இந்த ஆண்டு பொங்கல் ரிலீசாக தமிழ் சினிமாவில் தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான், அருண் விஜய்யின் மிஷன் சாப்டர் 1 ஆகிய திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. விஜய் சேதுபதியின் மெரி கிறிஸ்துமஸ் திரைப்படம் இந்தி, தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகியுள்ளது.


கேப்டன் மில்லர்


இதில் தொடரி, பட்டாஸ், மாறன் ஆகிய படங்களைத் தொடர்ந்து சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் கேப்டன் மில்லர். ராக்கி, சாணிக் காயிதம் ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். பிரியங்கா மோகன் ஹீரோயினாக இப்படத்தில் நடித்துள்ள நிலையில், சிவராஜ் குமார், சந்தீப் கிஷன், அதிதி பாலன், நிவேதிதா கிஷன், ஜான் கொக்கென், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.


இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. படத்தின் மேக்கிங், தனுஷின் அசுரத்தனமான நடிப்பு ஆகியவை பாராட்டுகளைப் பெற்று வரும் நிலையில், இரண்டாம் பாதி குறித்த நெகட்டிவ் விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன.


வசூல் எவ்வளவு?


இந்நிலையில் கேப்டன் மில்லர்  படத்தின் வசூல் நிலவரம் பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. பாக்ஸ் ஆஃபிஸ் தரவுகளைப் பகிரும் sacnilk தளம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கேப்டன் மில்லர் திரைப்படம் இந்தியா முழுவதும் முதல் நாளில் 8.7 கோடிகளையும், இரண்டாம் நாள் 7.45 கோடிகளையும், மூன்றாம் நாள் 7.8 கோடிகளையும் வசூலித்துள்ளது.  முதல் மூன்று நாள் வசூல் சராசரி பெரிதாக மாறாத நிலையில், நான்காவது நாளான நேற்று இப்படத்தின் வசூல் மெல்ல சரிந்து 6.79 கோடிகளைக் குவித்து, இதுவரை மொத்தமாக 30.57 கோடிகளை வசூலித்துள்ளது.


இந்நிலையில் பொங்கல்  விடுமுறை அதன் முடிவை எட்டியுள்ள நிலையில், ஐந்தாம் நாளான இன்று வசூல் மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.






தனுஷை மிஞ்சும் சிவகார்த்திகேயன்?


மற்றொரு புறம் குழந்தைகளைக் குறிவைத்து ஏலியனுடன் பொங்கலுக்கு களமிறங்கியுள்ள சிவகார்த்திகேயனின் “அயலான்” பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்றும், வசூலில் மெல்ல மெல்ல எகிறி வருகிறது. Sacnilk தளத்தின்படி, முதல் நாள் 3.2 கோடிகளையும், இரண்டாம் நாள் 4.35 கோடிகளையும், மூன்றாம் நாள் 5.15 கோடிகளையும் வசூலித்துள்ளது. நான்காம் நாளான நேற்று உச்சபட்சமாக 6.75 கோடிகளை வசூலித்துள்ளது. இதுவரை மொத்தம் 23.8 கோடிகளை அயலான் திரைப்படம் வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.






இந்நிலையில் அயலான் திரைப்படம் உலகம் முழுவதும் 50 கோடிகள் வசூலித்துள்ளதாக படக்குழு முன்னதாக பதிவிட்டுள்ளது. மற்றொருபுறம் கேப்டன் மில்லர் படத்தின் வசூல் நிலவரம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.


இந்நிலையில், ஐந்தாவது நாளான இன்று இப்படத்தின் வசூல் எகிறுமா, கேப்டன் மில்லரை அயலான் தூக்கி சாப்பிடுமா அல்லது கேப்டன் மில்லர் மீண்டும் ஏறுமுகத்தில் பயணிக்குமா என எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துள்ளனர்.


மேலும் படிக்க: Ayalaan Review: ஏலியனுடன் “பொங்கல்” .. குழந்தைகளைக் குறிவைத்த சிவகார்த்திகேயன்.. அயலான் திரைப்பட விமர்சனம்!


Captain Miller Review: "தரமான ஆக்ஷன் விருந்து" தனுஷின் கேப்டன் மில்லர் பட விமர்சனம் இதோ!