தனது தாய்க்காக பாலிவுட் நடிகர் அமீர்கான் சென்னைக்கு தற்காலிகமாக குடியேற உள்ளதாக தெரிவித்துள்ளார். பாலிவுட்டில் ஸ்டார் நடிகராக இருக்கும் அமீர்கான் தனது நடிப்பை தாண்டி குடும்பத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கும் நபராக வலம் வருபவர். குறிப்பாக அவருடைய தாய் ஜீனத் உசேன் மீது மிகுந்த பாசம் கொண்டவராக இருக்கும் அமீர்கான் அண்மையில் முக்கியமான முடிவு ஒன்றை எடுத்துள்ளார். 


உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சை எடுத்து வருகிறார் ஜீனத் உசேன். கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஜூனத் உசேனுக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் மும்பையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், அவருக்கு மேலும் சிகிச்சை தேவைப்படுவதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


இதனால் அமீர்கான் தற்காலிகமாக சென்னையில் குடியேற இருப்பதாக தெரிவித்துள்ளார். தனது தாய்க்கு அருகில் இருந்து சேவை செய்ய வேண்டும் என்பதால் மருத்துவமனை அருகிலேயே ஹோட்டல் ஒன்றில் இரண்டு மாதங்கள் தங்க முடிவெடுத்துள்ளதாக அமீர்கான் கூறியுள்ளார். இது தொடர்பாக நேர்க்காணல் ஒன்றில் பேசியுள்ள அவர், சினிமாவில் இருந்து சில காலம் ஓய்வு எடுத்து கொண்டு தாய் மற்றும் மூன்று குழந்தைகளான ஜூனைய்டு, இரா மற்றும் அசத் ஆகியோரை கவனித்து கொள்ள இருப்பதாக கூறியுள்ளார். 


மேலும் லால் சிங்க சந்த் படத்திற்கு பிறகு சாம்பியன்ஸ் படத்தில் நடிக்க இருப்பதாக நினைத்ததாகவும், கதை அழகானது என்றும் கூறியுள்ள அமீர்கான், தற்போது குடும்பத்தின் மீது கவனம் செலுத்த உள்ளதால் அந்த படத்தில் நடிக்கவில்லை என அமீர்கான் கூறியுள்ளார். ஜீனத் உசேனுக்கு சிகிச்சை முடிந்த பின்னர், சிதாரே ஜமீன் பர் என்ற படத்தை தயாரித்து நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக 2007ம் ஆண்டு வெலிவந்த தாரே ஜமீன் பர் என்ற படத்தை அமீர்கான் இயக்கி இருந்தார். 


மேலும் படிக்க: Rolex: ஹரோல்டு தாஸின் மகனா ரோலக்ஸ்? லோகேஷ் கனகராஜின் எல்.சி.யு.வில் அடுத்து என்ன?


LCU Timeline: லோகேஷ் கனகராஜின் LCU டைம்லைன்; கதை எங்கு, யாரிடம் தொடங்குகிறது? எப்படி இணைக்கப்பட்டுள்ளது?