Leo fans Celebration: ”விஜய்க்கு எங்கள் ஓட்டு கன்ஃபார்ம்” - விசிலடித்து லியோவை கொண்டாடிய நரிக்குறவர்கள்!

நரிக்குறவர் இன மக்கள், விஜய் அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக அவருக்கு தான் வாக்களிப்போம் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Continues below advertisement

Leo fans Celebration: விஜய் நடித்த லியோ படத்தை தியேட்டரில் விசிலடித்து பார்த்த நரிக்குறவர் இன மக்கள், விஜய் அரசியலுக்கு வந்தால் வாக்களிப்போம் என கூறியுள்ளனர். 

Continues below advertisement

லியோ:

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படம் கடந்த 19ம் தேதி ரிலீசாக வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி கொண்டிருக்கிறது. த்ரிஷா, சஞ்சய்தத், அர்ஜூன், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி மாஸ்டர் என பெரிய நட்சத்திர கூட்டமே இணைந்துள்ள லியோ படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறது. ஆக்‌ஷன் காட்சிகளில் வரும் விஜய், திரையரங்குகளில் ரசிகர்களை விசிலடிக்க வைத்துள்ளார். சாதுவான தந்தையாகவும், வில்லன்களை வெறித்தனமாக வேட்டையாடும் காட்சிகளிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ள விஜய் அப்லாஸ்களை அள்ளுகிறார். 

நரிக்குறவர்கள் கொண்டாட்டம்:

இந்த நிலையில் வடசென்னை பாரத் திரையரங்கில் காலை 9 மணிக்கு திரையிடப்பட்ட லியோ படத்தின் சிறப்பு காட்சிகளை காண நரிக்குறவர் இன மக்கள் வந்துள்ளனர். அவர்களுக்கு திரையரங்கு நிர்வாகம் சார்பில் 14 டிக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அதை பெற்று கொண்டு, லியோ படத்தை பார்த்த நரிக்குறவர் இன மக்கள் விசில் அடித்துக் கொண்டாடினர். லியோ படத்தை பார்த்து விட்டு, திரையரங்கை விட்டு வெளியே வந்த அவர்களுக்கு, விஜய் மக்கள் இயக்கம் சார்பாக உணவு வழங்கப்பட்டது. 

அப்போது பேசிய நரிக்குறவர் இன மக்கள், விஜய் அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக அவருக்கு தான் வாக்களிப்போம் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். லியோ படத்துக்கு கலவையான விமர்சனங்கள் இருந்தாலும், விஜய்க்கு பேமிலி ஆடியன்ஸ், குழந்தைகள் என தனி ரசிகர் பட்டாளமே உள்ளதால் அனைவரும் விடுமுறை தினத்தை கொண்டாட தியேட்டருக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

குவியும் வசூல்:

இப்படி உலகம் முழுவதும் விஜய் ரசிகர்களால் கொண்டாடப்படும் லியோ படம் முதல் நாளில் முதல் நாளில் உலகளவில் ரூ.148.5 கோடி வசூலை பெற்றதாக செவன் ஸ்க்ரீன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அதை தொடர்ந்து இரண்டாவது நாளான இன்று தமிழ்நாட்டில் ரூ.24 கோடியும், கேரளாவில் ரூ.6 கோடி, கர்நாடகாவில் ரூ.4.50 கோடி, ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ரூ.6 கோடி, இந்தியில் ரூ. 2 கோடி என இந்தியாவில் மட்டும் ரூ.42 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் படிக்க: Sandy Master : க்ளோஸ் சீன்ல நடிக்க பயமா இருந்துது.. டெவில் சவுண்ட் பிளே பண்ணி கேட்பேன்: 'லியோ' சாண்டி

Thalapathy 68: எதிர்பார்க்கவே இல்ல! விஜய்க்கு வில்லனாகும் வெள்ளிவிழா நாயகன்! யார் தெரியுமா?

 

Continues below advertisement
Sponsored Links by Taboola