Leo Release Time: “லியோ படத்துக்கு இங்கு மட்டுமே அதிகாலை 4 மணி காட்சிகள்” .. விஜய் ரசிகர்கள் கடும் அதிருப்தி..!
தமிழகத்தில் முதல் காட்சியை காலை 9 மணிக்கு தான் திரையிட வேண்டும் என அரசு தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.

Leo Release Time: விஜய் நடித்துள்ள லியோ படத்தின் முதல் காட்சி கேரளாவில் அதிகாலை 4 மணிக்கு திரையிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் மீண்டும் இணைந்து பணியாற்றியுள்ள படம் லியோ. செவன் கிரீன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். படத்தில் த்ரிஷா, அர்ஜூன், மிஷ்கின், மேத்யூ தாமஸ், பாபு ஆண்டனி, ப்ரியா ஆனந்த், மடோனா செபாஸ்டியன், சஞ்சய் தத், அபிராமி வெங்கடாச்சலம், சாண்டி மாஸ்டர், கௌதம் மேனன், அனுராக் காஷ்யப், மன்சூர் அலிகான் என ஏகப்பட்ட பேர் நடித்துள்ளனர்.
Just In




ஏற்கெனவே லியோ படத்தின் மூன்று பாடல்களும், கிளிம்ப்ஸ் புகைப்படங்களும் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தன. வரும் அக்டோபர் 19-ம் தேதி லியோ படம் ரிலீசாவதால் விடுமுறையை ஒட்டி, சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. தமிழகத்தில் முதல் காட்சி அதிகாலை 4 மணிக்கு திரையிடப்படும் என கூறப்பட்ட நிலையில், முதல் காட்சியை காலை 9 மணிக்கு தான் திரையிட வேண்டும் என தமிழக அரசு தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.
ஏற்கெனவே ஆபாச வார்த்தை, வன்முறை என லியோ படத்துக்கு அடுக்கடுக்கான சிக்கல்கள் ஏற்பட்டு வருவதால், படம் ரிலீஸின்போது அசம்பாவிதங்களை தடுக்க தனி சிறப்பு கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. லியோ படத்துக்கு தமிழகத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் ரசிகர்கள் அதிருப்தியில் இருந்து வந்தனர்.
இந்த நிலையில் கேரளா மற்றும் கர்நாடகாவில் லியோ படத்தின் முதல் காட்சி அதிகாலை 4 மணிக்கு திரையிடப்படும் என கூறப்பட்டுள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் ரிலீசாகும் லியோ படம் தென்னிந்தியாவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படம் ரிலீசாவதற்கு முன்பாகவே அமெரிக்கா, லண்டனில் லியோ டிக்கெட் விற்பனையாகி சாதனை படைத்து வருகிறது.
மேலும் படிக்க: Leo Vijay: இடது கை பழக்கம் கொண்டவரா லியோ... ரிலீசுக்கு முன்னாடியே படத்தின் ட்விஸ்ட்டை கண்டுபிடித்த ரசிகர்கள்!
Jigarthanda DoubleX: ஜிகர்தண்டா 2ம் பாகத்தின் உரிமத்தை கைப்பற்றிய உதயநிதி ஸ்டாலின்