பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் 29வது நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் பல எதிர்பாராத காட்சிகள் இடம் பெற்றுள்ளது. 


விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரையும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9.30 மணி முதல் 11 மணி வரையும் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியை 7வது ஆண்டாக நடிகரும், அரசியல்வாதியுமான கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குகிறார்.


இந்த நிகழ்ச்சியில் வினுஷா தேவி, டான்ஸர் ஐஷூ, விஜய் வர்மா, சரவண விக்ரம்,கூல் சுரேஷ், மணி சந்திரா, ரவீனா தாஹா, யுகேந்திரன் வாசுதேவன் நிக்ஸன், அனன்யா ராவ், ஜோவிகா விஜயகுமார், விஷ்ணு விஜய், பிரதீப் ஆண்டனி, விசித்ரா,  மாயா கிருஷ்ணா, அக்‌ஷயா உதயகுமார், பூர்ணிமா ரவி, பவா செல்லத்துரை ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில்  அனன்யா ராவ், விஜய் வர்மா, யுகேந்திரன், வினுஷா தேவி ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். எழுத்தாளர் பவா செல்லத்துரை தாமாக முன்வந்து வெளியேறினார். 


இந்நிகழ்ச்சிக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்த நிகழ்ச்சியில் 29வது நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. 


 


 


 






அதன்படி பிக்பாஸ் வரலாற்றில் இல்லாத அளவுக்கு வைல்ட் கார்டு போட்டியாளர்களாக பாடகர் கானா பாலா, பட்டிமன்ற பேச்சாளர் அன்ன பாரதி, விஜே அர்ச்சனா, நடிகர் தினேஷ் காமராஜ், ஆர்.ஜே.பிராவோ என 5 பேர் ஒரே நேரத்தில் உள்ளே நுழைந்துள்ளனர். இன்றைய ப்ரோமோவில் இவர்கள் 5 பேரும் அப்படியே ஸ்மால் பாஸ் வீட்டுக்கு அனுப்பப்படும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இவர்களுடன் 6 வது நபராக விசித்ராவும் கேப்டன் பூர்ணிமா ரவியால் அனுப்பப்படுகிறார்.


இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் ஸ்மால் பாஸ் வீடு அறிமுகம் செய்யப்பட்டது. ஒவ்வொரு வாரமும் கேப்டனை கவர தவறிய 6 பேர் அந்த வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள். அவர்கள் தான் வீட்டின் சமையல் வேலையை கவனிக்க வேண்டும். பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் என்ன கேட்டாலும் அதனை சமைத்து கொடுக்க வேண்டும். மற்றபடி பாத்ரூம் கிளினீங், பாத்திரங்கள் கழுவுவது உள்ளிட்ட பல வேலைகளும் டாஸ்க் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படும். மேலும் விதிகளை மீறுகிறவர்களும் ஸ்மால் பாஸ் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள்.