பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கத்ரீனா கைஃப். இவர் விக்கி கௌஷலை காதலித்துவந்தார். இவர்கள் இருவருக்கும் வரும் ஒன்பதாம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. இவர்களது திருமணமானது ராஜஸ்தான் மாநிலத்தின் மதோபர் மாவட்டத்தில் சவாய் என்ற இடத்தில் அமைந்திருக்கும் பழம்பெரும் கோட்டையான சிக்ஸ் சென்ஸில் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் பரபரத்துக்கொண்டிருக்கின்றன.


தங்களது திருமணத்துக்கு120 பேரை மட்டும் அவர்கள் அழைக்க இருப்பதாக கூறப்படுகிறது. திருமணத்திற்கு அழைக்கப்படவிருக்கும் 120 பேரும் கொரோனா தடுப்பூசியை இரண்டு டோஸ்களும் போட்டுக்கொண்டவர்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.




திருமணத்திற்கு முக்கிய பிரமுகர்கள் வருவார்கள் என்பதால் சட்டம் ஒழுங்கு குறித்து மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர கிஷன் உயர் அதிகாரிகளுடன் சில நாள்களுக்கு முன்பு ஆலோசனை மேற்கொண்டார். அந்த ஆலோசனையில் கத்ரீனா - விக்கியின் திருமண ஏற்பாடுகளை கவனிக்கும் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். கத்ரீனாவும் விக்கியும், அவர்களது குடும்பத்தினரும் கடந்த ஐந்தாம் தேதியே ஜெய்ப்பூர் சென்றுவிட்டனர்.


இந்நிலையில் கத்ரீனா கைஃப் மீதும் விக்கி கௌஷல் மீதும் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களது திருமணம் நடக்கும் இடத்தில் சௌத்த் மாதா மந்திர் என்ற புகழ்பெற்ற கோயில் அமைந்துள்ளது. 




அந்தக் கோயிலுக்கு வரும் பாதை இவர்களது திருமணம் காரணமாக அடைக்கப்பட்டிருப்பதாகவும், உடனடியாக அந்தப் பாதையை பக்தர்களுக்காக திறக்க வேண்டுமெனவும் அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வழக்கறிஞர் நேத்ரபிந்து சிங் என்பவர் இருவர் மீது மட்டுமின்றி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் மீதும் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: நடிகை ஜாக்குலினுக்கு பரிசளிக்கப்பட்ட 50 லட்சம் மதிப்புள்ள குதிரை, 9 லட்ச மதிப்புள்ள பூனை.. வெளியான தகவல்


Omicron and Oil Demand | ஓமிக்ரான் பரவல், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை சரிவு - எப்படி புரிந்துகொள்வது?


பாலியல் தொழில் விடுதி என்றால் என்ன? மகள் கேட்ட கேள்வியால் அதிர்ந்த பிரபல நடிகர் லாரா தத்தா..


Nagaland Civilians Killed: நாகலாந்தில் பயங்கரவாதிகள் என நினைத்து 12 பொதுமக்கள் சுட்டுக்கொலை: நடந்தது என்ன?


வாகன பதிவு எண்ணில் SE X சீரிஸ்.! பாதிக்கப்பட்ட இளம்பெண் - தலையிட்ட தேசிய மகளிர் ஆணையம் !