நடிகர் நாக சைதன்யாவுடன் திருமண உறவை முடித்துக் கொண்ட காலக்கட்டம் தனக்கு மிக சவாலானதாக இருந்ததாக நடிகை சமந்தா கூறியுள்ளார்.


சமந்தா


நடிகை சமந்தா திரைப்படங்களில்  நடிப்பதில் இருந்து  இடைவெளி எடுத்துக் கொள்வதாக அறிவித்து ஒரு வருடம் நெருங்கி இருக்கிறது. ஆன்மீக தலங்கள், உலக நாடுகளில் சுற்றுலா, சிகிச்சை, உடற்பயிற்சி  என இந்த ஓராண்டுகாலம் சமந்தா தன்னை தயார்படுத்தி வந்துள்ளார். பாலிவுட்டில் அவர்  நடித்துள்ள 'சிட்டாடல்' தொடர் விரைவில் அமேசான் பிரைமில் மே அல்லது ஜூன் மாதம் வெளியாக இருக்கிறது.


இப்படியான நிலையில் யூடியூப் சானல் ஒன்றில் தான் பாதிக்கப்பட்டிருக்கும் மையோசிடிஸ் குறித்தும் தனது தனிப்பட்ட வாழ்க்கையைக் குறித்தும் பேசிவருகிறார். இதன் பகுதியாக முதல் எபிசோட் சமீபத்தில் வெளியானது. இதில் தனது முன்னாள் கணவர் நாகசைத்யாவுடனான மணமுறிவு காலம் தனக்கு மிகுந்த சவாலானதாக இருந்ததாக அவர் கூறியுள்ளார்.


நான் நிம்மதியாக இருந்து ரொம்ப நாள் ஆச்சு


இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் ‘ எனக்கு மையோசிடிஸ் இருப்பது கண்டறியப்படுவதற்கு முந்தைய  நாள் எனக்கு துல்லியமாக நினைவில் இருக்கிறது. அப்போது  நானும் எனது மேனேஜரும் மும்பையில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தோம். அப்போது நான் என்னுடைய மேனேஜரிடம் நான் கொஞ்சம் அமைதியாக உணர்வதாக சொன்னேன். அப்படியான ஒரு சின்ன அமைதியை நான் உணர்ந்து ரொம்ப நாளாகியிருந்தது. இதற்கு பிறகு நான் நிம்மதியாக வீடு திரும்பி கண்களை மூடி கொஞ்ச நேரம் நிம்மதியாக தூங்கலாம் என்று தோன்றியது. எழுந்து என்னுடைய வேலைகளை தொடங்கலாம் என்று நம்பிக்கை வந்தது. ஆனால் அடுத்த கணம் எனக்கு மையோசிடிஸ் இருப்பது தெரியவந்தது.” என்று அவர் கூறினார்.


சமந்தா நாகசைதன்யா மணமுறிவு


ஐந்து ஆண்டுகள் காதலித்து வந்த சமந்தா மற்றும் நாக சைதன்யாவும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். 4 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்குப் பின் இருவரும் விவாகரத்து பெற இருப்பதாக தெரிவித்தார்கள். இதனைத் தொடர்ந்து இருவரின் தனிப்பட்ட வாழ்க்கைத் தொடர்பான பல்வேறு வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவின. தங்களது மணமுறிவு குறித்து நடிகை சமந்தா பேசியபோது  "என்னுடைய விருப்பம் எது, வெறுப்பு எது என்பதை நான் புரிந்துகொள்ளாததுதான் நான் செய்த பெரிய தவறாக நினைக்கிறன். என்னுடைய பார்ட்னரின் தாக்கம் தான் அதில் அதிகமாக இருந்தது. நம்முடைய வாழ்க்கையில் மிகவும் மோசமாக நேரத்தில் கூட பாடம் கற்றுக்கொள்ள முடியும் என்பதை நான் உணர்ந்தபோதுதான் நான் தனிப்பட்ட வளர்ச்சியைப் பெற்றேன்" என்று கூறியுள்ளார். 




மேலும் படிக்க : Rituraj Singh: அஜித்தின் துணிவு படத்தில் நடித்த பிரபல பாலிவுட் நடிகர் உயிரிழப்பு - ரசிகர்கள் இரங்கல்!


நடிகைகள் குறித்து சர்ச்சை பேச்சு.. சிக்கிய முன்னாள் அதிமுக பிரபலம் - கடுப்பான திரையுலகினர்!