ஆரண்ய காண்டம், சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்களை இயக்கிய தியாகராஜ குமாரராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்தவர் அருண் மாதேஸ்வரன். இவர் வசந்த் ரவி, பாரதிராஜா உள்ளிட்டோரை வைத்து ராக்கி என்ற படத்தை இயக்கியுள்ளார். சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.
ராக்கி படம் மட்டுமின்றி செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் ஆகியோரை வைத்து அருண் மாதேஸ்வரன் சாணிக்காயிதம் என்ற படத்தையும் இயக்கியிருக்கிறார். இப்படமும் விரைவில் வெளியாக இருக்கிறது.
இதனையடுத்து தனுஷை வைத்து அருண் மாதேஸ்வரன் அடுத்த படத்தை இயக்கவிருக்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் சமீபத்தில் வெளியிட்டார்.
இந்நிலையில் தனுஷும், அருண் மாதேஸ்வரனும் இணையும் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சந்தோஷ் நாராயணன் ஏற்கனவே தனுஷ் நடித்த வடசென்னை, கர்ணன், ஜகமே தந்திரம் ஆகிய படங்களுக்கும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தனுஷ் தயாரித்த காலா படத்துக்கும் இசையமைத்திருக்கிறார்.
தற்போது தனுஷ் - அருண் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும்பட்சத்தில் தனுஷுடன் சந்தோஷ் நாராயணன் ஐந்தாவது முறையாக இணையும் படமாக இது இருக்கும். ஏற்கனவே தனுஷ் - சந்தோஷ் நாராயணன் கூட்டணியில் வெளியான பாடல்கள் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தகுந்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Watch Video: ஷூட்டிங் முடித்து தினமும் பத்து மைல் ஜாக்கிங்.. வைரலாகும் ஆர்யாவின் உடற்பயிற்சி வீடியோ..!
Meendum Manjapai: தமிழ்நாடு அரசின் மஞ்சள் பை விளம்பரத்தில் அசுரன் தனுஷ்?
Bigg Boss Memes: ’குழாய் அடி சண்டையா இருக்கே’ - வைரலாகும் பிக் பாஸ் மீம்ஸ்
Amala Paul: ‛புண்ணிய பூமியில் நானும் ஒருவள்...’ -‛தங்கம்’ கிடைத்த மகிழ்ச்சியில் அமலா பால்!