Alphonse​​ Puthren: "இனி படங்கள் இயக்க மாட்டேன்”.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அல்போன்ஸ் புத்திரன் - என்ன ஆச்சு?


மலையாள திரையுலகில் இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், படத்தொகுப்பாளர் என பன்முக திறமை கொண்டவர்களில் ஒருவர் அல்போன்ஸ் புத்திரன். பல குறும்படங்களை இயக்கியுள்ள இவர் 2013 ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமானார். நிவின் பாலி, நஸ்ரியாவை முதன்மை கதாபாத்திரங்களாக கொண்டு ‘நேரம்’ என்ற படத்தை அல்போன்ஸ் புத்திரன் இயக்கியிருந்தார். இந்த படம் தமிழ், மலையாளம் என இருமொழிகளில் எடுக்கப்பட்ட நிலையில் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் படிக்க


Leo Success Meet: லியோ வெற்றி விழாவுக்கு காவல்துறை அனுமதி.. ஆனால் சில நிபந்தனைகள் இருக்கு..!


நடிகர் விஜயின் லியோ திரைப்படம் இந்தியாவில் ரூ. 300  கோடியை தாண்டியும், உலகம் முழுவதும் ரூ. 500 கோடி வசூலை குவித்து வருகிறது. இப்படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடமும் கலவையான விமர்சனங்களை பெற்றது. சமீபத்தில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், 'லியோ' படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் சார்பில் வெற்றி விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதற்காக தமிழக காவல்துறையிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அதன்பிறகு  நிகழ்ச்சியை நடத்த அனுமதி கோரி செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தமிழக காவல்துறைக்கு கடிதம் எழுதியுள்ளது. மேலும் படிக்க


5 ஆண்டுகளாக படுக்கையிலே இருக்கும் விக்ரமனின் மனைவி - வீடு தேடிச் சென்ற அமைச்சர் மா.சுப்ரமணியன்


விஜய் நடித்த பூவே உனக்காக, சரத்குமாரின் சூர்யவம்சம், விஜயகாந்தின் வானத்தைப் போல, மாதவன் நடித்த பிரியமான தோழி உள்ளிட்ட ஹிட் படங்களை இயக்கி வெற்றி கண்டவர் விக்ரமன். இது மட்டும் இல்லாமல் தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத்தின் தலைவராக இருக்கும் விக்ரமனின் மனைவி ஜெயப்பிரியா கடந்த ஐந்து ஆண்டுகளாக படுத்த படுகையாக இருப்பதாக தகவல் வெளியானது. மேலும் படிக்க


Actress Suicide: பெரும் சோகத்தில் திரையுலகம்! 35 வயதிலே மலையாள நடிகை தற்கொலை - தூக்கில் தொங்கிய நிலையில் உடல் மீட்பு


மலையாள நடிகை ரெஞ்சுஷா மேனன் திருவனத்தபுரம் அடுத்த காரியம் பகுதியில் உள்ள தனது வீட்டில்,  தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். தனது கணவர் மனோஜ் மற்றும் தந்தையுடன் அவர் அந்த வீட்டில் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாக அவர் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வந்ததாக கூறப்படும் நிலையில், அவர் தற்கொலை செய்துள்ளார். அதேநேரம், இது தற்கொலை தானா? அல்லது ரெஞ்சுஷா மேனன் கொலை செய்யப்பட்டாரா? என்ற நோக்கத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் படிக்க


Bigg Boss 7 Tamil: மெகா பிளானை போட்ட கேப்டன் பூர்ணிமா.. முதல் நாளே புது போட்டியாளர்களுக்கு நேர்ந்த கதி..


விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரையும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9.30 மணி முதல் 11 மணி வரையும் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியை 7வது ஆண்டாக நடிகரும், அரசியல்வாதியுமான கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குகிறார். மேலும் படிக்க