Vijay Sethupathi: இந்தியை திணிக்காதீர்கள் என்ற விஜய் சேதுபதியின் பேச்சுக்கு, பாஜக மாநில தலைவர் இந்தி தயாரிப்பாளரிடம் சம்பளம் வாங்கலாமா? என கேள்வி எழுப்பியுள்ளார். 


மெரி கிறிஸ்துமஸ்:


ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் நடித்து உருவாகி இருக்கும் படம் மெரி கிறிஸ்துமஸ். தமிழ் மற்றும் இந்தி என இரு மொழிகளில் உருவாகி இருக்கும் இந்தப் படம் வரும் ஜனவரி 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ராதிகா ஆப்தே, ரமேஷ், துரானி, சஞ்சய் ரவ்ட்ராய், ஜெயா துரானி, மற்றும் கேவல் கார்க் ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் படத்தின் தமிழ்ப் பதிப்பில் ராதிகா சரத்குமார், சண்முகராஜா, கவின் ஜெபாபு மற்றும் ராஜேஷ் வில்லியம்ஸ் ஆகியோர் நடித்துள்ளார்கள். க்ஷ


விஜய் சேதுபதிக்கு அண்ணாமலை:


அண்மையில் மெரி கிறிஸ்துமஸ் படக்குழுவின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில், இந்தி பேசுவது குறித்து விஜய் சேதுபதியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, ”இந்தி படிக்க வேண்டாம் என்று நானும் சொல்லவில்லை, இந்தியை திணிக்க வேண்டாம் என்று தான் கூறுகிறோம்” என்றார். 


இந்த நிலையில் விஜய் சேதுபதியின் இந்த பதிலுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். அதில், “ஜவான் படத்துல விஜய்சேதுபதி வில்லனாக சிறப்பாக நடித்து இருக்கிறார். சப் டைட்டில் இல்லாமல் அதை பார்த்தால், அது இந்தியை திணிப்பதா? கற்றுகொடுப்பதா? அது விவாத பொருள். இந்தி உங்களுக்கு பிடிக்குமா? பிடிக்காதா என்பதுதான் பாயின்ட். ஷாருக்கானின் ரெட் சில்லி நிறுவன தயாரிப்பில் அவர் நடிக்கிறார். விஜய்சேதுபதி கருத்து எதுவும் சொல்லவில்லை. அது அவர் உரிமை. அவர் இந்தி, போஜ்புரி, தமிழ் என எதிலும் நடிக்கட்டும். அவர் உரிமை. அதே சமயம் கருத்துக்கு சொல்லும்போது இரண்டு பக்கமும் பார்க்கணும்.  


மொழி பிரச்சினை:


தமிழகத்தில் பல நிறுவனங்கள் முதலீடு செய்கிறார்கள். அவர்கள் இந்தியா முழுக்க வட இந்தியாவில் இருந்து ஆட்களை வேலைக்கு எடுக்கிறார்கள். அவர்கள் தமிழகத்தை விட பெங்களூர் ஓகே. அங்கே மொழி பிரச்னை இல்லை. இங்கே தமிழில் தான் பேச வேண்டியது இருக்கிறது என்கிறார்கள். இதுபோன்ற மொழி பிரச்னையால் தமிழகத்தில் முதலீடு வாய்ப்புகள் குறைகிறது. இந்தி விருப்பம் இருந்தால் படியுங்க. வேண்டாம் என்றால் விட்டுவிடுங்க. நாங்க 3 மொழி கொள்கையை  சொல்றோம். இந்தி படியுங்கனு மோடி சொல்லவில்லை.


கட்டாயம், தமிழ், ஆங்கிலம் படிக்கணும். 3வது மொழியாக உங்களுக்கு தேவைப்படும் மொழியை படியுங்க என்கிறோம். இது எங்க கருத்து, விஜய்சேதுபதிக்கு பதில் அல்ல, 4, 5 மொழி கூட படியுங்க. நாளைக்கு நீங்க குளோபல் சிட்டிசன்.  நாளை வெறும் 2 மொழிவைத்துக் கொண்டு எங்கேயும் போக முடியாது. கூடுதல் மொழி தேவை. இந்தி பிடிக்காவிட்டால் பிரெஞ்சு, ஜெர்மன் படித்து ஐரோப்பாவில் வேலை செய்யுங்க.  இந்தியை நாங்க திணிக்கவில்லை.


அதேசமயம், விஜய்சேதுபதி இந்தி படங்களில் நடிக்கலாமா? இந்தி தயாரிப்பாளர்களிடம் சம்பளம் வாங்கலாமானு கேட்கமாட்டோம். அவர் அவரின் தனித்திறமை. அவர் விருப்பம். நாங்க ஏதாவது சொன்னால் தவறாக போய்விடும். அவர் படத்தை நாங்க கைதட்டி ரசித்துவிட்டு போறோம்” என்றார்.


மேலும் படிக்க: Vijay Sethupathi: "என்கிட்ட எதுக்கு இதை கேட்குறீங்க? இந்தி குறித்த கேள்விக்கு செம டென்ஷனான விஜய் சேதுபதி!


Rashmika Mandanna: புஷ்பா 2 படப்பிடிப்பில் இருந்து பாதியில் வெளியேறிய ராஷ்மிகா? டோலிவுட் திரையுலகில் பரபரப்பு!