'ஆபரேஷன் பரிவர்த்தனா’ என்ற பெயரில் ஆந்திர மாநிலத்தில் கஞ்சா ஒழிப்பு மிகத்தீவிரமாக நடைபெற்று வருகிறது. சேட்டிலைட் படங்கள் மற்றும் ட்ரோன்களின் உதவியோடு காவல்துறை, வருவாய் மற்றும் வனத் துறைகள், ஐடிடிஏ (ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டு நிறுவனம்) மற்றும் சிறப்பு அமலாக்கப் பணியகம் (SEB) ஆகியவற்றின் அதிகாரிகள் கஞ்சா சாகுபடியைக் கண்டறியும் பணியில் ஈடுபடுவார்கள்.
இந்த ஆபரேஷன் பரிவர்த்தனா மூலம் இதுவரை 5964 ஏக்கர் நிலத்தில் பயிரடப்பட்ட கஞ்சா சாகுபடியை போலீசார் கண்டுபிடித்து அழித்துள்ளனர். இது வெறும் 36 நாட்களில் நடந்த அதிரடி நடவடிக்கையாகும். இதுவரை அழிக்கப்பட்ட மொத்த கஞ்சா சாகுபடியின் மதிப்பு மட்டுமே ரூ.1491 கோடி ஆகும். இந்த நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஆந்திர மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.
கோச் ஆன தருணம்.. பயங்கர நெருக்கடி... மனம் திறந்த ரவிசாஸ்திரி !
முன்னதாக, அக்டோபர் மாதம் இறுதியில் 'ஆபரேஷன் பரிவர்த்தனா’ தொடங்கப்பட்ட முதல் நாளே, விசாகப்பட்டினத்தில் ஜி மடுகுலா மண்சல் அருகே உள்ள கிராமங்களில் 80 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகள் அழிக்கப்பட்டன.
பாரில் ரகளை: சமையல் கலைஞர் டாடி ஆறுமுகம் மகன் உள்ளிட்ட 3 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி!
இது குறித்து பேசிய SEB கமிஷனர் வினீத் பிரிஜ்லால் தி, இதேபோன்ற நடவடிக்கைகள் ஏஜென்சிகளால் பகுதியில் அடையாளம் காணப்பட்ட அனைத்து இடங்களிலும் நடத்தப்படும் என்றும் அங்கு கஞ்சா தோட்டம் அல்லது கஞ்சா இருந்தால் அவை படிப்படியாக அழிக்கப்படும். கஞ்சா பயிரிடப்படும் பகுதிகளை கண்டறிய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றார்.
தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் ஆந்திராவில் இருந்து சட்ட விரோதமாக கஞ்சா கொண்டு செல்லப்படுகிறது. பல வாகன சோதனைகளில் கஞ்சா சிக்குவதும், அது ஆந்திராவில் இருந்து வருவதும் வாடிக்கையாகவே இருந்தது. இதனை அடுத்தே ஆந்திராவில் கஞ்சா பெருமளவில் பயிரப்படுவதாக தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் அம்மாநில அரசு தீவிர கஞ்சா ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது
அடிக்கடி ஏடிஎம்மில் பணம் எடுப்பவரா? இதை கவனியுங்கள்.. ஜனவரி 1 முதல் கட்டண உயர்கிறது!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்