5 State Election: நாட்டில் அடுத்தாண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 5 மாநில தேர்தல்கள் 


சத்தீஸ்கர் மாநிலத்தில் நாளை மறுநாள் நவம்பர் 7 மற்றும் நவம்பர் 17ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.  அதேபோல, மிசோரம் மாநிலத்திலும் நவம்பவர் 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள் டிசம்பவர் 3ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.


சத்தீஸ்கர்  மாநிலம்:


பாஜகவின் கோட்டையாக இருந்த சத்தீஸ்கரில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர் பூபேஷ் பாகல் தற்போது முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். மத்திய பிரதேசத்தில் இருந்து சில பகுதிகளை பிரித்து உருவாக்கப்பட்ட மாநிலம்தான் சத்தீஸ்கர். மாநில மக்கள் தொகையில் 30 சதவிகிதத்தினர், பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர்கள். மாநிலம் உருவாக்கப்பட்டு முதல் மூன்று ஆண்டுகள் மட்டுமே காங்கிரஸ் கட்சியின் ஆட்சி அங்கு நடைபெற்றது.   2003ஆம் ஆண்டுக்கு பிறகு, 2018ஆம் ஆண்டு வரை, பாஜகவின் கோட்டையாக இருந்தது.


தொடர்ந்து மூன்று தேர்தல்களில் வெற்று பெற்று பாஜக ஆட்சி அமைத்தது. இப்படிப்பட்ட சூழலில், கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், 15 ஆண்டுகளுக்கு பிறகு, சத்தீஸ்கரில் ஆட்சியை கைப்பற்றியது காங்கிரஸ்.  இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் 20 தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இதற்கிடையில் இன்று மாலையுடன் தேர்தல் பரப்புரை முடிவடைகிறது. இதனால், அரசியல் தலைவர்கள் பலரும் கடைசி நாளான இன்று தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். 


மிசோரம்:


அதேபோல, வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் தற்போது மிசோ தேசிய முன்னணியின் ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் 37.7 சதவிகித வாக்குகளை பெற்று 26 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்தது. பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் 29.98 சதவிகித வாக்குகளுடன் 5 இடங்களை கைப்பற்றி இருந்தது. 


இந்நிலையில், மிசோரம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மிசோரம் மாநிலத்தில் மொத்தம் 1,276 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றல் 765 வாக்கு சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்ட வாக்குப்பதிவு கண்காணிக்கப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில், இன்று மாலையுடன் மிசோரம் மாநிலத்தில் தேர்தல் பரப்புரை ஓய்கிறது. இதனால், அரசியல் தலைவர்கள் பலரும் கடைசி நாளான இன்று தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். 




மேலும் படிக்க


சத்தீஸ்கரில் அடுத்த முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?


ABP - C Voter Opinion Poll: மத்திய பிரதேசத்தில் வெற்றி கொடி நாட்டுகிறதா காங்கிரஸ்? ஷாக்கான பாஜக