அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ஸ்பாட்டில் சோகம்.. கலை இயக்குநர் திடீர் மரணம்..


நடிகர் அஜித்தின் விடா முயற்சி ஷூட்டிங்கிற்காக அசர்பைஜான் சென்றிருந்த கலை இயக்குநர் மிலன் மாரடைப்பால் உயிரிழந்த தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  துணிவு படத்துக்குப் பின்  நடிகர் அஜித்குமார் நடிப்பில் “விடா முயற்சி” படம் உருவாகியுள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். முதலில் விக்னேஷ் சிவன் இப்படத்தை இயக்குவார் என தெரிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் அவர் விலகினார். மேலும் படிக்க


“லியோ படத்துக்கு இங்கு மட்டுமே அதிகாலை 4 மணி காட்சிகள்” .. விஜய் ரசிகர்கள் கடும் அதிருப்தி..!


விஜய் நடித்துள்ள லியோ படத்தின் முதல் காட்சி கேரளாவில் அதிகாலை  4 மணிக்கு திரையிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.  மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் மீண்டும் இணைந்து பணியாற்றியுள்ள படம் லியோ. செவன் கிரீன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். படத்தில் த்ரிஷா, அர்ஜூன், மிஷ்கின், மேத்யூ தாமஸ், பாபு ஆண்டனி, ப்ரியா ஆனந்த், மடோனா செபாஸ்டியன், சஞ்சய் தத், அபிராமி வெங்கடாச்சலம், சாண்டி மாஸ்டர், கௌதம் மேனன், அனுராக் காஷ்யப், மன்சூர் அலிகான் என ஏகப்பட்ட பேர் நடித்துள்ளனர். மேலும் படிக்க


லால் சிங் சத்தா தோல்வி.. அமீர்கானுக்கு நீண்ட கடிதம் எழுதிய கரீனா கபூர்.. ஓராண்டுக்கு பின் வெளிவந்த உண்மை..!


லால் சிங் சத்தா படத்தின் தோல்விக்கு பிறகு நடிகை கரீனா கபூர், அப்படத்தின் ஹீரோவான அமீர் கானுக்கு நீண்ட கடிதம் ஒன்றை எழுதியதாக தெரிவித்துள்ளார்.  பாலிவுட்டில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 11 ஆம் தேதி இயக்குநர் அத்வைத் சந்தன் இயக்கத்தில் “லால் சிங் சத்தா” படம் வெளியானது. இந்த படத்தில் அமீர்கான். கரீனா கபூர், ஷாரூக்கான், நாக சைதன்யா. மோனா சிங் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். மேலும் படிக்க


உருக வைக்கும் தந்தை - மகள் அன்பு.. நெகிழ வைக்கும் காதல்.. ட்ரெண்டாகும் “ஹாய் நன்னா” டீசர்..!


நடிகர் நானி நடித்து வரும் “ஹாய் நன்னா” படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவர்ந்துள்ளது.  தமிழில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான “நான்  ஈ” படத்தின் மூலம் ரசிகர்களிடம் பரவலாக அறியப்பட்டவர் நானி. தமிழில் சில படங்கள் அவரது நடிப்பில் வெளியாகியிருந்தாலும், தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். நல்ல கதைக்களம் கொண்ட படங்களை தேர்வு செய்து வரும் நானியின் படங்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும் படிக்க


யூட்யூப்பில் 10 லட்சம் பார்வைகளை கடந்த டி.ஆர். பாடல்.. “பாட்டி சொல்லை தட்டாதே” படம் சாதனை..!


“பாட்டி சொல்லை தட்டாதே” படத்தில் டி.ராஜேந்தர் பாடிய "கோலி சோடா ரம்மு கலந்து  குடிக்கிறான்" என்ற பாடல் இணையத்தில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. எண்பதுகளில் எ.வி.எம் தயாரிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் “பாட்டி சொல்லை தட்டாதே”. மனோரமா பாட்டியாகவும், பாண்டியராஜன் பேரனாகவும்,ஊர்வசி,சில்க் ஸ்மிதா,அனந்தராஜ் நடித்து நகைச்சுவை திரைப்படமாக வெளிவந்து அன்றைய ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் படிக்க