LCU Timeline: லோகேஷ் கனகராஜின் LCU டைம்லைன்; கதை எங்கு, யாரிடம் தொடங்குகிறது? எப்படி இணைக்கப்பட்டுள்ளது?


மார்வெல், டிசி என்பன போன்ற சில ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனங்கள் மட்டுமே சினிமாடிக் யூனிவெர்ஸை உருவாக்கி, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வசூலை வாரிக் குவித்து வந்தன. ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக கைதி மற்றும் விக்ரம் படங்கள் மூலமாக லோகேஷ் சினிமாடி யூனிவெர்ஸ் (LCU) என்பதை தொடங்கினார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். ரசிகர்களும் அதற்கு ஏகோபித்த வரவேற்பு அளித்தனர். மேலும் படிக்க


”ஏன் நீ இப்படி செய்தாய்...?” - விக்ரம் படத்திற்காக லியோ தயாரிப்பாளர் லலித்குமாரை திட்டிய விஜய்..! நடந்தது என்ன?


படத்தில் பார்த்திபன் மற்றும் லியோ தாஸ் ஆக மிரட்டி இருக்கும் விஜய் ரசிகர்களின் பாராட்டை பெற்று வருகிறது. லியோவுக்கு டஃப் கொடுக்கும் விதமாக அர்ஜூன், சஞ்சய் தத், சாண்டி உள்ளிட்டோர் வில்லத்தனத்தில் மிரட்டியுள்ளனர். படத்தில் வன்முறை காட்சிகள் நிறைந்து இருந்தாலும் லியோ படத்தை குடும்பத்துடன் சென்று கொண்டாடி வருகின்றனர் விஜய் ரசிகர்கள். இந்த நிலையில் லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித் குமாருக்கும், விஜய்க்கும் நடந்த தொலைப்பேசி உரையாடல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க


Leo fans Celebration: ”விஜய்க்கு எங்கள் ஓட்டு கன்ஃபார்ம்” - விசிலடித்து லியோவை கொண்டாடிய நரிக்குறவர்கள்!


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படம் கடந்த 19ம் தேதி ரிலீசாக வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி கொண்டிருக்கிறது. த்ரிஷா, சஞ்சய்தத், அர்ஜூன், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி மாஸ்டர் என பெரிய நட்சத்திர கூட்டமே இணைந்துள்ள லியோ படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறது. ஆக்‌ஷன் காட்சிகளில் வரும் விஜய், திரையரங்குகளில் ரசிகர்களை விசிலடிக்க வைத்துள்ளார். சாதுவான தந்தையாகவும், வில்லன்களை வெறித்தனமாக வேட்டையாடும் காட்சிகளிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ள விஜய் அப்லாஸ்களை அள்ளுகிறார்.  மேலும் படிக்க


Bigg Boss 7 Tamil: பிக்பாஸ் வீட்டுக்கு பெண் கேப்டனா?.. பொங்கியெழுந்த நிக்ஸன்.. நெட்டிசன்கள் எதிர்ப்பு..!


கடந்த வார கேப்டன் யுகேந்திரன் மற்றும் நிக்ஸன்,பூர்ணிமா, விஜய் ஆகிய 3 பேரை தவிர்த்து 0 முதல் 9 எண்கள் கொண்ட போர்டுடன் மற்ற போட்டியாளர்கள் நிற்க வேண்டும். அங்கிருந்த ஒரு ஸ்க்ராட்ச் கார்டில் இருக்கும் 4 எண்கள் மட்டும் வந்து நிற்க வேண்டும். அதன்படி சரவண விக்ரம், மாயா, ரவீனா, அக்‌ஷயா ஆகிய 4 பேர் வைத்திருந்த எண்கள் வந்தது. இவர்கள் 4 பேரை கேப்டன் தேர்வில் இருக்கும் 3 பேர் தங்களுக்கு ஆதரவு அளிக்கும்படி கோர வேண்டும். பெரும்பான்மை அடிப்படையில் கேப்டன் தேர்வு செய்யப்படுவார் என பிக்பாஸ் அறிவித்தார். மேலும் படிக்க


அம்மாவுக்காக சென்னையில் தற்காலிகமாக குடியேறும் பாலிவுட் நடிகர் அமீர்கான் - காரணம் இதுதான்!


தனது தாய்க்காக பாலிவுட் நடிகர் அமீர்கான் சென்னைக்கு தற்காலிகமாக குடியேற உள்ளதாக தெரிவித்துள்ளார். பாலிவுட்டில் ஸ்டார் நடிகராக இருக்கும் அமீர்கான் தனது நடிப்பை தாண்டி குடும்பத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கும் நபராக வலம் வருபவர். குறிப்பாக அவருடைய தாய் ஜீனத் உசேன் மீது மிகுந்த பாசம் கொண்டவராக இருக்கும் அமீர்கான் அண்மையில் முக்கியமான முடிவு ஒன்றை எடுத்துள்ளார். மேலும் படிக்க