தமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு குறித்து முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், “சமூக வலைதளங்களில் சாதி, மத மோதல்களை தூண்டுவோரை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.


காவல் மரணங்களை தடுக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். பொது இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடக்காதவண்ணம் கண்காணிக்க உத்தரவிட்டுள்ளார். பொதுமக்கள் மீதான புகார்களில் நடுநிலையாக செயல்படவேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். கள்ளச்சாராயம் முற்றிலும் ஒழிக்கப்படவேண்டிய விஷயம் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். 


மேலும், ”காவல் துறைக்கு புகார் அளிக்க மக்கள் வந்தால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமே தவிர, காவல் நிலையத்தில் பேச்சு வார்த்தை நடத்தக்கூடாது எனவும், சட்டம் ஒழுங்கு பிரச்னை நிகழ்வாக மாறுவதைத் தடுக்க நடவடிக்கை வேண்டும் எனவும், குற்றம் செய்ததற்கான ஆதாரங்கள் இருந்தால் மட்டும்தான் கைது செய்யும் அதிகாரம் உள்ளது” என குறிப்பிட்டுள்ளார். 


இந்த ஆலோசனைக் கூட்டத்தில் புதிய அதிகாரிகள் பொறுப்பேற்று சில நாட்களே ஆகும் நிலையில் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, உள்துறை செயலர் அமுதா, சட்டம் ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால், புதிதாக பொறுப்பேற்ற சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண், உளவுத்துறை ஐஜி செந்தில்வேலன், சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர், பிற மாநகர காவல் ஆணையர்கள், சரக ஐஜிக்கள், டிஐஜிக்கள், மாவட்ட எஸ்பிக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் 


தமிழ்நாட்டில் டிஜிபியாக இருந்த சைலேந்திர பாபு கடந்த 30 ஆம் தேதி பணி ஓய்வு பெற்றார். அதனை தொடர்ந்து சென்னை காவல்துறை ஆணையராக இருந்த சங்கர் ஜிவால், தமிழ்நாடு டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டார். தமிழக சட்ட-ஒழுங்கு துறையின் 32வது டிஜிபி ஆக சங்கர் ஜிவால் பொறுப்பேற்றார். முன்னதாக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக அருணும், சென்னை மாநகர காவல் ஆணையராக சந்தீப்ராய் ரத்தோர் ஆகியோரும் பொறுப்பேற்றனர்.


செங்கல்பட்டு கொலைகள்


செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 50 நாட்களில் 3 படுகொலைகள் நடந்துள்ளது. இது சட்டம் ஒழுங்கு குறித்த அச்சத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இதனைச் சுட்டிக்காட்டி பாமக இன்று செங்கல்பட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதேபோல் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனங்களைத் தெரிவித்ததுடன், சட்டம் ஒழுங்கை சீர் செய்யவும் வலியுறுத்தினார். 




கொடநாடு பிரச்சனையை கையில் எடுத்த ஓபிஎஸ் - பதிலடி கொடுத்த ஜெயக்குமார்


முன்னாள் அமைச்சர் காமராஜ் ரூ.127 .49 கோடி சொத்து குவிப்பு: பெட்டி பெட்டியாக தாக்கல் செய்யப்பட்ட 18 ஆயிரம் ஆவணங்கள்