செங்கல்பட்டில் ஒரு காட்சி முழுவதும் இலவசமாக பெண்களுக்கு ஒதுக்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்
லியோ திரைப்படம்
நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. மற்ற மாநிலங்களில் நள்ளிரவு 12-மணி, அதிகாலை 4-மணி காட்சிகள் திரையிடப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் காலை 9-மணி முதல் லியோ திரைப்படத்தின் காட்சிகள் வெளியாக உள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
செங்கல்பட்டில் ஒரு காட்சி முழுவதும் இலவசமாக பெண்களுக்கு ஒதுக்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்
பெண்களுக்கு என தனி காட்சி
இந்நிலையில் வழக்கமாக முதல் நாள் காட்சிகள் அனைத்தும் பெரும்பாலான ஆண் ரசிகர்கள் படம் பார்க்கும் நிலையில் தற்போது, முதல் முறையாக செங்கல்பட்டு எஸ்.ஆர்.கே திரையரங்கத்தில் ஒரு காட்சி முழுவதும் பெண்களுக்கு என ஒதுக்கப்பட்டு உள்ளது. காலை 9-மணிக்கு முதல் காட்சி துவங்கும் நிலையில், இரண்டாவது காட்சியான 12.30 காட்சியில் சுமார் 250-டிக்கெட்டுகளை மகளிர் அணி உறுப்பினர்கள் சேர்ந்த பெண்களுக்காக ஒதுக்கி உள்ளனர்.
திரையரங்கு வாசலில் மகிழ்ச்சியாக குத்தாட்டம் போட்ட பெண்கள் மற்றும் விஜய் மக்கள் இயக்கத்தினர்
செங்கல்பட்டு மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர் சூரிய நாராயணன் தலைமையில், செங்கல்பட்டு மாவட்ட தொண்டரணி தலைவர் எம்..எஸ். பாலாஜி தலைமையில், இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மேலும் அனைத்து டிக்கெட்டுகளும் பெண்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.
குத்தாட்டம் போட்ட பெண்கள்
முன்னதாக, விஜய் மக்கள் இயக்கம் மற்றும் விஜய் ரசிகர்கள் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேண்ட் இசைக்கு ஏற்ப இளம் பெண்கள் மற்றும் விஜய் மக்கள் இயக்கம் மகளிர் அணியினர் குத்தாட்டம் போட்டனர். பெண்கள் குத்தாட்டம் போட்டதை பார்த்த விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகிகள் மற்றும் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்து அவர்களும் இணைந்து பேண்ட் வாத்தியத்திற்கு ஏற்ப நடனம் ஆடினர்.
செங்கல்பட்டில் ஒரு காட்சி முழுவதும் இலவசமாக பெண்களுக்கு ஒதுக்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்
வெற்றி திரையரங்கம்
தற்போது லியோ படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களுடம் படத்தை பார்க்க திரையரங்கத்திற்கு சென்றுள்ள வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே படக்குழுவினர் ரசிகர்களுடன் படங்களை பார்க்க ரோகிணி திரையரங்கத்திற்கு செல்வது வழக்கம். சமீபத்தில் லியோ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டின்போது அதிகப்படியான கூட்ட நெரிசல் காரணமாக திரையரங்கத்தின் சீட்டுகள் சேதமடைந்தன. இதனைத் தொடர்ந்து லியோ திரைப்படம் ரோகிணி திரையரங்கத்தில் திரையிடப்படாது என்று அறிவித்தது. இதனால் ரசிகர்கள் வருத்தமடைந்தார்கள். நேற்று சென்னையில் லியோ படத்திற்காக பத்திரிகையாளர்களை சந்தித்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தான் வெற்றி திரையரங்கத்தில் படத்தை பார்க்க இருப்பதாக தெரிவித்திருந்தார். தற்போது இன்று வெற்றி திரையரங்கத்தில் லோகேஷ் கனகராஜ், அனிருத், மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியவர் லியோ திரைப்படத்தை பார்க்க வந்தனர். அப்போது அங்கு திரண்டிருந்த ரசிகர்கள் அவரைப் பார்த்ததும் உற்சாகத்தில் கூச்சலிட்டார்கள்.