரியுமா! சங்கர் இயக்கிய இந்தியன் மற்றும் தெனாலி உள்ளிட்ட கமல் நடித்தப் படங்களுக்கு இசையமைத்தார் ஏ.ஆர்.ரஹ்மான். தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஒருவர்மீது ஒருவர் பெரிய அளவில் மரியாதை வைத்திருக்கிறார்கள். மேலும் படிக்க


வெட்டுப்பட்ட நாங்குநேரி பள்ளி மாணவர்கள்.. சமூகத்தின் முகத்தில் அறையும் மாரி செல்வராஜின் ட்வீட்


நெல்லை மாவட்டத்தில் பள்ளி மாணவனை உடன் படிக்கும் சக மாணவர்கள் வீடு புகுந்து வெட்டிய சம்பவத்திற்கு இயக்குநர் மாரி செல்வராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற சம்பவம் ஒன்று தமிழ்நாடு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அங்குள்ள நாங்குநேரி பகுதியில் முனியாண்டி என்பவர் வசித்து வருகிறார். கூலித் தொழிலாளியான இவருக்கு மனைவி அம்பிகா, சின்னத்துரை என்ற மகனும், சந்திர செல்வி என்ற மகளும் உள்ளனர். மேலும் படிக்க