Kanguva 2nd Look: 'இதை எதிர்பார்க்கலல' கண்களில் கனல் தெறிக்கும் கங்குவா புது போஸ்டர் ரிலீஸ்!
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை உற்சாகமடையச் செய்துள்ளது.
கங்குவா
Just In




சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் கங்குவா. திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். தேவி ஸ்ரீபிரசாத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. கங்குவா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த ஆண்டு வெளியானதைத் தொடர்ந்து தற்போது படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளார்கள்.
படப்பிடிப்பை முடித்த சூர்யா
கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கிய கங்குவா படத்தின் படப்பிடிப்பு கோவா, கேரளா , கொடைக்கானல், ராஜமுந்த்ரி, சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது . பீரியட் டிராமாவாக உருவாகி வரும் கங்குவா படத்தில் சூர்யா இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகின். சமீபத்தில் கங்குவா படத்தில் தனது பகுதிகளுக்கான படப்பிடிப்பை சூர்யா முடித்து அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது பொங்கல் ஸ்பெஷலாக கங்குவா படத்தின் செகண்ட் லுக் வெளியிடப் பட்டுள்ளது.