• ஏப்ரலுக்கு ஒத்திவைக்கப்பட்ட தங்கலான்.. தொடர்ந்து தள்ளிப்போகும் படங்கள்.. சோகத்தில் விக்ரம் ரசிகர்கள்!




நடிகர் விக்ரம் - இயக்குநர் பா.ரஞ்சித் முதன்முறையாக கூட்டணி வைத்துள்ள தங்கலான் திரைப்படம் வரும் ஜன.26ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இப்படம் ஏப்ரலுக்கு ஒத்திவைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


18ஆம் நூற்றாண்டில் கோலார் தங்கவயலில் நிகழ்ந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு பீரியாடிக் ஆக்ஷன்  திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் தங்கலான்.  மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட நடிகர்கள் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் படிக்க




  • "இதை எதிர்பார்க்கலல" கண்களில் கனல் தெறிக்கும் கங்குவா புது போஸ்டர் ரிலீஸ்!




சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் கங்குவா. திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். தேவி ஸ்ரீபிரசாத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. கங்குவா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த ஆண்டு வெளியானதைத் தொடர்ந்து தற்போது படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளார்கள். மேலும் படிக்க




  • ஜனங்களின் இதயத்தில் இன்றும் இருக்கும் இனியவர்.. எம்.ஜி.ஆர் பிறந்தநாளுக்கு கமல் வாழ்த்து!




தமிழ் சினிமாவின் மறைந்த உச்ச நட்சத்திரம் அதிமுக நிறுவனர், முன்னாள் முதலமைச்சர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 107ஆவது பிறந்தநாள் ஜனவரி 17ஆம் தேதியான நாளை கொண்டாடப்பட உள்ளது.   


ஒரு துணை நடிகராக 1936ஆம் ஆண்டு சதிலீலாவதி திரைப்படம் மூலம் திரைப்பயணத்தை தொடங்கிய எம்.ஜி.ஆர், அதைத் தொடர்ந்து சுமார் 15 படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்தார். துணை கதாபாத்திரங்களில் தொடர்ந்து வந்தவருக்கு கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு 1947ம் ஆண்டு வெளியான 'ராஜகுமாரி' படத்தில் அமைந்தது. அதன் பிறகு படிப்படியாக உயர்ந்து மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் எனக் கொண்டாடப்பட்டார். மேலும் படிக்க




  • கேப்டன் மில்லர், அயலான் 4 நாள் வசூல் நிலவரம்: தனுஷ் Vs சிவகார்த்திகேயன், ஜெயித்தது யார்?




அயலான் திரைப்படம் உலகம் முழுவதும் 50 கோடிகள் வசூலித்துள்ளதாக படக்குழு முன்னதாக பதிவிட்டுள்ளது. மற்றொருபுறம் கேப்டன் மில்லர் படத்தின் வசூல் நிலவரம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.


இந்நிலையில், ஐந்தாவது நாளான இன்று இப்படத்தின் வசூல் எகிறுமா, கேப்டன் மில்லரை அயலான் தூக்கி சாப்பிடுமா அல்லது கேப்டன் மில்லர் மீண்டும் ஏறுமுகத்தில் பயணிக்குமா என எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துள்ளனர். மேலும் படிக்க




  • துணை நடிகர் முதல் இந்தியாவின் உச்ச நட்சத்திரம்.. “மக்கள் செல்வன்” விஜய் சேதுபதிக்கு பிறந்தநாள்!




ஒரு நட்சத்திர நடிகராக உருவாவதற்கு முன் விஜய் சேதுபதியை நாம் அனைவரும் சில  படங்களில் பார்த்து கடந்து சென்றிருப்போம். புதுப்பேட்டை படத்தில் சிறு வசனங்கள். வெண்ணிலா கபடிக் குழுவில் கபடி ப்ளேயராக, சுந்தரபாண்டியில்  வில்லனாக, நான் மகான் அல்ல படத்தில் கடன் கேட்கும் நண்பனாக,  இப்படியான சில சில கதாபாத்திரங்களை இன்று திரும்பி பார்த்தால், ஒரு நல்ல நடிகன் பெயர் அடையாளம் எதுவும் இல்லாமல் ஒரு சில காட்சிகளில் மக்களிடம் ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்திவிட முடியும் என்று சொல்லலாம். விஜய் சேதுபதி அப்படியான ஒரு நடிகர்! மேலும் படிக்க