- Rituraj Singh: அஜித்தின் துணிவு படத்தில் நடித்த பிரபல பாலிவுட் நடிகர் உயிரிழப்பு - ரசிகர்கள் இரங்கல்!
சமீபகாலமாக திரையுலகினர் பலர் தொடர்ச்சியாக மாரடைப்பால் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. நடிப்பதில் கவனம் செலுத்தி வருவதால் உடல்நிலையில் அக்கறையின்மையே இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. இதனால் பல்வேறு பாதிப்புகளோடு உயிரிழப்பு வரை அதன் தாக்கம் நீள்வது சோகத்தை ஏற்படுத்துகிறது. இப்படியான நிலையில் இந்தி சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகர் ரித்துராஜ் சிங் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். மேலும் படிக்க
- நடிகைகள் குறித்து சர்ச்சை பேச்சு.. சிக்கிய முன்னாள் அதிமுக பிரபலம் - கடுப்பான திரையுலகினர்!
நடிகைகள் பற்றி சர்ச்சையாக பேசிய சேலம் மேற்கு அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜூவுக்கு திரையுலகினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு கலங்கமும் அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால் சேலம் மாநகர் மாவட்டத்தை சேர்ந்த சேலம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். மேலும் படிக்க
- Samantha: நான் நிம்மதியா இருந்து ரொம்ப நாளாச்சு... வருத்துடன் பேசிய சமந்தா!
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சமந்தா ‘ எனக்கு மையோசிடிஸ் இருப்பது கண்டறியப்படுவதற்கு முந்தைய நாள் எனக்கு துல்லியமாக நினைவில் இருக்கிறது. அப்போது நானும் எனது மேனேஜரும் மும்பையில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தோம். அப்போது நான் என்னுடைய மேனேஜரிடம் நான் கொஞ்சம் அமைதியாக உணர்வதாக சொன்னேன். அப்படியான ஒரு சின்ன அமைதியை நான் உணர்ந்து ரொம்ப நாளாகியிருந்தது. இதற்கு பிறகு நான் நிம்மதியாக வீடு திரும்பி கண்களை மூடி கொஞ்ச நேரம் நிம்மதியாக தூங்கலாம் என்று தோன்றியது. எழுந்து என்னுடைய வேலைகளை தொடங்கலாம் என்று நம்பிக்கை வந்தது. ஆனால் அடுத்த கணம் எனக்கு மையோசிடிஸ் இருப்பது தெரியவந்தது.” என்று அவர் கூறினார்.மேலும் படிக்க
- Ananthika Sanilkumar: ஸ்கூல் படிப்பு கூட முடியல.. அதுக்குள்ள ரஜினி பட ஹீரோயின் - அனந்திகாவின் பின்னணி!
லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி “லால் சலாம்” படம் திரையரங்குகளில் வெளியானது. நீண்ட இடைவெளிக்குப் பின் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இப்படத்தை இயக்கியிருந்தார். லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்திருந்த நிலையில் அனந்திகா சனில்குமார், தன்யா பாலகிருஷ்ணா, செந்தில், தம்பி ராமையா, நிரோஷா, ஜீவிதா என பலரும் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்படத்தில் ரஜினிகாந்த் மற்றும் கபில்தேவ் இருவரும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தனர். இதனிடையே இப்படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அனந்திகா சனில் குமார் அறிமுகமாகியுள்ளார். மேலும் படிக்க
- RV Udhayakumar: நிறைய காட்றாங்க .. பெண்களின் ஆடை குறித்து இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் சர்ச்சை பேச்சு!
இந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், படத்தில் இருந்த பெரும்பாலான நபர்கள் மலையாள மொழியை அடிப்படையாக கொண்டவர்கள் என்பதால் அதுதொடர்பாக பல கருத்துகளை தெரிவித்தார். அதன்படி, “மலையாளிகள் தொழிலில் 100% நியாயமாக உழைப்பார்கள்.அவர்களிடம் இருக்கும் ஒற்றுமை தான் நான் பெருமை மற்றும் பொறாமைப்படக்கூடிய விஷயமாக உள்ளது. தமிழர்களுக்கு எப்பவும் மலையாளிகளை பிடிக்கும். ஆனால் மலையாளிகளுக்கு தமிழர்களை பிடிக்கவே பிடிக்காது. மலையாள சினிமா ஒரு விஷயத்தை ஆரம்பம் முதல் இறுதி வரை சரியாக கொடுத்து அதை பேசுபொருளாகவே அல்லது கருத்து பொருளாகவோ மாற்றி விடுவார்கள்” என பேசினார். மேலும் படிக்க