• Anant Radhika Wedding: "நான் அப்படியே மயங்கிட்டேன்" அனந்த் அம்பானி திருமண கொண்டாட்டம்.. மெய்மறந்து பேசிய ரஜினி!


ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ்  - நீடா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் வரும் ஜூலை 12ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக திருமணத்துக்கு முன்பான கொண்டாட்டங்கள் தற்போது மார்ச் 1ம் தேதி முதல் இன்று அதாவது மார்ச் 3ம் தேதி வரை நடைபெற்றது.இந்த நிகழ்ச்சி குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் கிரீன் காம்ப்ளக்ஸில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. பிரபல ஹாலிவுட் பாப் பாடகியான ரிஹானாவின் இசை நிகழ்ச்சியோடு கோலாகலமாக தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் உலகெங்கிலும் உள்ள பல்வேறு பிரபலங்கள் கலந்துகொண்டார்கள்.மேலும் படிக்க



  • Mohan G: ”என்னோட கஷ்டத்தை புத்தகம் எழுதினால் கூட பத்தாது” : இயக்குநர் மோகன் ஜி வேதனை


இந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் மோகன் ஜி, “காடுவெட்டி படக்குழுவினரை பாராட்ட வெவ்வேறு ஊரில் இருந்து வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம். படத்தின் வெற்றி இந்த நிகழ்ச்சியிலேயே முடிவு செய்யப்பட்டு விட்டது. அனைவரும் கொண்டாடத்தான் போகிறீர்கள். பல தடைகளை தாண்டி தான் மறுமலர்ச்சி படம் வெளியானது. அப்போதும் உங்களுடன் காடுவெட்டி குரு அண்ணன் உள்ளிட்ட பலரும் இருந்தார்கள். ஆனால் என்னுடைய திரௌபதி படம் வெளியாகும்போது தனியாளாக சென்சார் போர்டிடம் போராடினேன். மக்களிடம் நிதி பெற்று உருவான அந்த படத்தின் ட்ரெய்லர் ரிலீசாகும் வரைக்கும் நான் பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சமல்ல என்றார். மேலும் படிக்க



  • RK Suresh: சாதிய உணர்வு தப்பில்லை.. எல்லாரும் ஒன்றுதான்.. நடிகர் ஆர்.கே.சுரேஷ் பேச்சால் பரபரப்பு


காடுவெட்டி படத்தில் காடுவெட்டி குரு கேரக்டரில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ளார். 


இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், “காடுவெட்டி படத்தில் காடுவெட்டி குரு கேரக்டரில் நடித்ததற்கு பெருமைப்படுகிறேன். சோலை ஆறுமுகம் சொன்னவுடன் சந்தோசப்பட்டேன். எங்க அப்பா காடுவெட்டி குருவுடன் நன்கு பழகியவர், நான் அவரிடம் பேசியிருக்கிறேன். ரொம்ப அன்பானவர், பாசமானவர். அதனையெல்லாம் மனதில் வைத்து தான் காடுவெட்டி படம் பண்ணியிருக்கிறேன். ஏற்கனவே திரௌபதி படம் மூலம் மோகன் ஜி வைத்து செய்து விட்டார். அந்த வகையில் சோலை ஆறுமுகமும் சேர்ந்துள்ளார். இதையெல்லாம் வைத்தால் சென்சாரில் பிடிப்பார்கள் என கூறினேன். அதற்கேற்றாற்போல் 31 கட் சென்சாரில் கொடுத்து விட்டார்கள் என்றார். மேலும் படிக்க



  • Jyothirmayi: தலைநகரம் ஹீரோயினை நியாபகம் இருக்கா? - ஆளே மாறிப்போன நடிகை ஜோதிர்மயி!


கேரளாவைச் சேர்ந்த ஜோதிர்மயி கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் திரையுலகில் இருந்து வருகிறார். பைலட்ஸ் என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான அவர் அங்கு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்தார். இப்படியான நிலையில் ஜோதிர்மயி கடந்த 2006 ஆம் ஆண்டு தமிழில் வெளியான “தலைநகரம்” படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். கடந்த 10 ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காத அவரின் சமீபத்திய புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கிட்டதட்ட சால்ட் அண்ட் பெப்பர் முடியுடன் கூடிய ஜோதிர்மயியை காணப்பட்டார். கேரளாவின் எழுத்தாளரான சி.ஆர்.ஓமனக்குட்டனின் புத்தக வெளியீட்டு விழாவில் தான் அவர் கலந்து கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜோதிர்மயியின் புகைப்படத்தை பார்க்கும்போது 40 வயதுதான் ஆகிறது என்பதை யாராலும் நம்பவே முடியவில்லை. மேலும் படிக்க



  • Mansoor Ali Khan: ஆளும் கட்சி கட்டுப்பாட்டில் தியேட்டர்கள்.. ரூ.4 கோடி நஷ்டம் - கண்கலங்கி அழுத மன்சூர் அலிகான்!


செய்தியாளர்களை சந்தித்த மன்சூர் அலிகானிடம், அவர் நடித்திருந்த சரக்கு படம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “சரக்கு படத்தை ரூ.4 கோடி போட்டு எடுத்தேன். ஆளும்கட்சியின் ஆதிக்கம் காரணமாக எனக்கு போதுமாக திரையரங்குகள் கிடைக்கவில்லை. தம்பி உதயநிதியை பலமுறை நேரில் போய் பார்த்தேன்.அவர் ஓடிடியில் வெளியிடுவோம், தியேட்டர்கள் கிடைக்கச் செய்வோம் என கூறினார்.மேலும் படிக்க