ரசிகர்களே ஒரு குட் நியூஸ்! முதல் முறையாக இணையும் திரிஷா நயன்தாரா - யார் படத்தில் தெரியுமா? 


தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கன்னிகள் என்றால் அது எந்த சந்தேகமும் இன்றி திரிஷாவும் நயன்தாராவும் தான். இதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இருக்கவே முடியாது. இவர்கள் இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க வேண்டும் என்பது அவர்களது ரசிகர்களின் பல நாள் கனவாகவே இருந்தது. அந்த கனவு தற்போது நனவாக போகிறது என்ற சர்ப்ரைஸ் தகவல் ஒன்று வெளியாகி அவர்களின் ரசிகர்களை உற்சாகத்தில் துள்ள வைத்துள்ளது. மேலும் படிக்க


’கல்வியும் நேர்மையும் தான் மனிதனின் அடையாளம்’ .. உரக்க பேசிய “12th Fail” படம்.. முழு விமர்சனம் இதோ..!


இந்தியில் வெளியாகி தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகியுள்ள ‘12 ஆம் வகுப்பு ஃபெயில் (12th Fail)' படத்தின் விமர்சனத்தை இங்கு காணலாம். இந்த படத்தில் விக்ராந்த் மாஸ்ஸி, மேதா சங்கர், அன்ஷுமன் புஷ்கர், அனந்த் விஜய் ஜோஷி, கீதா அகர்வால், ஹரிஷ் கண்ணா, சரிதா ஜோஷி, விகாஸ் திவ்யாகீர்த்தி என பலரும் நடித்துள்ளனர். சாந்தனு மொய்த்ரா இசையமைத்துள்ள இப்படத்தை விது வினோத் சோப்ரா இயக்கியுள்ளார். மேலும் படிக்க


ரெட் கார்டுடன் வெளியேற்றப்பட்ட பிரதீப்! கவின் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு - என்ன சொன்னார் பாருங்க?


பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து போட்டியாளர்களில் ஒருவரான பிரதீப்(Pradeep) ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட நிலையில், அவரது நண்பரும் நடிகருமான கவின் இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  Bigg Boss Tamil 7: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து போட்டியாளர்களில் ஒருவரான பிரதீப்(Pradeep) ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட நிலையில், அவரது நண்பரும் நடிகருமான கவின் இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் படிக்க


நட்புக்காக களம் கண்ட ரஜினி.. காதலுக்காக உருகிய கமல்.. இன்றைய நாளில் நடந்தது என்ன?


தளபதி மற்றும் குணா ஆகிய இரண்டு படங்களும் வெளியாகி இன்றுடன் 32 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்த இரண்டு படங்களும் வெளியான சமயத்தை ஒரு சினிமா ரசிகருக்கு இந்த தருணம் எந்த மாதிரியானதாக இருந்திருக்கும் என்பது யோசித்து பார்ப்பது மிக சுவாரஸ்யமான ஒரு கற்பனை. அதுவும் ரஜினி மற்றும் கமல் ஆகிய இரு ஆளுமைகளின் படங்கள் என்றால் அது இரண்டு படங்கள் என்பதைக் காட்டிலும் தமிழ் சினிமாவின் இரண்டு வெவ்வேறு போக்குகளை புரிந்துகொள்வது. இந்த இரண்டில் ஒன்றில்லாமல் போனால் மற்றொன்றின் மதிப்பு குறைந்துவிடும். மேலும் படிக்க


லிவிங் டூ கெதர் வாழ்க்கைதான் இப்போ இருக்க புரிதலுக்கு காரணம்.. திருமண வாழ்வு பற்றி மாரி செல்வராஜ்!


தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக வலம் வரும் மாரி செல்வராஜ், நேர்க்காணல் ஒன்றில் தன் காதல் எப்படி கல்யாணம் வரை சென்றது என்பது குறித்து பேசியுள்ளார்.  இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக பணியாற்றி 2018ஆம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இந்தப் படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் படிக்க


விஜய் அரசியலுக்கு வர தகுதி இருக்கா... வெற்றிமாறன் அளித்த பளிச் பதில்!


சமூக ஊடகங்கள் தொடங்கி டீக்கடை வரை நடிகர் விஜய்யின் அரசியில் பிரவேசம் குறித்தான பேச்சுகள் நிறைந்திருக்கின்றனர். நடிகர் விஜய் (Vijay) அரசியல் வருகை குறித்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழ்நாட்டில் உள்ள 10-வது, 12-வது பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு ஊக்கத்தொகை, பரிசு, மகளிர் அணி, தனித்தனியே நிர்வாக குழுவினர் என விஜய் அரசியல் வருகை குறித்து சமீப காலமாக தீவிரம் காட்டி வருகிறார். மேலும் படிக்க