• Ayudha Pooja: 7 லட்சம் பேர் பயணம், சந்தைகளில் குவியும் மக்கள்! களைகட்டத் தொடங்கிய ஆயுதபூஜை கொண்டாட்டம்!


வார இறுதி விடுமுறை மற்றும் ஆயுத பூஜை, விஜயதசமி என சனிக்கிழமை தொடங்கி தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வசித்து வரும் மக்கள், சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர். இதனால், ரயில்கள் மற்றும் பேருந்துகள் வெள்ளிக்கிழமை மாலை முதல் நிரம்பி வழிந்தன. கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களிலும் பொதுமக்கள் பயணங்களை மேற்கொண்டதால், பல்வேறு முக்கிய இணைப்புச் சாலைகளில் கடும் நெரிசல் ஏற்பட்டது. தொடர் விடுமுறையால் சென்னையில் இருந்து மட்டும் சுமார் 7 லட்சம் பேர் வெளியூர்களுக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க



  • Kalaignar Magalir Urimai Scheme: மகளிர் உரிமைத்தொகை: இனி மாதந்தோறும் ஆய்வு - தமிழ்நாடு அரசு அறிவிப்பு


முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தலுக்கு முன்பு தேர்தல் வாக்குறுதியாக குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்ற திமுக, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலம் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தது. அதன்படி திட்டத்திற்குத் தகுதியான பயனாளிகளைத் தேர்ந்தெடுக்கும் வகையில் விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட்டது. பின்னர் மகளிர் உரிமைத் தொகைக்கு தகுதியானவர்கள் எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டது. மேலும் படிக்க



  • Tej Cyclone: மக்களே.. இன்று மாலைக்குள் அதி தீவிர புயலாக மாறும் தேஜ் புயல்! மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை


அரபிக் கடலில் மையம் கொண்டிருக்கும் தேஜ் புயல் இன்று மாலைக்குள் அதி தீவிர புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வந்த நிலையில் நேற்று வட கிழக்கு பருவமழை தொடங்கியது. இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன் அதாவது 19 ஆம் தேதி அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது, பின்னர் இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும் மாறியது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுவடைந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்த புயலுக்கு தேஜ் என்ற பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது. மேலும் படிக்க



  • Kilambakkam Bus Stand: ஆஹா வந்துவிட்டது ஹாப்பி நியூஸ்.. இனி கிளம்பாக்கத்தில் தண்ணீர் தேங்காது.. சுட சுட அப்டேட் இதோ..!


சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய, செங்கல்பட்டு மாவட்டம், சென்னை புறநகர் பகுதியான வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில்  ஒரே வளாகத்தில் அனைத்து அரசு, தனியார் பேருந்துகளையும் இயக்கும் வசதிகளுடன் புதிய பேருந்து முனையம் அமைக்கப்பட்டு வருகிறது. சுமார் 393.74 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவிற்காக காத்திருக்கிறது. இந்த பேருந்து நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படிக்க



  • கி.பி .943-ல் வெள்ளாங்குமரன் மன்னரால் கட்டப்பட்ட கோயில்.. ஆளுநர் ஆர் என் ரவி சாமி தரிசனம்..!


விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே திருமுண்டீச்சரம் கிராமம் உள்ளது. இங்கு பழமை வாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்ற செல்வாம்பிகை உடனுறை ஸ்ரீ சிவலோகநாதர் கோவில் உள்ளது. இக்கோவில் அப்பரால் பாடல் பெற்ற தலமாகும். இறைவனின் காவலர்களான திண்டி, முண்டி வழிபட்ட தலம் என்ற சிறப்பும் இக்கோவிலுக்கு உண்டு. தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் இக்கோவிலும் ஒன்றாகும். மேலும் படிக்க