நடிகர் ஆர்யா உடற்பயிற்சி மீது அதிக ஆர்வம் கொண்டவர் என்பது நாம் அறிந்ததே.  பள்ளிக்காலத்தில் இருந்தே உடற்பயிற்சியை தொடர்ந்து செய்து வரும் ஆர்யா, தான் செய்யும் உடற்பயிற்சி செய்யும், வீடியோ மற்றும் போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிடுவார். இவரை பார்த்து உடற்பயிற்சி மீது ஆர்வம் ஏற்பட்ட பலர் இன்று உடற்பயிற்சியை தங்களது அன்றாட வாழ்கை முறையாக மாற்றியுள்ளனர். 


இந்த நிலையில் இவரும், இயக்குநர் சக்தி செளந்தர் ராஜனும் கேப்டன் படப்பிடிப்பின் போது ஜாக்கிங் சென்றுள்ள வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அது தொடர்பான வீடியோவில், “ ஜாம்பியன் ரன்னர்.. ஹாய் என்று ஆர்யா கூறுகிறார். அதை தொடர்ந்து பேசும் இயக்குநர் சக்தி, கேப்டன் ஷூட்டிங்கில் இருந்து கேப்டன் ஆர்யா உடன் ஓடுகிறேன் என்கிறார். தொடர்ந்து பேசிய ஆர்யா ஃபிட் டைரக்டர் சக்தி ஷூட்டிங் முடிந்த ஒவ்வொரு நாளும் 10 மைல் ஓடுகிறார்” என்று கூறுகிறார். 


இயக்குநர் சக்தி செளந்தர் ராஜன் 2014 ஆம் வெளியான  நாணயம் படம் மூலம்  தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். தொடர்ந்து, நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக்,டிக்,டிக் உள்ளிட்டப் படங்களை இயக்கிய அவர் இறுதியாக ஆர்யா நடித்த டெடி படத்தை இயக்கியிருந்தார். தற்போது மீண்டும் ஆர்யாவுடன் கேப்டன் படத்தில் இயக்குநர் சக்தி கைகோர்த்துள்ளார். இந்தப்படத்திற்கு டி.இமான் இசையமைக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.