உண்மையிலேயே காடுவெட்டி குரு குடும்பத்தினரை இந்த படம் பெருமையடைய செய்யும் என காடுவெட்டி பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக, விநியோகஸ்தராக பிரபலமானவர் ஆர்.கே.சுரேஷ். இவர் வில்லனாக அறிமுகமாகி ரசிகர்களிடத்தில் நன்கு பரீட்சையமானார். தொடர்ந்து ஆருத்ரா மோசடி வழக்கில் ஆர்.கே.சுரேஷ் பெயருடம் சிக்க திரையுலகம் அதிர்ச்சியடைந்தது. இப்படியான நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின் அவர் மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார். 

அந்த வகையில் இயக்குநர் சோலை ஆறுமுகம் இயக்கத்தில் “காடுவெட்டி” என்ற பெயரில் படம் எடுக்கப்பட்டுள்ளது.  பாமக கட்சியின் முக்கிய வேராக இருந்தவர்களில் ஒருவரான மறைந்த தலைவர் காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் ரிலீசாகவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள தியேட்டர் ஒன்றில் நடைபெற்றது. இப்படத்தில் காடுவெட்டி குரு கேரக்டரில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ளார். 

Continues below advertisement

இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், “காடுவெட்டி படத்தில் காடுவெட்டி குரு கேரக்டரில் நடித்ததற்கு பெருமைப்படுகிறேன். சோலை ஆறுமுகம் சொன்னவுடன் சந்தோசப்பட்டேன். எங்க அப்பா காடுவெட்டி குருவுடன் நன்கு பழகியவர், நான் அவரிடம் பேசியிருக்கிறேன். ரொம்ப அன்பானவர், பாசமானவர். அதனையெல்லாம் மனதில் வைத்து தான் காடுவெட்டி படம் பண்ணியிருக்கிறேன். ஏற்கனவே திரௌபதி படம் மூலம் மோகன் ஜி வைத்து செய்து விட்டார். அந்த வகையில் சோலை ஆறுமுகமும் சேர்ந்துள்ளார். இதையெல்லாம் வைத்தால் சென்சாரில் பிடிப்பார்கள் என கூறினேன். அதற்கேற்றாற்போல் 31 கட் சென்சாரில் கொடுத்து விட்டார்கள். 

உண்மையிலேயே காடுவெட்டி குரு குடும்பத்தினரை இந்த படம் பெருமையடைய செய்யும். அதற்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன். எனக்கு தெரிஞ்சி குடும்பம், குடும்பாக இந்த படத்துக்கு வருவார்கள் என சொல்லிக் கொள்கிறேன். காடுவெட்டி படத்துக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இது உணர்வு சார்ந்த ஒரு படமாக இருக்கும். இது ஜாதி படம் அல்ல. 100% இரு தரப்பினருக்குமான முக்கியமான படமாக காடுவெட்டி இருக்கும்.

என்னை கமெண்டில் ஜாதி வெறி பிடித்தவன் என சொல்வார்கள். நான் எந்த ஜாதியும் தப்பா பேசவில்லை. எல்லாரும் ஒன்று தான். இவை எல்லாமே உணர்வு தான். அதில் தவறொன்றும் இல்லை. எல்லா சமூகத்தினரும் அவரவர்கள் தங்கள் சமூகத்தை, குடும்பத்தை பாதுகாத்து கொள்கிறார்கள். இதில் எந்த தப்பும் இல்லை. மேலும் எமோஷனுக்கு எல்லாம் சினிமாவில் இடம் கிடையாது. அழுதாலும் என்ன புலம்பினாலும் சினிமாவில் இடம் கொடுக்க மாட்டார்கள்” என ஆர்,கே.சுரேஷ் தெரிவித்தார்.