கேப்டன் பிரபாகரன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் மன்சூர் அலிகான். இவர் பல படங்களில் நடித்துள்ளார். வாய்ப்புகள் குறைந்த பிறகு அரசியலில் குதித்த இவர் நாம் தமிழர் கட்சி சார்பாக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டார். 


அதன் பிறகு கட்சியிலிருந்து விலகிய அவர் கடந்த சட்டபேரவைத் தேர்தலில் தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்து பின்னர் தேர்தலில் போட்டியிடாமல் விலகினார்.  இப்படி மன்சூர் அலிகான் அவ்வப்போது பேசுபொருளாக மாறுவார். தற்போது மீண்டும் அவர் பேசுபொருளாக மாறியிருக்கிறார். 




மறைந்த பழம்பெரும் நடிகை கே.டி. ருக்மணி. இவர் தமிழின் முதல் ஆக்‌ஷன் ஹீரோயின் ஆவார். அவரது சொத்துக்களை நிர்வகிக்க, உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இடைக்கால நிர்வாகியை நியமித்து, தமிழ்நாடு அரசின் சொத்தாட்சியர் கடந்த 1996ஆம் ஆண்டு உத்தரவிட்டார்.


அதன்படி ருக்மணிக்கு சொந்தமாக சென்னை தி. நகர் பத்மநாபன் தெருவில் இருக்கும் கட்டடம்  ஒன்றை பராமரிப்பது, அதனை வாடகைக்கு விட்டு வாடகை வசூலிப்பது, அத்துமீறி நுழைபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது போன்ற பல பணிகளை இடைக்கால நிர்வாகி செய்துவந்தார்.




இச்சூழலில் அந்த சொத்தை ஆய்வு செய்வதற்காக இடைக்கால நிர்வாகி அங்கு சென்றபோது 10 பேர் அந்த இடத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருந்தது தெரியவந்தது.


அதுமட்டுமின்றி, ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றிவிட்டு கட்டடத்தின் ஒரு பகுதியை இடித்துவிட்டு மன்சூர் அலி கான் மாற்றங்கள் செய்வதற்கு முயல்வதும் தெரியவந்தது.


இதனையடுத்து சொத்தாட்சி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நிர்வகிக்கப்படும் சொத்தை சேதப்படுத்துவது கண்டனத்திற்குரியது. சட்ட ரீதியான நடவடிக்கைக்கு உட்பட்டது எனவே மன்சூர் அலி கான் மிது தி. நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: ‛எனக்கு 3வதும் இல்லை... 4வதும் இல்லை...’ கணவர்கள் எண்ணிக்கை பற்றி மவுனம் கலைத்த அவதாரம் அன்னபூரணி!


Amala Paul: ‛புண்ணிய பூமியில் நானும் ஒருவள்...’ -‛தங்கம்’ கிடைத்த மகிழ்ச்சியில் அமலா பால்!


மாநாடு படக்குழுவிடம் மன்னிப்பு கேட்ட செல்வராகவன்... எதற்கு தெரியுமா?