விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தில் நடிகர் விக்ரமுக்கு க்ளோஸ் அப் ஷாட் வைத்தபோது அவருக்கு ரியாக்‌ஷன் கொடுக்கத் தெரியவில்லை என்று இயக்குநர் ராஜகுமாரன் தெரியவில்லை.


விக்ரம்


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விக்ரம். சேது , பிதாமகன், அந்நியன், ராவணன் ,  தெய்வத்திருமகள் என தனது சினிமா கரியரில் பல்வேறு மாறுபட்ட கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக அனைவரையும் மிரள வைத்தார்.


தற்போத் பா.ரஞ்சித் இயக்கியிருக்கும் தங்கலான் படத்தில் நடித்துள்ளார். ரஜினி, கமல், விஜய் அஜித் வரிசையில் நடிகர் விக்ரமுக்கு என்று பெரிய ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது. இப்படியான ஒரு நடிகருக்கு நடிக்க வராது என்று சொல்லி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் இயக்குநர் ராஜகுமாரன்.


விக்ரமுக்கு நடிக்கத் தெரியாது


நீ வருவாய் என, விண்ணுக்கும் மண்ணுக்கும் , காதலுடன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குநர் ராஜகுமாரன். இந்தப் படங்களில் கதாநாயகியாக நடித்த நடிகை தேவயானியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். நேர்காணல் ஒன்றில் ராஜகுமாரன் நடிகர் விக்ரமைப் பற்றி பேசிய வீடியோ ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.


இந்த வீடியோவில் அவர் ‘ சியான் விக்ரம் ஒரு சிறந்த நடிகர் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. விக்ரமால் ரஜினி அல்லது கமல்ஹாசனைப் போல் மிமிக் செய்ய முடியும். இதைத் தவிர்த்து அவரால் வேறு எதுவும் புதிதாக நடிக்க முடியாது. அவரால் கெட் அப் மட்டுமே மாற்றமுடியும். அதிலும் குறிப்பாக க்ளோஸ் அப் ஷாட் வைத்தால் அதற்கு எப்படி ரியாக்‌ஷன் கொடுக்க வேண்டும் என்பது விக்ரமுக்குத் தெரியாது. நான் இயக்கிய விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தில் எனக்கு இந்த அனுபவம் ஏற்பட்டது.” என்று கூறியுள்ளார்.  அவரது இந்த வீடியோவை விக்ரம் ரசிகர்கள் பார்த்து கொந்தளித்து வருகிறார்கள். ‘ விக்ரமுக்கு நடிக்கத் தெரியாது என்றால் பிதாமகன், தெய்வத் திருமகள் படத்தில் அவர் நடித்தது  நடிப்பு இல்லையா?” என்று கொந்தளித்து வருகிறார்கள்.


தங்கலான்


விக்ரம், பார்வதி திருவோது, மாளவிகா மோகனன் உள்ளிட்டவர்கள் நடித்து பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தங்கலான், ஜி.வி பிரகாஷ் இசையமைத்து ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. வரும் ஜனவரி 26 ஆம் தேதி தங்கலான் படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. 


விக்ரமின் 62 ஆவது படத்தை சித்தா படத்தை இயக்கிய அருண்குமார் இயக்க இருக்கிறார். ஜி.வி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார், சமீபத்தில் இந்தப் படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியாகி வரவேற்பைப் பெற்றது.




மேலும் படிக்க : Devara Part-1 Glimpse: செங்கடலில் கொள்ளையர்களை துவம்சம் செய்யும் ஜூனியர் என்.டி.ஆர்.. தேவரா க்ளிம்ஸ் வீடியோ ரிலீஸ்!