Urban Local Body Election Polling LIVE: தேர்தலில் முறைகேடு - மறு வாக்குப்பதிவு வேண்டும் - அதிமுக புகார் மனு

TN Urban Local Body Election Polling LIVE Updates:நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. உடனுக்குடனான தகவல்கள் இன்று இங்கே..

ABP NADU Last Updated: 19 Feb 2022 08:04 PM
மறு வாக்குப்பதிவு வேண்டும் - அதிமுக புகார் மனு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடு நடந்ததாகவும் மறு வாக்குப்பதிவு கோரியும் அதிமுக புகார் மனு -  மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமாரிடம் புகார் மனு

குமரி மாவட்டம் - 5 மணி நிலவரம்

குமரி மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் 5 மணி நிலவரப்படி :


 நாகர்கோவில் மாநகராட்சி :54.34 சதவீதம்


4 நகராட்சிகள் : 56.41
51 பேரூராட்சிகள் :58.85


மொத்தம் : 57.52சதவீதம்

50% தொடாத சென்னை! மாலை 5 மணி நிலவரப்படி 41.68% வாக்குகள் பதிவு

சென்னையில் மாலை 5 மணி நிலவரப்படி 41.68% வாக்குகள் பதிவாகியுள்ளது

இயந்திரங்களுக்கு சீல் வைப்பு

வாக்குப்பதிவு முடிந்த நிலையில் முகவர்கள் முன்னிலையில் இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்படுகிறது

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது 

வாக்களித்தார் மத்திய இணை அமைச்சர் எல். முருகன்

சென்னை அண்ணாநகர் வாக்குச்சாவடியில் வாக்களித்தார் மத்திய இணை அமைச்சர் எல். முருகன்

இறுதிக்கட்டத்தில் வாக்குப்பதிவு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக வாக்குப்பதிவு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடைசி ஒரு மணி நேரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுமதி

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் - 3 மணி வரை - 47.18% வாக்குகள் பதிவு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பிற்பகல் 3 மணி வரை 47.18% வாக்குகள் பதிவு

கோவை மாவட்டத்தில் 3 மணி நிலவரம்..

கோவை மாவட்டத்தில் 3 மணி நிலவரப்படி 46.52 சதவீதம் வாக்குப்பதிவு

சென்னையில் மிக மோசம்.. 3 மணி நிலவரப்படி 31.89% வாக்குகள்  பதிவு

சென்னையில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 31.89%வாக்குகள்  மட்டுமே பதிவாகியுள்ளது

செங்கல்பட்டு - பிற்பகல் 3 மணி நிலவரம்..

செங்கல்பட்டு மாவட்டத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி..


1.மாநகராட்சி


  தாம்பரம்- 32.80%


2. நகராட்சிகள்


 செங்கல்பட்டு, மறைமலைநகர், நந்திவரம்-கூடுவாஞ்சேரி, மதுராந்தகம் ஆகிய 4 நகராட்சிகளுக்கு- 48.42%


3. பேரூராட்சிகள்


கருங்குழி,அச்சரபாக்கம், இடைக்கழிநாடு, திருக்கழுக்குன்றம், திருப்போரூர், மாமல்லபுரம் ஆகிய 6 பேர் பேரூராட்சிகளுக்கு - 55.86%


மொத்தம் மாவட்டம் முழுவதும் 37.99 % வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது.

குமரி மாவட்டம் - 3 மணி நிலவரம்

குமரி மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் 3 மணி நிலவரப்படி :


 நாகர்கோவில் மாநகராட்சி : 42.47 %


4 நகராட்சிகள் : 46.31%
51 பேரூராட்சிகள் :53.99%


மொத்தம் : 50.44 %

பந்தலை அகற்றுங்கள் - வாக்குச்சாவடி மையம் அருகே வாக்குவாதம்

திருச்சி மணப்பாறையில் வாக்குச்சாவடி மையம் அருகே அமைக்கப்பட்டிருந்த பந்தலை அகற்றக் கூறிய போலீசாருக்கும் – வேட்பாளர்கள் மற்றும் கட்சியினருக்கும் இடையே இரண்டாவது முறையாகவும் கடும்வாக்குவாதம் - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கட்சியினரை வெளியேற்றிதால் பரபரப்பு

பந்தலை அகற்றுங்கள் - வாக்குச்சாவடி மையம் அருகே வாக்குவாதம்

திருச்சி மணப்பாறையில் வாக்குச்சாவடி மையம் அருகே அமைக்கப்பட்டிருந்த பந்தலை அகற்றக் கூறிய போலீசாருக்கும் – வேட்பாளர்கள் மற்றும் கட்சியினருக்கும் இடையே இரண்டாவது முறையாகவும் கடும்வாக்குவாதம் - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கட்சியினரை வெளியேற்றிதால் பரபரப்பு

கருப்புக்கொடி கட்டி தேர்தல் புறக்கணிப்பு 

செங்கல்பட்டு மாவட்டம் இடைக்கழிநாடு பேரூராட்சி 14-ஆவது வார்டு உள்ள ஊத்துகாட்டு அம்மன் கோயில் பகுதி பொதுமக்கள் வீடுதோறும் கருப்புக்கொடி கட்டி தேர்தல் புறக்கணிப்பு 

டாப் கியரில் செல்லும் நாமக்கல்.. மெல்ல நகரும் சென்னை.. 1 மணி நிலவரம்!

தமிழ்நாட்டிலேயே மதியம் 1 மணி நிலவரப்படி நாமக்கல் மாவட்டத்தில் அதிக வாக்குப்பதிவு பதிவாகி உள்ளது. சென்னையில் மதியம் 1 மணி நிலவரப்படி 23.42  சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது

கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் - ககன்தீப் சிங் பேடி

சென்னை மக்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும்; இன்று வாக்களித்தால்தான் நாளை உரிமைகோர முடியும் - ககன்தீப் சிங் பேடி

சென்னையில் ஓட்டுப்பதிவு மந்தம்.!

தமிழ்நாட்டிலேயே சென்னையில்தான் ஓட்டுப்பதிவு மிகவும் மந்தம்

சென்னையில் 23.42 சதவீதம் வாக்குகள் பதிவு

சென்னை மாநகராட்சி தேர்தல் வாக்குப்பதிவு, மதியம் 1 மணி நிலவரப்படி 23.42  சதவீதம் வாக்குகள் பதிவு

திருச்சி மாநகராட்சி 38வது வார்டில் தேர்தல் புறக்கணிப்பு

திருச்சி மாநகராட்சி 38வது வார்டுக்கு உட்பட்ட காட்டூர் அருந்ததியர் தெரு பகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவில்லை என கூறி அப்பகுதி மக்கள் தேர்தலைப் புறக்கணித்துள்ளனர்.


 காட்டூர், அருந்ததியர் தெரு திருச்சி மாநகராட்சியின் 38 வார்டுக்கு உட்பட்ட பகுதியாக உள்ளது. இந்த பகுதி மக்கள் தங்களுக்கு தேவையான குடிநீர், கழிவறை, மழைநீர் மற்றும் கழிவுநீர் வடிகால் வசதி, சாலைவசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரியாக கிடைக்கவில்லை எனக் கூறி அமைச்சர், மாவட்ட நிர்வாகம் ,மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் மனு கொடுத்தும் வந்துள்ளதாகவும் மேலும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.


 இந்த நிலையில் கடந்த குடியரசு தினத்தன்று வீடுகளில் தோறும் கருப்புக்கொடி ஏற்றி திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டமும் நடத்தி உள்ளனர்.


 ஆனால் திருச்சி மாநகராட்சி நிர்வாகம் இதுகுறித்து செவிசாய்க்காமல் கண்டு கொள்ளாத நிலை தொடர்ந்ததால் இன்று நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க அவர்கள் முடிவு செய்தனர்.


 அதன் அடிப்படையில் அருந்ததிய தெருவை சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பூத் சிலிப் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஒரு பெட்டியில்  போட்டு  மாநகராட்சி நிர்வாகத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அடிப்படை வசதிகள் செய்து தராவிட்டால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் இது வரும் அனைத்து தேர்தல்களிலும் புறக்கணிப்பதாகவும் அப்பகுதியினர் தெரிவித்தனர்.
பரபரப்பாக நடைபெற்று வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது, காட்டூரில் அடிப்படை வசதிகள் கேட்டு தேர்தலை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் ராஜ கண்ணப்பன் சிவகங்கை வாக்களித்தார்

சிவகங்கை மருதுபாண்டியர் நகரில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் அமைச்சர் ராஜகண்ணப்பன் வாக்கு செலுத்தினார்.



நாகப்பட்டினம் மதியம் 1 மணி வாக்கு நிலவரம்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு காலை 01 மணி நிலவரம் 41.09சதவீதம் பதிவாகி உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் மதியம் 1 மணி நிலவரம்

கள்ளக்குறிச்சி  மாவட்டத்தில் மதியம் 1 மணி நிலவரப்படி பதிவான வாக்குகள் 47.02 சதவீதம்

கன்னியாகுமரி மாவட்டம் 1 மணி வாக்குப்பதிவு நிலவரம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மதியம் 1 மணி நிலவரப்படி 37.21சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. 

செங்கல்பட்டு மதியம் 1 மணி வாக்குப்பதிவு விபரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் மதியம் 1 மணிக்கு பதிவான வாக்குகள் சதவீதம் 30.23

புதுக்கோட்டை மதியம் 1 மணி நிலவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் மதியம் 1 மணி நிலவரப்படி 44.26  சதவீத ஓட்டுகள் பதிவு

திருவாரூர் மாவட்ட 1 மணி நிலவரம்

திருவாரூர் மாவட்டத்தில் ஒரு மணி நிலவரப்படி 43.16 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது

ராமநாதபுரம் 1 மணி நிலவரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 1 மணி நிலவரப்படி 40 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. 

சேலம் மதியம் 1 மணி வாக்குப்பதிவு நிலவரம்

சேலம் மாவட்டத்தில் மதியம் 1 மணி நிலவரப்படி 43.12 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தகவல்

மயிலாடுதுறை மதியம் 1 மணி ஓட்டுப்பதிவு நிலவரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் காலை 1மணி நிலவரப்படி 39 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

திருச்சியில் 1 மணி ஓட்டுப்பதிவு நிலவரம்

திருச்சி மாவட்டத்தில் மதியம் 1 மணி நிலவரப்படி 42 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. 

கள்ள ஓட்டு போடப்பட்ட தனது ஓட்டு: கண்ணீர் விட்ட பெண்

மதுரை மாநகராட்சி 42 வது வார்டில் தியாகராஜர் நன்முறை மேல்நிலைப்பள்ளி வாக்குப்பதிவு விறுவிறுப்பு நடைபெற்று வரும் நிலையில், மதுரை  தமிழன் தெரு பகுதியை சேர்ந்த வசந்தி என்பவர் தனது வாக்கை வேறொருவர் செலுத்தி விட்டதாக கூறி கண்ணீருடன் தேர்தல் அதிகாரிகளிடம் தெரிவித்த நிலையில், அது குறித்து தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளோர் ஆய்வு செய்து வருகின்றனர்.



பேருந்து நிறுத்தி விட்டு வாக்களித்து வந்த ஓட்டுநர்

தர்மபுரி பொம்மிடி அரசு மேல்நிலைப்பள்ளியில் தனியார் பேருந்து ஒட்டுனர் பயணிகளிடம் 10 நிமிடம் அனுமதி கேட்டு தனது ஜனநாயக கடைமையையாற்றினர்.



‛அமமுக ஆளுங்கட்சியும் இல்லை... எதிர்கட்சியும் இல்லை’ -டிடிவி தினகரன்

உங்கள் பணம் உங்களிடம் வருகிறது. அமமுக இன்று ஆளுங்கட்சியும் கிடையாது, எதிர்கட்சியும் கிடையாது. நல்ல வேட்பாளர்கள் தான் எங்கள் கட்சி சார்பில் போட்டியிடுகிறார்கள். மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்- டிடிவி தினகரன்

ஓட்டுப்பதிவு மையத்தில் அதிமுக - திமுக இடையே மோதல் !

சிவகங்கை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் வேளையில்,
சிவகங்கை நகராட்சி 14 வது வார்டு
சாய் பால வித்யா மந்திர் மழலையர் தொடக்க பள்ளி வாக்கு மையத்தில் 
திமுக வேட்பாளர் அழகுமுத்து மற்றும் அதிமுக வேட்பாளர் விமலாவிற்கும் இடையே நடந்த வாக்குவாதத்தையடுத்து 
இரு தரப்பினரையும் மோதல் ஏற்பட்டு பின்னர் காவல்துறையினர் விரட்டி அடித்தனர்

அன்புமணி ராமதாஸ் வாக்களித்தார்

திண்டிவனம் 19வது வார்டில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, தன் மனைவியுடன் வந்து வாக்களித்தார். 

அனைத்து வேட்பாளர்களும் சாலை மறியல்

திருவண்ணாமலை சண்முகா அரசினர் மேல்நிலைப்பள்ளியில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் சரியான முறையில் தேர்தல் நடத்த வில்லை என்று கூறி, எதிரே உள்ள நெடுஞ்சாலையில் அனைத்து கட்சியை சார்ந்த வேட்பாளர்கள்  சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.



கள்ள ஓட்டு போட்ட திமுக வேட்பாளர்

திருச்சி மாநகராட்சி 56 வது வார்டுக்கு உட்பட்ட கருமண்டபம் பகுதியில் மாநகராட்சி தொடக்கபள்ளியில் அமைக்கபட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் காலை முதலே மக்கள் ஆர்வமாக ஓட்டு போட்டு வருகிறார்கள். 


இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த முத்துலட்சுமி என்பவரின் ஓட்டை, திமுக வேட்பாளர் மஞ்சுளாதேவி செலுத்தியதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து மற்ற கட்சி வேட்பாளர்கள் விசாரித்த போது அது உண்மை என தெரிய வந்ததை அடுத்து திருச்சி மாவட்ட காவல்துறை ஆணையருக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளனர். 


மேலும் இந்த விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாண்டி மீனா பேட்டி.. 




சட்டத்திற்குப் புறம்பாக திமுக வேட்பாளர் நடந்துள்ளார். ஒருவர் எப்படி இரண்டு முறை தனது ஓட்டினை செலுத்த முடியும். விதிமுறைகள் அனைத்தும் நன்கு தெரிந்தவர்கள் இது போன்ற செயலில் ஈடுபட்டால் மற்றவர்கள் என்ன செய்வார்கள்.


திமுக வேட்பாளர் கள்ள ஓட்டை போட்டு உள்ளார். அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை கண்டிப்பாக எடுக்க வேண்டும். மேலும்  அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தேமுதிக, நாம் தமிழர் கட்சி, சுயேட்சை வேட்பாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


 

திருச்சி மாநகராட்சியில் அதிக வாக்குப்பதிவு!

அதிகபட்சமாக திருச்சி மாநகராட்சியில் 26.64 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. 

செங்கல்பட்டில் மிகக்குறைந்த வாக்குப்பதிவு

தமிழ்நாட்டில் 11 மணி வாக்குப்பதிவு நிலவரப்படி மிகக்குறைந்த சதவீதம் வாக்குப்பதிவு நடந்த மாநகராட்சியாக செங்கல்பட்டு உள்ளது. குறைந்தபட்சம்10.65 சதவீதம் வாக்குகள் மட்டுமே அங்கு பதிவாகியுள்ளது. 

கி.வீரமணி வாக்களித்தார்

சென்னை அடையாறு மாநகராட்சி பள்ளியில் திக தலைவர் கி.வீரமணி வாக்களித்தார். 

காலை 11 மணி நிலவரப்படி மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளின் வாக்குப் பதிவு நிலவரம்!

இதோ முழு வாக்குப்பதிவு நிலவரம்:





சென்னையில் காலை 11 மணி நிலவரம்: 17.88 சதவீதம் வாக்குகள் பதிவு

சென்னை மாநகராட்சியில் காலை 11 மணி நிலவரப்படி 17.88 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. 

மநீம தலைவர் கமல் வாக்களிப்பு

சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல், வாக்களிப்பு. 

உள்ளாட்சியில் வாக்களிக்க அமெரிக்காவில் இருந்து வந்த குடிமகன்!

அமெரிக்காவிலிருந்து விமானம் மூலம் வந்து வாக்களித்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றிய காஞ்சிபுரத்தை சேர்ந்த இந்திய குடிமகன்.


தமிழகத்தில் நடைபெற்று வரும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவையொட்டி காஞ்சிபுரம் மாநகராட்சியில் 50 வார்டுகளுக்கான வாக்குப்பதிவு காலை முதலே தொடங்கி அனைவரும் விறுவிறுப்பான வாக்களித்து வருகின்றனர்.


இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட அப்பாராவ் பகுதியை சேர்ந்த லியாகத் ஷெரீப் என்பவரின் மகனான  இம்தியாஸ் ஷெரீப் இன்றைய தினம் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றிட அமேரிக்காவிலிருந்து விமானம் மூலம் வந்து காஞ்சிபுரம் தாமல்வார் தெருவிலுள்ள புனித சூசையப்பர் ஆரம்ப பள்ளி வாக்குப்பதிவு மையத்தில் வாக்களித்தார்.


இந்திய குடிமகனான இவர்  அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சலஸ்யில் சொந்தமாக ஐ.டி.கம்பெனி ஒன்றை நடத்தி வரும்  நிலையில் தற்போது நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்பதற்காகவே,  தான் விமான டிக்கெட்டை முன்பதிவு செய்து, அதன் மூலம் சொந்த ஊரான காஞ்சிபுரத்திற்கு வந்து  வாக்களித்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றி விட்டுள்ளதாகவும்,அனைவரும் வாக்களித்து  தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என இம்தியாஸ் ஷெரீப் தெரிவித்தார்.



மக்கள் எழுச்சியாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளனர் - கனிமொழி

மக்கள் எழுச்சியாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளனர். திமுக மீதும், முதல்வர் மீதும் மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அதன் படி திமுகவிற்கு பெருவாரியாக ஓட்டளிப்பார்கள்.

‛பேசி ஓட்டு வாங்கியது அந்த காலம்... நோட்டு வீசி ஓட்டு வாங்குவது இந்த காலம்’ -டிஆர்

ஓட்டுப் போடலாமா, வேண்டாமா என மக்கள் யோசிக்கின்றனர். ஜனநாயக கடமையை மக்கள் ஆற்ற வேண்டும். உள்ளாட்சியில் சரியானவனரை தேர்வு செய்தால், மக்கள் நலமாக வாழ வேண்டும். அந்த காலத்தில் ஊருக்கு உழைப்பவர்கள் தான் கவுன்சிலராக இருந்தார்கள். இரண்டு ஊழல் கட்சியில் எது பெரிய கட்சி என்பதில் போட்டி நடக்கிறது. பேசி வாங்கியது ஒரு காலம், நோட்டை வீசி வாங்குவது இந்த காலம்.-தியாகராயநகரில் ஓட்டளித்த பின் லட்சிய திமுக தலைவர் டிஆர் பேட்டி

‛நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க தயார்’ - துரைமுருகன்

இஸ்லாமியர்கள் குறித்து நான் ஒரு வார்த்தை கூட தவறாக  பேசவில்லை யாரோ சில பேர் ஆதாயம் தேடுவதற்காக நான் பேசியதாக கூறுகிறார்கள். நான் இஸ்லாமியரை பற்றியோ,இந்துவை பற்றியோ தவறாக ஒரு வார்த்தை பேசினேன் என சொல்ல சொல்லுங்கள். நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறேன்: துரைமுருகன்.



97 வயது மூதாட்டி வாக்களிப்பு

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சி சென் ஜோசப் பள்ளியில், 97 வயது மூதாட்டி லட்சுமி அம்மாள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தார்.



‛ஜெயலலிதா இல்லாமல் வாக்களிக்கிறேன்’ -சசிகலா கண்ணீர்

தற்போது ஜெயலலிதா இல்லாமல் முதல் முறையாக தனியாக வாக்களிக்கிறேன். இது கஷ்டமான சூழல். ஆளும் கட்சி நேர்மையாக நடந்துக் கொள்ள வேண்டும் . அராஜம் செய்யக் கூடாது என சசிகலா பேட்டி

மகன்களுடன் வந்து பிரேமலதா வாக்குப்பதிவு

தேமுதிக பொருளாளர் பிரேதலதா விஜயகாந்த் மற்றும் அவரது மகன்கள் சண்முகபாண்டியன் விஜய பிரபாகரன் ஆகியோர் விருகம்பாக்கத்தில் உள்ள காவேரி உயர்நிலைப் பள்ளியில் தங்களது வாக்கை பதிவு செய்தனர்.



ஆளும் கட்சியோ ஆண்ட கட்சி ,  மத்தியில் உள்ள ஆளுங்கட்சியும் பணம் கொலுசு,டிபன் பாக்ஸில்
 மூக்குத்தி வைத்து  வாக்காளர்களுக்கு கொடுக்கின்றனர். நியாயமாக தேர்தலில் தேமுதிக வெற்றி பெறும்- பிரேமலதா விஜயகாந்த் பேட்டி



‛அராஜகமாக தேர்தலை நடத்தக் கூடாது’ -சசிகலா பேட்டி

‛தேர்தலில் வசதிகள் செய்து தந்தால் மட்டும் போதாது... தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும்,. அராஜகம் இல்லாமல் தேர்தலை நடத்த வேண்டும்’ வாக்களித்தப் பின் சசிகலா பேட்டி.


 

கடலூர் மாவட்ட காலை 11 மணி ஓட்டு பதிவு நிலவரம்

கடலூர் மாவட்டத்தில் காலை 11 மணி நிலவரப்படி 25.44 சதவிகிதம் வாக்குபதிவு

அரியலூர் மாவட்டத்தில் காலை 11 மணி வாக்குப்பதிவு நிலவரம்

அரியலூர் மாவட்டத்தில் காலை 11 மணி நிலவரப்படி 30.79 சதவீதம் வாக்குகள் பதிவு

கள்ளக்குறிச்சி காலை 11 மணி தேர்தல் வாக்குப்பதிவு விபரம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காலை 11 மணி நிலவரப்படி பதிவான வாக்குள் விகிதம் 28.97

ராமநாதபுரம் காலை 11 மணி வாக்குப்பதிவு நிலவரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் காலை 11 மணி நிலவரப்படி 19.07 சதவீதம் வாக்குகள் பதிவாகின. 

விழுப்புரம் காலை 11 மணி வாக்குப்பதிவு விபரம்

விழுப்புரம் மாவட்டத்தில் காலை 11 மணி நிலவரப்படி 28.05 சதவீம் வாக்குகள் பதிவாகியுள்ளது. 


 

திருச்சி காலை 11 மணி வாக்குப்பதிவு நிலவரம்

திருச்சிமாவட்டத்தில் காலை 11 மணி நிலவரப்படி 29 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. 

செங்கல்பட்டு காலை 11 மணி ஓட்டு நிலவரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் காலை 11 மணி நிலவரப்படி 10.65 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. 


 

தென்காசி காலை 11 மணி பதிவான ஓட்டுகள் நிலவரம்

தென்காசி மாவட்டத்தில் காலை 11 மணி நிலவரப்படி 15.07 சதவீதம் வாக்குகள் பதிவாகின. 

சேலத்தில் அதிகரித்த வாக்கு எண்ணிக்கை

சேலத்தில் காலை 11 மணி நிலவரப்படி 33.03 சதவீதம் வாக்குகள் பாதிவாகியுள்ளன. 

விழுப்புரம் காலை 11 மணி நிலவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் காலை 11 மணி நிலவரப்படி 38.05 சதவீதம் வாக்குகள் பதிவாகின. 

திருச்சி காலை 11 மணி நிலவரம்

திருச்சி மாவட்டத்தில் காலை 11 மணி நிலவரப்படி 25 சதவீதம் வாக்குகள் பாதிவாகின.

ராமநாதபுரம் காலை 11 மணி நிலவரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் காலை 11 மணி நிலவரப்படி 19.07 சதவீதம் வாக்குகள் பதிவாகின 

நாகை காலை 11 மணி நிலவரப்படி விழுந்த வாக்குகள்!

நாகை மாவட்டத்தில் காலை 11 மணி நிலவரப்படி 23.52 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

கன்னியாகுமரி 11 மணி தேர்தல் நிலவரம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் காலை 11 மணி நிலவரப்படி 21 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. 

மயிலாடுதுறையில் 11 மணி ஓட்டு நிலவரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் காலை 11 மணி நிலவரப்படி 21.93 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

நேரத்தை அதிகரிக்கும் திட்டமில்லை- தேர்தல் ஆணையர்

வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதான பகுதிகளில் வாக்களிக்கும் நேரத்தை அதிகரிக்கும் எண்ணம் எதுவும் இல்லை என் மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் தெரிவித்துள்ளார்

மகனுடன் வந்து வாக்களித்த ஓபிஎஸ்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகனான தேனி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவி இருவரும் பெரியகுளம் பகுதியில் வாக்களித்தனர்.





மனைவியுடன் வாக்களித்த உதயநிதி

சென்னை தேனாம்பேட்டை வாக்குச்சாவடியில் உதயநிதி ஸ்டாலின், தனது மனைவி கிருத்திகாவுடன் சென்று வாக்களித்தார். 

மாலை 5 மணிக்குள் வாக்குச்சாவடிக்குள் வந்தால் வாக்களிக்க அனுமதி

மாலை 5 மணிக்குள் வாக்குச்சாவடிக்குள் வந்து, அவர்கள் ஓட்டளிக்க நேரம் கடந்தாலும், அனுமதி வழங்கப்படும் என தேர்தல் ஆணையர் பழனிக்குமார் பேட்டி

6 வார்டுகளில் தேர்தல் நடைபெறவில்லை- தேர்தல் ஆணையம்

தமிழ்நாட்டில் 6 இடங்களில் வேட்பாளர்கள் இறந்ததால், அங்கு தேர்தல் நடைபெறவில்லை என் மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் பேட்டி

சென்னையில் வாக்குப்பதிவு சூடுபிடிக்கும்- தேர்தல் ஆணையர் நம்பிக்கை!

சென்னை மாநகராட்சியில் குறைவான வாக்கு பதிவானதாக கூறப்பட்ட நிலையில், இனிமேல் சூடுபிடிக்கும் என நம்புகிறேன். இப்போது சென்னையில் வாக்காளர்கள் வரத்தொடங்கியிருப்பதாக தகவல் வருகிறது. 

தமிழ்நாட்டில் 8.21 சதவீதம் வாக்குகள் பதிவு- தேர்தல் ஆணையம் அறிவிப்பு

‛மாநகராட்சிகளில் 5.78 சதவீதம், நகராட்சிகளில் 8.21 சதவீதம், பேரூராட்சிகளில் 11.74 சதவீதம் என தமிழ்நாட்டில் மொத்த 8.21 சதவீதம் வாக்குகள் இதுவரை பதிவாகியுள்ளது. வாக்குப்பதிவு சுமூகமாக நடந்து வருகிறது. மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் தேர்தல் நிலவரங்களை கூறி வருகின்றனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கோளாறுகள் உடனுக்குடன் சரிசெய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என் தேர்தல் ஆணையர் பழனிக்குமார் பேட்டி 

தாம்பரத்தில் அதிமுக-திமுக மோதல்!

சென்னை தாம்பரம் மாநகராட்சி உட்பட்ட 
70 வார்டுகளில் 683 சுயேட்சை மற்றும் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.


இதனையடுத்து பொதுமக்கள் வாக்களிப்பதற்காக 703 வாக்குசாவடிகள் தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் தயார் செய்யபட்டுள்ள நிலையில் 27 வாக்குசாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியபட்டு கூடுதல் போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதன் ஒரு பகுதியாக தாம்பரம் அடுத்த வார்டு எண் 70 வில் உள்ள புனித தோமையார் ஒன்றிய தொடக்க பள்ளி வாக்கு சாவடியில் வாக்களிப்பதற்காக அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தேவந்திரனுக்கும் அதே வார்ட்டில் திமுக சார்பில் போட்டியிடும் ஜெயராமனின் ஆதரவாளர் மோகன ரங்கன் ஒரே சமயத்தில் வாக்கு மையத்தில் கூடியதால் இருவருக்கும்  இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது இதனை கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த போலிசார் இருவரையும் சமாதானபடுத்தியதால் அனைவரும் கலைந்து சென்றனர்.


இதனால் வாக்குசாவடி மையத்தில் சிறிது நேரம் பதற்றம் நிலைவியது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 9.02 சதவீதம் வாக்குப்பதிவு

மயிலாடுதுறை மாவட்டத்தில் காலை 9 மணி நிலவரப்படி 9.02 சதவீதம் வாக்குகள் பதிவு

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 8.05 சதவீதம் வாக்குப்பதிவு

நாகை மாவட்டத்தில் 8.05 சதவீதம் வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது ; இது காலை 9 மணி நிலவரம்

விழுப்புரத்தில் 11.37 சதவீதம் வாக்குகள் பதிவு

விழுப்புரம் மாவட்டத்தில் காலை 9 மணி நிலவரப்படி 11.37 சதவீதம் வாக்குகள் பதிவு

திருவள்ளூர் மாவட்டத்தில் 6.25 சதவீதம் வாக்குப்பதிவு

திருவள்ளூர் மாவட்டத்தில் காலை 9 மணி நிலவரப்படி 6.25 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. 

தென்காசி 13 சதவீதம் வாக்குப்பதிவு

தென்காசி மாவட்டத்தில் காலை 9 மணி நிலவரப்படி 13 சதவீதம் வாக்குகள் பதிவு

திண்டுக்கல் 12.01 சதவீதம் வாக்குப்பதிவு

திண்டுக்கல் மாவட்டத்தில் 12.01 சதவீதம் வாக்குகள், காலை 9 மணி வரை பதிவாகியுள்ளது.

திருப்பூர் 8.09 சதவீதம் வாக்குப்பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் காலை 9 மணி நிலவரப்படி 8.09 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. 

தஞ்சை மாவட்டத்தில் 6.01 சதவீதம் வாக்குப்பதிவு

தஞ்சை மாவட்டத்தில் காலை 9 மணி நிலவரப்பட்டி 6.01 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது

அரியலூர் மாவட்டத்தில் 12.84 சதவீதம் வாக்குப்பதிவு

அரியலூர் மாவட்டத்தில் காை 9 மணி நிலவரப்படி 12.84 சதவீதம் வாக்குகள் பதிவு

தருமபுரி 10 சதவீதம் வாக்குகள் பதிவு

தருமபுரி மாவட்டத்தில் காலை 9 மணி நிலவரப்பட்டி 10 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 9.33 சதவீதம் வாக்குப்பதிவு

காலை 9 மணி நிலவரப்பட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 9.33 சதவீதம் வாக்குகள் பதிவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் 7 சதவீதம் வாக்கு பதிவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் காலை 9 மணி நிலவரப்படி 7 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. 

ராணிப்பேட்டையில் 7.02 சதவீதம் வாக்குப்பதிவு

 ராணிப்பேட்டை மாவட்டத்தில் காலை 9 மணி நிலவரப்படி7.02 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. 

நாமக்கல் மாவட்டத்தில் 12.75 சதவீதம் வாக்கு

நாமக்கல் மாவட்டத்தில் 12.75 சதவீதம் வாக்குகள் காலை 9மணி நிலவரப்படி பதிவாகியுள்ளது. 

தேனி மாவட்டத்தில் 12.73 சதவீதம் வாக்குப்பதிவு

தேனி மாவட்டத்தில் காலை 9 மணி நிலவரப்படி 12.73 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. 

வேலூரில் 8.82 சதவீதம் வாக்குகள்

வேலூர் மாவட்டத்தில் காலை 9 மணி நிலவரப்படி, 8.82 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது

சேலம் 12 சதவீதம் வாக்குப் பதிவு

சேலம் மாவட்டத்தில் காலை 12 மணி நிலவரப்படி 12 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

திருவண்ணாமலையில் 9.21 சதவீதம் வாக்குகள் பதிவு


திருவண்ணாமலை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 10 மணி நிலவரப்படி பேரூராட்சி பகுதிகளில் 11.90% திருவண்ணாமலை நகராட்சி பகுதிகளில் 7.90% வாக்குகள் பதிவாகியுள்ளன..


மொத்தமாக 9.21% வாக்குகள் பதிவாகி உள்ளது

மகிழ்ச்சியுடன் வாக்களித்த நரிக்குறவர்கள்

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் 96 நரிக்குறவர் குடும்பங்களைச் சேர்ந்த 168 வாக்காளர்கள் உள்ளனர், இவர்களில் 128 பேர் கடந்த சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த  நிலையில் உள்ளாட்சி தேர்தலில் இந்த ஆண்டு முதன்முறையாக 40 வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு அவர்களும் ஆர்வமுடன் வாக்களித்து சென்றனர். 



கோவையில் 8.60 சதவீதம் வாக்குகள் பதிவு

கோவை மாவட்டத்தில் 9 மணி நிலவரப்படி 8.60 சதவீதம் வாக்குப்பதிவு


மாநகராட்சியில் 6.79 சதவீதம்


7 நகராட்சிகளில் 10.38 சதவீதம்


33 பேரூராட்சிகளில் 13.42 சதவீதம் வாக்குப்பதிவு


நகரப்பகுதிகளை விட பேரூராட்சி பகுதிகளில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகம்

சென்னையில் 3.96 சதவீதம் வாக்குப்பதிவு

சென்னை மாநகராட்சியில் காலை 9 மணி நிலவரப்படி 3.96 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது

மதுரையில் 6.43 சதவீதம் வாக்குப்பதிவு

மதுரை மாவட்டத்தில் காலை 9 மணி நிலவரப்படி 6.43 சதவீதம் வாக்குகள் உள்ளாட்சி தேர்தலில் பதிவாகியுள்ளது

மதுரையில் வாக்குப்பதிவு நிறுத்தம்

மதுரை காமராசர் சாலை 43 வது வார்டு வாக்கு சாவடி பதிவு எந்திரம் 518ஏ கோளாறு காரணமாக வாக்குபதிவு நிறுத்தம்

செங்கல்பட்டு வாக்கு சதவீதம் நிலவரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் 9 மணி நிலவரப்படி


1.மாநகராட்சி


  தாம்பரம்- 3.30%


2. நகராட்சிகள்


 செங்கல்பட்டு, மறைமலைநகர், நந்திவரம்-கூடுவாஞ்சேரி, மதுராந்தகம் ஆகிய 4 நகராட்சிகளுக்கு- 6.60%


3. பேரூராட்சிகள்


கருங்குழி,அச்சரபாக்கம், இடைக்கழிநாடு, திருக்கழுக்குன்றம், திருப்போரூர், மாமல்லபுரம் ஆகிய 6 பேர் பேரூராட்சிகளுக்கு - 10.86%


மொத்தம் மாவட்டம் முழுவதும் 4.63 % வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது.

திண்டிவனத்தில் வாக்களித்த டாக்டர் ராமதாஸ்

விழுப்புரம் : திண்டிவனம் நகராட்சி தேர்தல்: பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், ரொட்டி கார தெருவில் உள்ள தாகூர் பள்ளியில் வாக்கினை பதிவு செய்தார்.



அமைச்சர் தா. மோ. அன்பரசன் வாக்களித்தார்

நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் குன்றத்தூர் வள்ளுவர் அரசு நடுநிலைப் பள்ளியில் காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளருமான -  தமிழக சிறு - குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சருமான தா. மோ. அன்பரசன் தனது வாக்கை பதிவு செய்தார்.



ஏன் தனித்துப் போட்டி- குஷ்பூ பேட்டி

சென்னையில் வாக்களித்தப் பின் செய்தியாளர்களை சந்தித்த பாஜக செய்தி தொடர்பாக குஷ்பூ , ‛தைரியம் இருப்பதால் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடுவதாக,’’ பேட்டியளித்தார். 

மதுரையில் வாக்காளரின் ஹிஜாப்பை அகற்ற கூறிய பாஜக முகவர் வெளியேற்றம்!

மதுரை மாவட்டம் மேலூரில் 8 வது வார்டில் அல்அமீன் பள்ளியில் வாக்களிக்க வந்த வாக்காளரின், ஹிஜாப்பை அகற்றக் கோரி பாஜக முகவர் கூறினார். அதற்கு மற்ற கட்சிகளின் முகவர்கள் , தேர்தல் அலுவலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அந்த முகவர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். 

துணை சபாநாயகர் கு‌. பிச்சாண்டி வாக்களித்தார்

தமிழ்நாடு துணை சபாநாயகர் கு‌. பிச்சாண்டி திருவண்ணாமலை நகராட்சியில் உள்ள சண்முகா அரசினர் மேல்நிலைப் பள்ளியில் வாக்களித்தார்.



ஏபிபி செய்தி எதிரொலி: மாற்றுத்திறனாளி வேட்பாளர்களுக்கு வசதி

உள்ளாட்சித் தேர்தல் இன்று நடைபெறுவதையொட்டி தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில்  முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்கு செலுத்த வருபவர்களுக்கு வசதிகள் இல்லை என ஏபிபி நாடு செய்தி வெளியான நிலையில் செய்தி எதிரொலியாக மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கான வசதிகள் கண்காணிக்கப்பட்டு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.



தேனி மாவட்டத்தில் 12.01 சதவீதம் வாக்குகள் பதிவு

தேனி மாவட்டத்தில் மொத்த மூன்று உள்ளாட்சி பகுதிகளுக்கான தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 12.01 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. 

நெல்லையில் 11 சதவீதம் வாக்குப்பதிவு

நெல்லை மாவட்டத்தில் காலை 9 மணி நிலவரப்படி 11 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.


ஆண்கள் -     14923
பெண்கள் - 11132
மொத்தம் -  26055


ஆகியோர் இதுவரை வாக்களித்துள்ளனர். 

கோவையில் ராணுவம் வரும் அளவிற்கு எதுவும் நடக்கவில்லை- ஸ்டாலின்

சென்னையில் வாக்களித்தப் பின் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், கோவையில் ராணுவம் பாதுகாப்புக்கு வரும் அளவிற்கு எந்த சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படவில்லை என்று பேட்டியளித்தார்.

மனைவியுடன் வந்து வரிசையில் நின்று வாக்களித்த முதல்வர் ஸ்டாலின்

சென்னை தேனாம்பேட்டையில் முதல்வர் ஸ்டாலின், மனைவி துர்கா ஸ்டாலினுடன் வந்து வரிசையில் நின்று வாக்களித்தார்.

அரை நிர்வாணத்துடன் வாக்களித்த வந்த நகை மதிப்பீட்டாளர்

சிவகங்கையில் நகை மதிப்பீட்டாளர் மகேஷ்பாபு என்பவர் அரை நிர்வாணத்துடன்  வாக்களிக்க வந்ததால் பரபரப்பு. அரை நிர்வாணத்துடன் வாக்களிக்க வந்தவரை  போலீசார் தடுத்ததால்  வாக்குவாதம் ஏற்பட்டது. பணிநிரந்தர கோரிக்கையை முன்வைத்து அவர் அவ்வாறு வந்தார். 



வானதி சீனிவாசன் வாக்களித்தார்

பா.ஜ.க மகளிரணி தேசிய தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., கோவை டாடாபாத் பகுதியில் உள்ள காமராஜர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் வாக்களித்தார்.



வாக்குப்பதிவு இயந்திரம் பழுது: காத்திருந்த திருச்சி சிவா

திருச்சி மாநகராட்சி 54வது வார்டுக்கு உட்பட்ட திருச்சி மத்திய பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள  வெஸ்ட்டரி மேல்நிலைப்பள்ளி   வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுது ஆனதால் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா காத்திருக்கின்றார். 



வாக்களித்த மதுரை எம்பி வெங்கடேசன்

மதுரை எம்.பி., எம்.பி வெங்கடேசன் வாக்களித்தார். ஹார்விப்பட்டி சுவாமி விவேகானந்தா வித்யா மந்திர் பள்ளியில் அவர் தன் வாக்கை செலுத்தினார்
.

நயினார் நாகேந்திரன் வாக்களித்தார்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பாஜக மாநிலத் துணைத் தலைவரும் நெல்லை சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன்  பாளையங்கோட்டை ஐகிரவுண்டு ஜெயேந்திரா பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறும் பொழுது,


அதிமுக தரப்பில் பணம் வழங்கப்படவில்லை, பாஜக தரப்பிலும் பணம் வழங்கப்படவில்லை நாங்கள் மக்களை நம்பி தேர்தலை சந்திக்கிறோம். தமிழகம் முழுவதும் ஆளுங்கட்சி தரப்பில் 100% வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடந்துள்ளது என தெரிவித்தார்

மக்கள் வாக்களித்து வெறுத்து விட்டனர் -சீமான்

மக்களுக்கு, மாற்றி மாற்றி இரு கட்சிகளுக்கு வாக்களித்து வெறுத்து விட்டனர். அதனால் ஆர்வமில்லாத வாக்குப்பதிவு நடக்கிறுது- நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி

இயந்திரம் பழுது... மாற்று இயந்திரம் பயன்பாடு!

காஞ்சிபுரம் மாநகராட்சி திருக்காலிமேடு 52வது ஓட்டுச்சாவடியில், இயந்திரம் பழுதானதால், மாற்று இயந்திரம் பயன்படுத்தபட்டு வருகிறது

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : வாக்களித்தார் அமைச்சர் மா.சு

சென்னை கிண்டியில் தமிழ்நாடு மக்கள் நல் வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தனது வாக்கினை செலுத்தினார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : சாலிகிராமம் வாக்குச்சாவடியில் வாக்களித்தார் சீமான்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை சாலிகிராமம் வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்தினார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடைபெற்று வருகிறது : மாநில தேர்தல் ஆணையம்

தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடைபெற்று வருவதாக மாநில தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. 

தைரியம் இருப்பதால்தான் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடுகிறது - குஷ்பு

சென்னையில் வாக்களித்தார் குஷ்பு. செய்தியாளர்கள் பாஜக தனித்துப் போட்டியிடுவது குறித்து கேட்டபோது, ”தைரியம் இருப்பதால்தான் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடுகிறது” என்றார் குஷ்பு.

கரூரில் அதிமுகவினர் வழங்கவிருந்த மொபைல் போன்கள் பறிமுதல்


அமைச்சர் மூர்த்தி வாக்களித்தார்

அமைச்சர் பி.மூர்த்தி மதுரை அய்யர்பங்களா பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்தினார். மதுரை மாநகராட்சி 8வது வார்டு பகுதி வேட்பாளருக்கான தேர்தலுக்கு அவர் வாக்கு செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.



திருவாரூரில் கொட்டும் மழையில் வாக்குப்பதிவு செய்யும் வாக்காளர்கள்

திருவாரூரில் மழையையும் பொருட்படுத்தாமல் ஆர்வத்துடன் பொது மக்கள் வாக்களித்து வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் 216 வார்டுகளுக்கு 282 வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. மிதமான மழைக்கு இடையில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். மாவட்டம் முழுவதும் 37 வாக்குச்சாவடி மையங்கள் பதட்டமான வாக்குச்சாவடி மையங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதல் திருவாரூர் மாவட்டத்தில் லேசான மழை பெய்து வருகிறது. வாக்காளர்களுக்கு முகக்கவசம் கையுறை கிருமிநாசினி வழங்கிய பின்னரே வாக்களிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.



தில்லுமுல்லு செய்யப் பார்க்கும் திமுக- வேலுமணி குற்றச்சாட்டு

கோவை அதிமுகவிற்கு சாதகமாக இருப்பதால், அதை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்பதற்காக ஏதாவது தில்லுமுல்லு செய்ய திமுக முயல்கிறது. -முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவையில் பேட்டி

வாக்கு செலுத்திய அமைச்சர் அன்பில் மகேஷ்

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி  58 வது வார்டு கிராப்பட்டி பகுதியில் அமைந்துள்ள லிட்டில் ஃப்ளவர் மேல்நிலைப்பள்ளியில் நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலுக்கான தனது வாக்கினை செலுத்தினார். 



வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த முகவர்கள்

 


மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. காலை 7 மணி முதல்   விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்கு செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் 6 வது வார்டில் காஞ்சி சங்கர வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி எண் 8 -ல் முகவர்கள் வாக்கு செலுத்த வரும் பொதுமக்களிடம் வாக்குப்பதிவு நடைபெறும் அறையின் உள்ளேயே வாக்கு சேகரித்தால் பரபரப்பு ஏற்பட்டது. 


பின்னர், அந்த வார்டில் போட்டியிடும் அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட வேட்பாளர்கள் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காவல்துறையினர் வந்து அவர்களை அப்புறப்படுத்தினர். இதை தொடர்ந்து, வாக்குப்பதிவு சுமுகமாக நடைபெற்று வருகிறது.

மார்க்சிஸ்ட் வேட்பாளர் மீது தாக்குதல்: திடீர் மறியலால் பரபரப்பு

காஞ்சிபுரம் மாநகராட்சித் தேர்தலில் 12வது வார்ட கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சூர்யாவை ஏடிஎஸ்பி கணேஷ் சாந்தா தாக்கியதாக குற்றச்சாட்டு,  காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிர்வாகிகள் போராட்டம்.


 

கரூரில் வாக்காளர்களுக்கு வினியோகிக்க வைத்த செல்போன்கள் பறிமுதல்

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட 38வது வார்டு பகுதிகளில் வாக்காளர்களுக்கு வினியோகம் செய்ய வைத்திருந்த 37 செல்போன்கள் மற்றும் டோக்கன்கள் பறிமுதல். பொதுமக்கள் அளித்த ரகசிய தகவலின் அடிப்படையில் பசுபதிபாளையம் போலீசார் பறிமுதல் செய்தனர். சம்பவ இடத்திற்கு தேர்தல் பறக்கும் படையினர் விரைந்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

கடலூரில் இயந்திரங்கள் சரிசெய்யப்பட்டு வாக்குப் பதிவு தொடக்கம்

கடலூர் மாவட்டத்தில் 8 இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுதான நிலையில் அவை சரி செய்யப்பட்டு தற்போது மீண்டும் அனைத்து இடங்களிலும் வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது.


கடலூர் மாநகராட்சி 5வது வார்டு, பண்ருட்டி நகராட்சியின் 28 வது வார்டு, விருத்தாசலம் நகராட்சி 5வது வார்டு, சிதம்பரம் நகராட்சி 14வது வார்டு, மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி 12வது வார்டு, அண்ணாமலைநகர் பேரூராட்சி 12வது வார்டு, லால்பேட்டை பேரூராட்சி 13வது வார்டு, வடலூர் நகராட்சி 15வது வார்டு ஆகிய 8 இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது.


10 முதல் 30 நிமிடங்களில் பழுதுகள் நீக்கப் பட்டு அனைத்து இடங்களிலும் தற்போது வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.



தஞ்சையில் வாக்காளர்கள் ஆர்வம்

தஞ்சாவூர் மாநகராட்சியில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் முன்னிட்டு தூய பேதுரு மேல்நிலைப்பள்ளியில் ஆர்வமுடன் வாக்களிப்பதற்காக வரிசையில் நிற்கும் வாக்காளர்கள்.



பெரம்பலூரில் வாக்கு வாதம்

பெரம்பலூரில் திமுகவினரை அதிக அளவில் வாக்குச்சாவடிக்குள் அனுமதித்தாக அதிமுக, தேமுதிக வேட்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம்

பெரம்பலூரில் வாக்

பெரம்பலூரில் திமுகவினரை அதிக அளவில் வாக்குச்சாவடிக்குள் அனுமதித்தாக அதிமுக, தேமுதிக வேட்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம்

தூத்துக்குடி அதிமுக மேயர் வேட்பாளர் வாக்குப்பதிவு

தூத்துக்குடி மாநகராட்சி அதிமுக மேயர் வேட்பாளராக போட்டியிடும் எஸ்.பி.எஸ் ராஜா தனது வாக்கினை தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் செலுத்தினார்.



ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்

நெல்லை விக்கிரமசிங்கபுரம் நகராட்சிக்குட்பட்ட வாக்குச்சாவடியில் ஆர்வமுடன் வந்து வாக்களிக்கும் பொதுமக்கள். மாற்றுத்திறனாளி வாக்காளர் ஒருவர் காலையிலையே ஆர்வமுடன் வந்து வாக்களித்தார்.



ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்த மக்கள் முடிவு - இவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி

சென்னையில் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு செய்த காங்கிரஸ் மூத்த தலைவர் இவிகேஎஸ் இளங்கோவன், தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்த திமுக கூட்டணிக்கு வாக்களிப்பார்கள் என்று பேட்டி அளித்தார். 

திருப்பூரில் வாக்குப்பதிவு தாமதம்

திருப்பூர் மாநகராட்சி 42 வது வார்டு வாக்குச்சாவடி எண் 406ல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு காரணமாக, வாக்குப் பதிவு தாமதம்

திருவாரூரில் கொட்டும் மழையில் வாக்குப்பதிவு

திருவாரூரில் கொட்டும் மழையில் குடை பிடித்தபடி வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர். 

திருவாரூரில் கொட்டும் மழையில் வாக்குப்பதிவு

திருவாரூரில் கொட்டும் மழையில் குடை பிடித்தபடி வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர். 

அரூரில் வாக்காளர்களுக்கு அ.தி.மு.க வினர்  கால்கொலுசு வழங்கியதாக, தி.மு.கவினருக்கும், அதிமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு

தர்மபுரி மாவட்டம் அரூர் பேரூராட்சிக்குட்பட்ட உள்ளாட்சி தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் 10வது வார்டில் தி.மு.க. சார்பில் உமாராணியும், அ.தி.மு.க. சார்பில் சுகன்யாவும் போட்டியிடுகின்றனர்.  தற்போது தில்லைநகர் பகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்காளர்களுக்கு அ.தி.மு.க.வினர் கால்கொலுசு வழங்கியதாகவும், அதனை தடுத்து பிடுங்கிய போது  தம்மை தாக்கியதில் காயமடைந்ததாக அரூர் காவல் நிலையத்தில் தி.மு.க. வேட்பாளர் உமாராணி புகார் அளித்தார். 
இதனை தொடர்ந்து, நான்குரோட்டில் உள்ள  அ.தி.மு.க நகர ஜெ பேரவை செயலாளர் செந்தில் என்பவரது வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் மற்றும் கால் கொலுசுகளை பதுக்கி வைத்திருப்பதாக கூறி தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர், 100-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். ஆத்திரமடைந்த திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்பு அங்கு வந்த அரூர் டி.எஸ்.பி பெனாசிர் பாத்திமா மற்றும் போலீசார் சம்மந்தப்பட்ட வீட்டில் சோதனை செய்ததில், பணம் மற்றும் பரிசு பொருட்கள் எதுவும் இல்லை என்பது தெரிந்ததையடுத்து, தி.மு.க.வினர் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அரூர்–சேலம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மதுரை ஆட்சியர் வாக்களித்தார்

நகர்புற உள்ளாட்சித்தேர்தல் மதுரை ஆயுதப்படை மைதானம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் உள்ள வாக்கு பதிவு மையத்தில் உயர்திரு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வாக்கு செலுத்தினார்.



பூத் ஏஜெண்ட்டுகள் வராததால் வாக்குப்பதிவு தொடங்கவில்லை

நெல்லை பணகுடி 10வது வார்டில் பூத் ஏஜண்டுகள் வராததால், வாக்குப்பதிவு தொடங்கவில்ைீ. 

காலையிலேயே வாக்களித்த பிரபலங்கள்

உள்ளாட்சி வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், அரசியல், அதிகாரிகள் , அமைச்சர்கள் என பிரபலங்கள் பலரும் காலையிலேயே தங்கள் வாக்கை செலுத்தி வருகின்றனர். 

சென்னை மாநகராட்சி ஆணையர் வாக்களித்தார்

சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி விருகம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் குடும்பத்துடன் சென்று வாக்களித்தார்.


 

சில இடங்களில் வாக்குப் பதிவு தாமதம்

வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, சில இடங்களில் வாக்குப்பதிவு தொடங்க தாமதம் ஆகி வருகிறது

தேர்தல் ஆணையர் வாக்களித்தார்

மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார்

திருச்சியில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு

திருச்சி மாநகராட்சி உள்ளிட்ட மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடந்து வருகிறது.



விருகம்பாக்கத்தில் ஆளுநர் தமிழிசை வாக்களிப்பு

தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை, சென்னை விருகம்பாக்கத்தில் தனது உள்ளாட்சி வாக்கை பதிவு செய்தார்

ராசியான சிறப்பு ஆல்டோ காரில் வாக்களிக்க வந்த விஜய்

சென்னை நீலாங்கரை உள்ள வாக்குச்சாவடியில், தனது வாக்கை செலுத்துவதற்காக தனது விருப்ப சிவப்பு நிற ஆல்டோ காரில் விஜய் வருகை தந்தார். கடந்த சட்டமன்ற தேர்தலில் சைக்கிளில் வந்து ஓட்டளித்து பரபரப்பை ஏற்படுத்திய விஜய், இம்முறை காரில் வாக்களிக்க வந்தார்.

1.13 லட்சம் போலீசார் பாதுகாப்பு

தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவு பணியில் 1.13 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

மாதிரி வாக்குப்பதிவு

கொரோனா வைரஸ் தொற்று பரவ விதிமுறைகளை பின்பற்றி வாக்குப்பதிவு, துவங்குவதற்கு தயார் நிலையில் வாக்குச் சாவடிகள்.. முன்னதாக மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது.



30785 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு

தமிழ்நாடு முழுதும் 30785 வாக்குச்சாவடிகளில் இன்று ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : எந்தெந்த பதவிகளுக்கு தேர்தல்..?

மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவி:









போட்டியின்றி தேர்வானவர்கள்: 4 


தேர்தல் நடக்கும் பதவியிடங்கள்: 1370


தேர்தலில் போட்டியிடும் நபர்கள்: 11,196


நகராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவி:


மொத்த பதவியிடங்கள்: 3843


போட்டியின்றி தேர்வானவர்கள்: 18


தேர்தல் நடக்கும் பதவியிடங்கள்: 3825


தேர்தலில் போட்டியிடும் நபர்கள்: 17,922


பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவி: 


மொத்த பதவியிடங்கள்: 7609


போட்டியின்றி தேர்வானவர்கள்:196 


தேர்தல் நடக்கும் பதவியிடங்கள்: 7412


தேர்தலில் போட்டியிடும் நபர்கள்: 28,660


மொத்தமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 218 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எனவே இன்று நடைபெறும் தேர்தலில் மொத்தமாக 12,607 பதவியிடங்களுக்கு 57,778 பேர் போட்டியிட்டுள்ளனர். 

TN Urban Local Body Election : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : இன்னும் சற்று நேரத்தில் வாக்குப்பதிவு..

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்னும் சற்று நேரத்தில் தொடங்க இருக்கிறது. 

மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது..

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது. 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் எப்போது..?

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைப்புகளுக்கு இன்று தேர்தல் நடத்தப்பட்டு பிப். 22 ல் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றனர். 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முழு விவரம்..!

21 மாநகராட்சி, 138 நகராட்சி, 489 பேரூராட்சிகள் என 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று தேர்தல் நடைபெற இருக்கிறது. 

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாக்கு செலுத்த எப்போது அனுமதி..?

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்கு செலுத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : வாக்குப்பதிவு நேரம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழ்நாடு முழுவதும் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற இருக்கிறது. 

Background

தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் ஆகியவற்றிற்கு நாளை தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என மொத்தமாக 12,838 பதவிகளுக்கு  தேர்தல் நடைபெறுகிறது. இந்தப் பதவிகளுக்கு  ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தயாராகி இருந்தனர். நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவு பெற்றது. இதைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. 


இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடுகளைக் குறித்து மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அதில், “வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாக பாதுகாப்பு பணிகள் விரிவாக செய்யப்பட்டுள்ளன.30,735 வாக்குச்சாவடிகள் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ளன. சட்ட ஒழுங்கைப் பேணிக்காக்க சுமார் ஒரு லட்சம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தமாக 295 இடங்களில் தேர்தல் நடைபெறவில்லை. அதாவது 218 இடங்களில் போட்டியின்றி வெற்றி மற்றும் ஒரு சில இடங்களில் வேட்பாளர்கள் மரணம் ஆகியவற்றால் அங்கு தேர்தல் நடைபெறவில்லை. 


தமிழகம் முழுவதும், 5,960 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. சென்னையில்  மூவர் உட்பட 38 மாவட்டங்களில் மொத்தம் 41 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவையில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான காவலர்கள் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்குப்பதிவு முடிந்த பிறகு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பத்திரமாக சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படும். அந்த அறைகள் அனைத்தும் சிசிடிவி கேமரா கண்காணிப்புடன் இருக்கும். மேலும் கூடுதலாக காவலர்களும் அந்தப் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். வரும் 22ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் 268 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளார். 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.