தமிழில் சில படங்களில் ஹீரோயினாக நடித்த நடிகை ஜோதிர்மயியின் சமீபத்திய புகைப்படம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


கேரளாவைச் சேர்ந்த ஜோதிர்மயி கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் திரையுலகில் இருந்து வருகிறார். பைலட்ஸ் என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான அவர் அங்கு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்தார். இப்படியான நிலையில் ஜோதிர்மயி கடந்த 2006 ஆம் ஆண்டு தமிழில் வெளியான “தலைநகரம்” படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். இப்படம் அவருக்கு சிறந்த அறிமுகமாக அமைந்தது. 


இதனைத் தொடர்ந்து பெரியார், நான் அவனில்லை, அறை எண் 305ல் கடவுள், சபரி, வெடிகுண்டு முருகேசன்  என சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்தார். அதேசமயம் மலையாளத்தில்இஷ்டம், பாவம், மீசமாதவன், நந்தனம், என்றே வீடு அப்புன்றேம், கல்யாணராமன், பட்டாளம், அந்யர், பாகல், சாகர் எலியாஸ் ஜாக்கி ரீலோடட், சீனியர்ஸ், ஜனகன் , ஹவுஸ்ஃபுல்  உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட படங்களில் ஜோதிர்மயி நடித்திருக்கிறார். 


மேலும் சின்னத்திரையில் பெப்சி டாப் 10, உங்கள் சாய்ஸ், வாழ்கண்ணாடி, சமகமம், விவேல் ஹன்மூன் டிராவல்ஸ் உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளை அவர் தொகுத்து வழங்கியுள்ளார். இதனிடையே 2013 ஆம் ஆண்டுக்குப் பின் சினிமாவில் நடிப்பதை ஜோதிர்மயி நிறுத்தி விட்டார். இவர் நிஷாந்த் குமார் என்பவரை 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். ஆனால் இவர்கள் 2011ஆம் ஆண்டு விவாகரத்து செய்தனர். இதனைத் தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு மலையாள இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான அமல் நீரத் என்பவரை 2வதாக ஜோதிர்மயி திருமணம் செய்துக் கொண்டார். 






இதனிடையே கடந்த 10 ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காத அவரின் சமீபத்திய புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கிட்டதட்ட சால்ட் அண்ட் பெப்பர் முடியுடன் கூடிய ஜோதிர்மயியை காணப்பட்டார். கேரளாவின் எழுத்தாளரான சி.ஆர்.ஓமனக்குட்டனின் புத்தக வெளியீட்டு விழாவில் தான் அவர் கலந்து கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜோதிர்மயியின் புகைப்படத்தை பார்க்கும்போது 40 வயதுதான் ஆகிறது என்பதை யாராலும் நம்பவே முடியவில்லை.


சில நாட்களுக்கு முன்பு அமல் நீரத் தனது மனைவி ஜோதிர்மயி மொட்டையடித்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 




மேலும் படிக்க: Rajinikanth: அம்பானி வீட்டு திருமணத்தில் பணிப்பெண்ணை அவமானப்படுத்தினாரா ரஜினிகாந்த்?