லியோ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் தயாரிப்பாளர் லலித்குமாரை விஜய் தொலைபேசியில் திட்டியதாக தகவல் பகிரப்பட்டு வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படம் கடந்த 19ம் தேதி திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் இருந்தாலும், தொடர் விடுமுறையால் லியோ படம் பாக்ஸ் ஆபிசில் கலெக்ஷனை வாரி குவித்து வருகிறது. லியோ படம் ரிலீசான 3 நாட்களில் ரூ.140 கோடிக்கு கலெக்ஷனை அள்ளியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
படத்தில் பார்த்திபன் மற்றும் லியோ தாஸ் ஆக மிரட்டி இருக்கும் விஜய் ரசிகர்களின் பாராட்டை பெற்று வருகிறது. லியோவுக்கு டஃப் கொடுக்கும் விதமாக அர்ஜூன், சஞ்சய் தத், சாண்டி உள்ளிட்டோர் வில்லத்தனத்தில் மிரட்டியுள்ளனர். படத்தில் வன்முறை காட்சிகள் நிறைந்து இருந்தாலும் லியோ படத்தை குடும்பத்துடன் சென்று கொண்டாடி வருகின்றனர் விஜய் ரசிகர்கள். இந்த நிலையில் லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித் குமாருக்கும், விஜய்க்கும் நடந்த தொலைப்பேசி உரையாடல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
லியோ வெற்றியை தொடர்ந்து ஊடகங்களுக்கு படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் பேட்டி கொடுத்து வருகிறார். அப்படி ஒரு பேட்டியில் பேசியுள்ள லலித்குமார், விஜய் தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு திட்டியதாக கூறியுள்ளார். விக்ரம், துருவ் விக்ரம் காம்பினேஷனில் உருவான மகான் படம் ஓடிடியில் ரிலீசானது. அதை பார்த்த விஜய், லலித்குமாரை திட்டியுள்ளார். இப்படி ஒரு நல்ல படத்தை ஏன் ஓடிடியில் ரிலீஸ் செய்தாய் என்றும், திரையரங்கில் ரிலீஸ் செய்திருந்தால் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் என்றும் அதன் தயாரிப்பாளர் லலித் குமாரை விஜய் திட்டியுள்ளார். விஜய் திட்டிய பின்னர் தான், அந்த தவறை உணர்ந்ததாகவும் லலித் குமார் பகிர்ந்துள்ளார்.
துருவ் விக்ரம், விக்ரம், சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா என பலர் நடித்திருந்த மகான் திரைப்படம் ஓடிடியில் ரிலீசாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றிருந்தது. இதில் முதல் முறையாக துருவ் விக்ரம் மற்றும் விக்ரம் இணைந்து நடித்திருந்தனர்.
மேலும் படிக்க: Rolex: ஹரோல்டு தாஸின் மகனா ரோலக்ஸ்? லோகேஷ் கனகராஜின் எல்.சி.யு.வில் அடுத்து என்ன?