நடிகை தமன்னா இந்தியளவில் பிரபலமான நடிகை. தற்போது இவர் நடிகர் ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள தமன்னா ஜெயிலர் படத்தில் காவாலா எனும் பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். அந்த பாடல் கடந்த சில தினங்களுக்கு முன் வெளிவந்து இணையத்தில்  வைரலாகி வருகிறது. குறிப்பாக தமன்னாவின் நடனம் ரசிகர்களின் கவர்ந்துள்ளது. எந்த பக்கம் திரும்பினாலும், காவாலா பாடலுக்கு ரசிகர்கர்கள் நடனமாடி வீடியோக்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.


இந்நிலையில், இன்று நடிகை தமன்னா விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்து ரசிகர் ஒருவர் தமன்னாவுடன் இணைந்து காவாலா பாடலுக்கு நடனம் ஆடினார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.






இதற்கிடையே  தமன்னாவின் காதலர் விஜய் வர்மா காவாலா பாடலை பார்த்துவிட்டு 'This song is fire' என பாடல் பற்றி கூறி இருக்கும் அவர், தமன்னாவை Goddess என குறிப்பிட்டிருந்தார். 


நடிகை தமன்னா 2005-இல் சந்த் சா ரோஷன் செகரா என்ற இந்தித் திரைப்படம் மூலம் சினிமா உலகில் அறிமுகமானார். தமிழ் திரைப்பட உலகில் கேடி படம் மூலம் அறிமுகமானார். கல்லூரி திரைப்படத்தில் நடித்திருந்த தமன்னா தன் நடிப்பின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். விஜய் , சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னனி நடிகர்களுடன் இவர் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். பொதுவாகவே நல்ல நடனமாடும் திறமை கொண்ட தமன்னா தற்போது ஜெயிலர் படத்தின் காவாலா படத்திற்கு நடனமாடியதன் மூலம் இணையத்தையே ஒரு கலக்கு கலக்கி வருகிறார்.


மேலும் படிக்க 


சட்டத்தை மீறி இருந்தால் இழப்பீட்டை பெற்று கொள்ளுங்கள்..செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் உயர் நீதிமன்ற நீதிபதி கேள்வி


CM MK Stalin: சோஷியல் மீடியாக்களை கவனிங்க - மோதல்கள் உண்டாக்குவோர் மீது நடவடிக்கை எடுங்க - முதலமைச்சர் உத்தரவு..!