Cinema Headlines: லால் சலாம் புதிய ரிலீஸ் தேதி.. வார்னிங் தந்த தில் ராஜூ.. இன்றைய சினிமா செய்திகள்!

Cinema Headlines: தமிழ் திரையுலகில் இன்று ஜனவரி 8ஆம் தேதி நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.

Continues below advertisement

"விக்ரமுக்கு நடிக்க தெரியாது" தேவயானி கணவர் பேட்டியால் அதிர்ச்சி - கொந்தளித்த ரசிகர்கள்!

விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தில் நடிகர் விக்ரமுக்கு க்ளோஸ் அப் ஷாட் வைத்தபோது அவருக்கு ரியாக்‌ஷன் கொடுக்கத் தெரியவில்லை என்று இயக்குநர் ராஜகுமாரன் தெரியவில்லை. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விக்ரம். சேது , பிதாமகன், அந்நியன், ராவணன் ,  தெய்வத்திருமகள் என தனது சினிமா கரியரில் பல்வேறு மாறுபட்ட கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக அனைவரையும் மிரள வைத்தார். மேலும் படிக்க

Continues below advertisement

விஜய் சேதுபதி இந்தி படங்களில் நடிக்கலாமா? இந்தி தயாரிப்பாளரிடம் சம்பளம் வாங்கலாமா? அண்ணாமலை கேள்வி

இந்தியை திணிக்காதீர்கள் என்ற விஜய் சேதுபதியின் பேச்சுக்கு, பாஜக மாநில தலைவர் இந்தி தயாரிப்பாளரிடம் சம்பளம் வாங்கலாமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.  ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் நடித்து உருவாகி இருக்கும் படம் மெரி கிறிஸ்துமஸ். தமிழ் மற்றும் இந்தி என இரு மொழிகளில் உருவாகி இருக்கும் இந்தப் படம் வரும் ஜனவரி 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது. மேலும் படிக்க

பாலிவுட் திரையுலகில் சோகம்.. புற்று நோயுடன் போராடி வந்த இசைக் கலைஞர் காலமானார்!

பிரபல இசைக்கலைஞரான உஸ்தாத் ரஷித் கான் புற்று நோயுடன் போராடி வந்த நிலையில், இன்று உயிரிழந்தார் . அவருக்கு வயது 55. இந்தியாவில் பிரபலமாக அறியப்படும் இந்துஸ்தானி இசைக்கலைஞர்களில் ஒருவராகக் கருதப்படுபவர் உஸ்தாத் ரஷித் கான். பத்மஸ்ரீ, சங்கீத நாடக அகாடமி விருது உள்ளிட்ட பெருமைக்குரிய பல விருதுகளை இவர் வென்றுள்ளார். இந்துஸ்தானி இசை நிகழ்ச்சிகளைத் தவிர்த்து திரையிசைப் பாடல்களும் பாடியுள்ளார். மேலும் படிக்க

தோல உரிச்சுடுவேன்.. மீடியாக்களுக்கு வார்னிங் கொடுத்த விஜய் பட தயாரிப்பாளர்! நடந்தது என்ன?

வாரிசு பட வெளியீட்டின் போது கோலிவுட்டின் நம்பர் 1 நடிகர் விஜய் எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தி தமிழ் ரசிகர்களிடம் பரிச்சயமானவர் தயாரிப்பாளர் தில் ராஜூ (Dil Raju). இவர் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் மீடியாக்களை எச்சரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோலிவுட்டில் ஆண்டுதோறும் பொங்கல் ரிலீஸ் படங்கள் வெளியாகும் அதே நேரத்தில், டோலிவுட்டிலும் ஆண்டுதோறும் சங்கராந்தி ரிலீஸ் படங்கள் படையெடுத்து வருகின்றன. மேலும் படிக்க

”வாழும்போதே கடவுளாக வாழ்ந்தவர்” விஜயகாந்த் நினைவிடத்திற்கு வந்த விஷால், ஆர்யா அஞ்சலி

நடிகரும் தேமுதிக தலைவரும் கேப்டன் விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானர். இது தமிழ்நாடு திரைத்துறையினர் மத்தியில் மட்டும் இல்லாமல், ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், அவரது மறைவின் போது அவருக்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியாத நடிகர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் நிர்வாகிகள் பலர் கடந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்தே மறைந்த விஜயகாந்தின் நினைவிடத்திற்குச் சென்று தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். மேலும் படிக்க

Continues below advertisement