உலக அளவில் புகழ்பெற்ற நிகழ்ச்சி “மாஸ்டர் செஃப்”.இந்த நிகழ்ச்சியானது தமிழ் மற்றும் தெலுங்கில் ஒளிபரப்பாகிவருகிறது.


தமிழில் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். அதேபோல் தெலுங்கில் நடிகை தமன்னா தொகுத்து வழங்கினார். ஆனால் திடீரென சில நாள்களுக்கு முன்பு தமன்னா மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.


இதனையடுத்து தமன்னாவுக்கு பதிலாக தெலுங்கின் முன்னணி நடிகைகளில் ஒருவரும், தொகுப்பாளருமான அனுசுயா தொகுத்து வழங்குவார் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி சமீபத்தில் அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியின் படப்பிடிப்பும் நடந்தது.


தமன்னா ஒதுக்கிய கால்ஷீட்டுக்குள் நிகழ்ச்சியின் மொத்த படப்பிடிப்பையும் முடிக்கவில்லை. அதனால் தமன்னாவால் மற்ற எபிசோடுகளுக்கு வரமுடியவில்லை. எனவேதான் அவர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார் என கூறப்பட்டது.


இந்நிலையில், நிகழ்ச்சியிலிருந்து தமன்னா வெளியேறியதற்கான காரணம் குறித்த விளக்கமும், மாஸ்டர் செஃப் குழுவினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.


அதன்படி, அவரது வழக்கறிஞர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “’மாஸ்டர் செஃப்' தெலுங்கு பதிப்புக்கான சம்பள பாக்கி இன்னும் கொடுக்கப்படவில்லை என்பதாலும், தயாரிப்பு தரப்பான இன்னவேடிவ் ஃபிலிம் அகாடமியின் தொழில் முறையற்ற அணுகுமுறையாலும் தமன்னா சட்டரீதியான நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.


தயாரிப்பு தரப்பு தொடர்ந்து சம்பளம் தராமல், தொழில் ரீதியாக ஒழுங்காக நடந்து கொள்ளவில்லை என்றாலும் தனது மற்ற வேலைகளை ரத்து செய்துவிட்டு இந்த ஒட்டுமொத்த நிகழ்ச்சியை முடித்துத் தர வேண்டும் என்பதில் தமன்னா தீர்மானமாகவே இருந்தார்.


ஆனால் திடீரென்று தயாரிப்பு தரப்பு அவருடனான தொடர்பை நிறுத்திவிட்டது என்பதால் அவர்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு தமன்னா தள்ளப்பட்டுள்ளார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: Virat Kohli Press Conference: ‛ரோஹித்தை நீக்க வேண்டுமா...’ - போட்டிக்குப் பின் கோலியின் காட்டமான பேட்டி!


"நம்பிக்கையோடு தடைகளை கடந்து வர வேண்டும்" - ஐஏஎஸ் தேர்வில் முதலிடம் பிடித்த தென்காசி மாணவி!


Bigg Boss 5 Tamil Promo: ‛பிடிக்கும் ஆனா... பிடிக்காது...’ வழக்கமான நாமினேஷன் ஸ்டார்ட்... இந்த முறை எரிக்கிறாங்க!


Nayanthara | எல்லாத்துக்குமே காரணம் நயன்தாரா தான்.. புகழ்ந்து தள்ளிய விக்னேஷ் சிவன்!