Muthu Re-release: ரஜினியின் பிளாக்பஸ்டர் படமான முத்து திரைப்படம் டிசம்பர் ரீ-ரிலீசாக உள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.


ரஜினியின் ஐம்பது ஆண்டு கால சினிமா வாழ்க்கையில் அவர் நடித்த தளபதி, சிவாஜி, அருச்சாலம், அண்மையில் வெளிவந்த ஜெயிலர் உள்ளிட்ட படங்கள் என்றென்றும் ரசிகர்கள் கொண்டாடும் சூப்பர் ஹிட் படங்கள். இதில் 1995ஆம் ஆண்டு திரைக்கு வந்து மெகா ஹிட் கொடுத்த முத்து படம் வரும் டிசம்பரில் மீண்டும் திரையிடப்பட உள்ளது. தென்மாவின் கொம்பத்து என்ற மலையாளப் படத்தின் ரீமேக்கான முத்து படத்தை கே.எஸ். ரவிக்குமார் இயக்கியுள்ளார். 


இதில் ரஜினியுடன் இணைந்து மீனா, சரத்பாபு, ராதா ரவி, ஜெயபாரதி, வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தில் ஜமீன்தாராராக சரத்பாபுவும் அவருக்கு வேலை செய்யும் கேரக்டரில் ரஜினியும் நடித்திருப்பார்கள். மீனா மேடை நாடகக் கலைஞராக நடித்திருப்பார். நகைச்சுவை, ஆக்‌ஷன், பாடல், பிளாஷ்பேக் உள்ளிட்ட அனைத்தும் கொண்ட முத்து படம் ரசிகர்களின் என்றைக்குமான பேவரைட் மூவியாக உள்ளது. முத்து படத்திற்கு இந்தியாவில் மட்டும் இல்லாமல்,  ஜப்பானிலும் அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர்.


இந்த நிலையில் டிசம்பர் மாதம் முத்து படம் ரீ ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  “முத்து ரீ-ரிலீஸ் டிசம்பர் 2023:  நான் வந்துட்டேன்னு சொல்லு. நான் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு” என படத்தின் தயாரிப்பு நிறுவனமான கவிதாலயா அறிவித்துள்ளது.  வரும் டிச.12ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய 73ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், பிறந்தநாள் பரிசாக இந்தப் படம் வெளியாக உள்ளது.






அண்மையில் ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படம் திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்றது. நெல்சன் இயக்கி இருந்த ஜெயிலர் படத்தில் மோகன்லா, ஜாக்கி ஷெராஃப், ரம்யாகிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஜெயிலர் படத்தை தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி இருக்கும் லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் ரஜினி நடித்துள்ளார். 


கிரிக்கெட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் லீட் ரோலில் நடித்துள்ளனர். இதைத் தொடர்ந்து டி.ஜே.ஞானவேல் இயக்கும் தலைவர் 170 படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.


இதில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியுடன் மீண்டும் அமிதாப் பச்சன் இணைந்து நடிக்கிறார். இவர்கள் மட்டும் இல்லாமல் தலைவர் 170 படத்தில் மஞ்சு வாரியர், பகத் பாசில், துஷாரா விஜய, ரித்திகா சிங் மற்றும் ராஜா ரகுபதி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். திருவனந்தபுரம், உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. 


மேலும் படிக்க: 32 Years Of Thalapathy - Guna: நட்புக்காக களம் கண்ட ரஜினி.. காதலுக்காக உருகிய கமல்.. இன்றைய நாளில் நடந்தது என்ன?


OTT Release November 2023: நவம்பர் மாதத்தில் ஓடிடியை கலக்கப்போகும் சூப்பர்ஹிட் படங்கள்.. முழு லிஸ்ட் இதோ..!