LEO Review: லோகேஷ் யுனிவர்ஸில் வில்லாதி வில்லனான விஜய்.. எப்படி இருக்கு லியோ படம்.. முழு விமர்சனம் இங்கே!


காஷ்மீரில் தனது மனைவி சத்யா, மகன் மற்றும் மகள் ஆகியோருடன் மகிழ்ச்சியாக வாழ்வை கழித்து வருகிறார் பார்த்திபன். ஒரு பக்கம் விலங்கு நல ஆர்வலர், மறுபுறம் காபி ஷாப் பிசினஸ் என அமைதியான மனிதராக இருக்கும் பார்த்திபன், தன் குடும்பத்தினர் மீது கைவைத்தால் கொலைவெறி கொண்ட மனிதராக மாறி விடுகிறார். அப்படி ஒரு திருட்டு கும்பலுடன் மோத போய் அவரது புகழ் இந்தியா முழுவதும் பரவுகிறது. மேலும் படிக்க


Leo HD print Leaked : அதுக்குள்ள 'லியோ' ஹெச்டி பிரிண்ட் லீக் ஆயிடுச்சா? சில நிமிடங்களில் இணையத்தில் வெளியான லைவ் வீடியோ...  


மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் இரண்டாவதாக கூட்டணி சேர்ந்த 'லியோ' திரைப்படம் அக்டோபர் 19ம் தேதியான இன்று ஏகப்பட்ட விதிமுறைகளுக்கு பிறகு கோலாகலமாக உலகெங்கிலுமுள்ள திரையரங்குகளில் வெளியானது. இதுவும் லோகேஷ் கனகராஜின் சினிமாட்டிக் யுனிவர்ஸின் ஒரு பகுதியாக இருக்குமா என்பதை பற்றி தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக இருந்தார்கள் திரை ரசிகர்கள். மேலும் படிக்க


Baakiyalakshmi : நெஞ்சு வலியில் சரிந்து விழுந்த கோபி... ஈஸ்வரி இனியா எடுத்த அதிரடி முடிவு... அதிர்ச்சியில் பாக்கியலட்சுமி குடும்பம்  


விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) தொடரின் இன்றைய (அக்டோபர் 19) எபிசோடில் கோபியை அழைத்து கொண்டு மயூவும் ராதிகாவும் நகை கடைக்கு செல்கிறார்கள். கடைக்கு சென்ற கோபி ராதிகாவிடம் சிம்பிளா ஏதாவது நகை எடுக்கலாம் என சொல்ல பிடிவாதமாக ராதிகா இல்லை பெரிய கிப்ட்டாக வாங்கி கொடுத்து அசத்த வேண்டாமா அதனால கிராண்டாக தான் எடுக்கணும் என அடம் பிடிக்கிறாள். அந்த நகையின் விலையை கேட்ட கோபி அப்படி ஷாக்காகி நெஞ்சை பிடித்து கொண்டு அப்படியே கீழே விழுந்து விடுகிறார். மேலும் படிக்க


Vijay Makkal Iyakkam: செங்கல்பட்டில் பெண்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய் ரசிகர்கள்


இந்நிலையில் வழக்கமாக முதல் நாள் காட்சிகள் அனைத்தும் பெரும்பாலான ஆண் ரசிகர்கள் படம் பார்க்கும் நிலையில் தற்போது, முதல் முறையாக செங்கல்பட்டு எஸ்.ஆர்.கே திரையரங்கத்தில் ஒரு காட்சி முழுவதும் பெண்களுக்கு என ஒதுக்கப்பட்டு உள்ளது. காலை 9-மணிக்கு முதல் காட்சி துவங்கும் நிலையில்,  இரண்டாவது காட்சியான 12.30 காட்சியில் சுமார் 250-டிக்கெட்டுகளை மகளிர் அணி உறுப்பினர்கள் சேர்ந்த பெண்களுக்காக ஒதுக்கி உள்ளனர். மேலும் படிக்க

 


LEO Box Office Prediction: “எல்லா ஊரும் நம்ம ரூல்ஸ்” .. லியோ படத்தின் முதல் நாள் கலெக்‌ஷன் இவ்வளவா? .. ஆச்சரியத்தில் ரசிகர்கள்..!


சென்னையில் மட்டும் நாள் ஒன்றுக்கு 1500 காட்சிகள் திரையிடப்படுகிறது. வரும் அக்டோபர் 24 ஆம் தேதி வரை தொடர் விடுமுறை வருவதால் கலெக்‌ஷன் எகிறப்போவது நிச்சயம். இதன் காரணமாக இந்திய அளவில் லியோ படத்தின் முதல் நாள் கலெக்‌ஷன் மட்டும், சுமார் 130 கோடி வரும் என கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது தென்னிந்தியாவில் மட்டும் இந்த படம் முதல் நாளில் 3 ஆயிரம் காட்சிகள் திரையிடப்படவுள்ளது. அதிக கட்டணம் கொண்ட ஐமேக்ஸ் தியேட்டர்களில் கூட ஒரு வாரத்திற்கு டிக்கெட்டுகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் படிக்க