மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் இரண்டாவதாக கூட்டணி சேர்ந்த 'லியோ' திரைப்படம் அக்டோபர் 19ம் தேதியான இன்று ஏகப்பட்ட விதிமுறைகளுக்கு பிறகு கோலாகலமாக உலகெங்கிலுமுள்ள திரையரங்குகளில் வெளியானது. இதுவும் லோகேஷ் கனகராஜின் சினிமாட்டிக் யுனிவர்ஸின் ஒரு பகுதியாக இருக்குமா என்பதை பற்றி தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக இருந்தார்கள் திரை ரசிகர்கள்.

லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், மன்சூர் அலி கான் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


 




திருட்டு வீடியோ கசிந்தது:



இன்று அதிகாலை 4 மணிக்கு 'லியோ' படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்டது. படம் திரையரங்குகளில் வெளியான சில மணி நேரங்களிலேயே அதன் திருட்டு வீடியோ இணையத்தில் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தியது.

தளபதி விஜய்யின் 'லியோ' திரைப்படத்தின் ஹெச்டி பிரிண்ட் வீடியோ ஒரு சில இணையதளங்களில் வெளியானதோடு போன் மூலம் சிலர் படத்தை நேரடியாகவும் திரையரங்குகளில் இருந்து ஒளிபரப்பி உள்ளனர் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் பிரீமியர் ஷோ திரையரங்க ரிலீசுக்கு ஒரு நாள் முன்னதாக வெளியான உடனே அது சோசியல் மீடியாவிலும் லீக்காகி உள்ளது.

காட்டு தீ போல பரவியது:


விஜய் - ஹைனா இடம்பெற்றுள்ள படத்தின் தொடக்க காட்சியை பலரும் திரையரங்கில் இருந்து வீடியோ எடுத்து பகிர்ந்துள்ளனர். ஒரு சில செகண்ட்ஸ் வரையில் கூட வீடியோ எடுக்கப்பட்டு இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ ஒரு சில வினாடிகளிலேயே காட்டு தீ போல பரவி விட்டது.

படத்தின் தயாரிப்பாளர்கள் வீடியோ பரவுவதை அதன் புழக்கத்தை கட்டுப்படுத்த தகுந்த தடுப்பு நடவடிக்கைகளை எடுத்த போதிலும் வீடியோ பரவி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

திரைப்பட கலைஞர்கள், தயாரிப்பாளர்களின் கடுமையான உழைப்பை பாதுகாக்கும் நோக்கத்தில் பிளாக் எக்ஸ் தனது பயனாளர்களிடம் இந்த வீடியோவை பகிர வேண்டாம் என்ற கோரிக்கையை போஸ்ட் மூலம் தெரிவித்துள்ளது.

விசுவல் ட்ரீட்:

  
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ள 'லியோ' திரைப்படம் ஒரு கிளாஸி கமர்சியல் ஆக்ஷன் என்டர்டெயின்மென்ட் திரைப்படம் . அற்புதமான ஆக்ஷன் சிக்வென்ஸ் ஸ்டண்ட் காட்சிகள் நிறைந்த இப்படத்தை திரையாங்கில் பார்த்து ரசிப்பது தான் சிறந்த ஒரு விசுவல் ட்ரீட்டாக இருக்கும்.

லியோ திரைப்படத்தை பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ பார்த்த ரசிகர்கள் பாஸிடிவான விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள். விஜய் ரசிகர்களுக்கு இப்படம் ஒரு திரை விருந்தாக அமைந்துள்ளது. தளபதி விஜய்யை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளார் லோகேஷ் கனகராஜ் என பாராட்டி வருகிறார்கள்.