விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) தொடரின் இன்றைய (அக்டோபர் 19) எபிசோடில் கோபியை அழைத்து கொண்டு மயூவும் ராதிகாவும் நகை கடைக்கு செல்கிறார்கள். கடைக்கு சென்ற கோபி ராதிகாவிடம் சிம்பிளா ஏதாவது நகை எடுக்கலாம் என சொல்ல பிடிவாதமாக ராதிகா இல்லை பெரிய கிப்ட்டாக வாங்கி கொடுத்து அசத்த வேண்டாமா அதனால கிராண்டாக தான் எடுக்கணும் என அடம் பிடிக்கிறாள். அந்த நகையின் விலையை கேட்ட கோபி அப்படி ஷாக்காகி நெஞ்சை பிடித்து கொண்டு அப்படியே கீழே விழுந்து விடுகிறார். அவரை உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார்கள்.
டாக்டர் கோபிக்கு சிகிச்சை அளிக்கிறார். "அவர் நார்மலாக தான் இருக்கிறார். எல்லா டெஸ்டும் எடுத்தாச்சு. ஒன்னும் பிரச்சினை இல்லை. வீட்டில் ஏதாவது பிரச்சினையா?" என்கிறார் டாக்டர். "நகைக்கடைக்கு போய் இருந்தோம். திடீர்ன்னு மயக்கம் போட்டு விழுந்துட்டாரு" என ராதிகா சொல்ல. "வெறும் பேனிக் அட்டாக் தான். அவர் ஸ்ட்ரெஸ் ஆகாம பார்த்துகிட்டே போதும்" என்கிறார் டாக்டர்.
ஈஸ்வரியின் கனவில் கோபிக்கு ஏதோ ஆகிவிட்டது போல கனவு கண்டு அதிர்ச்சி அடைந்து உடனே கோபிக்கு போன் செய்கிறார். போனை எடுத்த கோபி "நான் ஹாஸ்பிடலில் இருக்கிறேன். கடைக்கு போன இடத்தில் நெஞ்சு வலி வந்து மயக்கம் போட்டு விழுந்து விட்டேன்" என்கிறார். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஈஸ்வரி " என்ன நெஞ்சு வலியா" என பதறி போய் அழுது துடிக்கிறார். "நான் உடனே கோபியை பார்க்கணும்" என அழுது புலம்புகிறார். அனைவரும் ஆறுதல் சொல்கிறார்கள் ஆனாலும் ஈஸ்வரி கோபியை நினைத்து நினைத்து அழுகிறார். இனியாவும் டாடியை பார்க்க வேண்டும் என அழுகிறாள்.
ஈஸ்வரி அழுவதை பார்த்து என்ன நடந்தது என தெரிந்து கொள்ள கோபிக்கு போன் செய்கிறான் செழியன். கோபியின் போனை ராதிகா எடுத்து பேசுகிறாள். "அவருக்கு ஒன்னும் இல்லை. நாங்கள் வீட்டுக்கு தான் வந்து கொண்டு இருக்கிறோம். அவங்களை பயப்பட வேண்டாம் என சொல்லுங்க" என சொல்கிறாள் ராதிகா.
"அவருக்கு ஒன்னும் இல்லயாம். வீட்டுக்கு தான் கூட்டிட்டு போய்கிட்டு இருக்காங்களாம்" என செழியன் சொல்ல "யாரு அவ சொன்னாளா? நான் கண்டிப்பா கோபியை பார்த்து தான் ஆக வேண்டும்" என்கிறார் ஈஸ்வரி. இனியாவும் "வாங்க பாட்டி நாம போகலாம்" என பிடிவாதமாக செல்ல அவர்களை ராதிகா வீட்டுக்கு அழைத்து செல்கிறான்செழியன். அத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) எபிசோட் முடிவுக்கு வந்தது.