மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா பருவத்துக்கு 36,401 ஹெக்டேர், தாளடி பருவத்துக்கு 37,940 ஹெக்டேர் என மொத்தம் நடப்பு சம்பா, தாளடி பருவத்துக்கு 74.341 ஹெக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது வரை 15,201 ஹெக்டேர் நேரடி விதைப்பும், 9370 ஹெக்டேர் சாதா நடவும் மற்றும் 28,229 ஹெக்டரில் திருந்திய சாகுபடி பரப்பளவு ஆக கூடுதலாக 52,800 ஹெக்டர் பரப்பில் சம்பா, தாளடி பருவத்தில் நடவுப்பணிகள் முடிவடைந்துள்ளது. எஞ்சிய நிலப்பரப்பில் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இதற்காக விவசாயிகள் தங்கள் நிலத்தை உழுது சீர்படுத்தி, வரப்புகளை உயர்த்திக் கட்டி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.




இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம்  மயிலாடுதுறை அடுத்த  செம்பனார்கோயில் பகுதியில் நடைபெற்ற உழவுப் பணியின் போது, நூற்றுக்கணக்கான பறவைகள் நிலத்தில் சிந்தியுள்ள நெல்மணிகளை உட்கொள்ள வயலை சூழ்ந்தன. இதையடுத்து, டிராக்டர் கொண்டு நிலத்தை சமன்படுத்தும் பணியில் ஈடுபட்ட விவசாயி, பறவையின் மேல் மோதிவிடாமல் கவனத்துடனேயே தனது வாகனத்தை இயக்கினார். பறவைகளும் டிராக்டர் அருகில் வரும் போது பறந்து மீண்டும் வயலில் அமர்ந்து அதன் பணியை செய்தது. இதனை சாலையைக் கடந்து சென்ற பொதுமக்கள் பலரும் ரசித்து சென்றனர்.




தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. மேலும் இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், "இலங்கை மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று அக்டோபர் 30 தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.




நாளை அக்டோபர் 31 -ம் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், நவம்பர் 1 மற்றும் 2 தேதி  தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் நவம்பர் 3 மற்றும் 4 -ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.


வயல்வெளியில் திரண்ட பறவைகள் Chana Palak: பிரியாணி, சாதம் சாப்பிட்டு போர் அடித்து விட்டதா? இந்த சென்னா பாலக் சாதத்தை ட்ரை பண்ணுங்க....




இந்த சூழலில் காவிரி கடைமடை மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் மயிலாடுதுறை நகரில் மிதமான மழை பெய்தது. இதேபோல் மயிலாடுதுறை, தருமபுரம், மன்னம்பந்தல், ஆறுபாதி, செம்பனார்கோவில், வடகரை, கழனிவாசல், திருக்கடையூர், பொறையார், பெரம்பூர், சீர்காழி , கொள்ளிடம், பூம்புகார், வைத்தீஸ்வரன் கோயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமானமழை விட்டு விட்டு பெய்து வருகிறது. மேலும் நடவு நட்டு தண்ணீரின்றி காய்ந்து வரும் சம்பா பயிர்களுக்கு இந்த மழை உகந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.