நடிகர் விஜய் நடித்துள்ள லியோ(LEO) படம் முதல் நாளில் எவ்வளவு வசூலை பெறும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 


தமிழ் திரையுலகம் மட்டும் இல்லாமல் இந்திய திரையுலகமே தற்போது பரபரப்பாக பேசிவரும் திரைப்படம் என்றால் அது லியோ தான். நடிகர் விஜய் மட்டும் இல்லாமல் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், மடோனா செபாஸ்டியன், கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், இயக்குநர் மிஷ்கின், பிரியா ஆனந்த், பாபு ஆண்டனி, மேத்யூ தாமஸ், அனுராக் காஷ்யப், அபிராமி வெங்கடாச்சலம்  என இந்திய சினிமாவின் பெரும் நட்சத்திரப் பட்டாளத்தை வைத்து இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் இன்று (அக்டோபர் 19ஆம் தேதி) உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. 


இந்த படத்திற்கு நாளுக்கு நாள் விஜய்ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரிப்பதைக் காட்டிலும்,  சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது. படத்தின் டிக்கெட் முன்பதிவு கடந்த அக்டோபர் 12 ஆம் தேதி தொடங்கியது. கிட்டதட்ட ஒரு வார காலத்திற்கு டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டது. பல இடங்களில் டிக்கெட்டுகள் கிடைக்காமல் ரசிகர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அதேசமயம் பல இடங்களில் டிக்கெட்டுகள் வெளிச்சந்தையில் அதிக விலைக்கு விற்கப்பட்டு வருகின்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 


இப்படியான நிலையில் லியோ படத்துக்கு அதிகாலை 4 மற்றும் காலை 7 மணி காட்சிகள் கேட்டு தயாரிப்பு நிறுவனம் தமிழ்நாடு அரசு மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடிய நிலையில், அந்த கோரிக்கை நிறைவேறவில்லை. இதனால் தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு தான் முதல் காட்சி திரையிடப்படுகிறது. அதேசமயம் கேரளா மற்றும் கர்நாடகாவில் காலை 4 மணிக்கு சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இதனால் தமிழ்நாடு ரசிகர்கள் சம்பந்தப்பட்ட மாநிலங்களில் உள்ள ஊர்களுக்கு படையெடுத்தனர். 


இப்படியான சென்னையில் மட்டும் நாள் ஒன்றுக்கு 1500 காட்சிகள் திரையிடப்படுகிறது. வரும் அக்டோபர் 24 ஆம் தேதி வரை தொடர் விடுமுறை வருவதால் கலெக்‌ஷன் எகிறப்போவது நிச்சயம். இதன் காரணமாக இந்திய அளவில் லியோ படத்தின் முதல் நாள் கலெக்‌ஷன் மட்டும், சுமார் 130 கோடி வரும் என கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது தென்னிந்தியாவில் மட்டும் இந்த படம் முதல் நாளில் 3 ஆயிரம் காட்சிகள் திரையிடப்படவுள்ளது. அதிக கட்டணம் கொண்ட ஐமேக்ஸ் தியேட்டர்களில் கூட ஒரு வாரத்திற்கு டிக்கெட்டுகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | Leo Movie Leaked: ‘டைட்டில் கார்டு முதல் கிளைமேக்ஸ் வரை’ .. லியோ படத்தை வீடியோ எடுத்து வெளியிட்ட ரசிகர்கள்..!


ALSO Read | LEO Twitter Review: “விஜய் - லோகேஷ் கனகராஜின் தரமான சம்பவம்” .. லியோ படத்தின் ட்விட்டர் விமர்சனம் இதோ..!