அமலாக்கத் துறை 200 கோடி ரூபாய் பணமோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் சுகேஷ் சந்திரசேகர், அவருடைய மனைவி லீனா மரியா பால் மற்றும் இன்னும் ஆறு பேர் மீது 7000 பக்கங்கள் நிரம்பிய குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறது. விசாரணையின்போது நடிகர் ஜாக்குலின் ஃபெர்னான்டஸுக்கு 52 இலட்சம் மதிக்கத்தக்க குதிரையும் 9 இலட்சம் மதிக்கத்தக்க பெர்சியன் பூனையும் பரிசாகக் கொடுத்ததாக சந்திரசேகர் ஒப்புக்கொண்டுள்ளார். நடிகர் நோரா ஃபதேஹியின் பெயரும் இந்த சர்ச்சையில் அடிபடுகிறது. அவருக்கு மோசடி குற்றம் சாட்டப்பட்டுள்ள சந்திரசேகர் விலைமதிப்பு வாய்ந்த கார் ஒன்றைப் பரிசளித்திருப்பதாகக் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருவரையுமே அமலாக்கத் துறை விசாரித்திருக்கிறது.



முன்னமே நோரா இந்த பண மோசடிக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அறிக்கை வெளியிட்டுள்ளார். ‘நோரா ஃபதேஹி இந்த வழக்கில் சாட்சி மட்டுமே. முழுக்க முழுக்க அமலாக்கத் துறைக்கு இந்த வழக்கில் உதவ மட்டுமே அவர் விசாரிக்கப்படுகிறார். இந்த பணமோசடிக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. குற்றம் சாட்டப்பட்டவருக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை’ என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  


விசாரணையின் போது நோரா, சந்திரசேகர் வீட்டில் நடந்த நிகழ்வு ஒன்றுக்கு அவருடைய மனைவியால் அழைக்கப்பட்டதாகவும் அப்போது அவருக்கு விலை மதிப்பு வாய்ந்த கார் ஒன்று பரிசளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கடந்த ஆகஸ்ட்டில் டெல்லியைச் சேர்ந்த பொருளாதாரக் குற்றப் பிரிவு காவல் துறையால் சந்திரசேகர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இந்த தகவல் அறிக்கையின் அடிப்படையில் அமலாக்கத் துறை அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது.


சந்திரசேகரின் மனைவி பாலின் முன்னேற்பாட்டின் படி பணம் மறைத்துவைக்கப்பட்டதாக அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது. சந்திரசேகர் மற்றும் அவர் சம்பந்தப்பட்டவரின் இடங்களில் தேடல் நடந்ததாகவும் அப்போது ஆறு விலைமதிப்பு வாய்ந்த கார்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்திருக்கிறது.   


மேலும் படிக்க...


Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..


இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..


Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?


Mental Health | தினமும் Exercise பண்ணுவீங்களா? உங்க மனநலன் பத்தி ஆய்வு சொல்வது என்ன தெரியுமா? ஹெல்த் முக்கியம் பாஸ்..


முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!


Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..


மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்