நாகலாந்தில் பயங்கரவாதிகள் என நினைத்து பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், பொதுமக்கள் 12 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில், முதலமைச்சர் நெய்பியு ரியோ தலைமையிலான தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தின் மியான்மர் எல்லைப் பகுதியில் உள்ளது மோன் மாவட்டம். இந்த மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணி முடித்து விட்டு, நேற்று, ஒடிங் - திரு என்ற சாலையில் வேன் ஒன்றில் வீடு திரும்பி கொண்டு இருந்தனர்.


அப்போது பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினர் தொழிலாளர்கள் வந்த வேனை தீவிரவாதிகள் எனக்கருதி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் 12 பேரும் ராணுவ வீரர் ஒருவரும் கொல்லப்பட்டனர். 




இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. கிராம மக்கள் பாதுகாப்பு படையினரை சுற்றி வளைத்து தாக்குதலில் ஈடுபட்டனர். 


இதையடுத்து இதுகுறித்து அம்மாநில முதலமைச்சர் நெய்பியு ரியோ கூறுகையில், “இந்த சம்பவம் துர்திஷ்டவசமானது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும். உயர்மட்டக்குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார். 


 






இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா “இந்த சம்பவத்தை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். இச்சம்பவம் தொடர்பாக மாநில அரசு உயர் மட்ட அளவிலான சிறப்பு விசாரணைக்குழு அமைத்து விரிவான விசாரணை நடத்தி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்க வழி செய்யும்” என குறிப்பிட்டுள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண