தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கடந்த முறை நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தமிழகத்தில் போட்டியிட்டு பல இடங்களில் வெற்றி பெற்றனர். அந்த வெற்றியைத் தொடர்ந்து அதே உற்சாகத்தில் தற்போது நடைபெற உள்ள தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கத்தினர் தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றன.
அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக இன்று இரண்டு வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். முன்னதாக அருணா பெட்ரோல் பங்கு அருகிலிருந்து இரு சக்கர வாகனங்களில் புடைசூழ வேட்பாளர்கள் சைக்கிளில் பேரணியாக ஒரு கிலோ மீட்டர் தூரம் விஜய் மக்கள் இயக்கத்தினர் அழைத்து வந்தனர்.
Urban Local Body Election: காஞ்சிபுரம் மாநகராட்சியில் திமுகவிற்கு எதிராக களமிறங்கும் விசிக
தொடர்ந்து நகராட்சி அலுவலகம் அருகே டிரம்ஸ் வாத்தியங்கள் முழங்க விஜய் மக்கள் இயக்கத்தினர் மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட 24 வது வார்டில் போட்டியிடும் மாவட்ட மாணவரணி தலைவர் பிரபாகரன் என்பவரின் தாயார் காமாட்சி என்பவரும், 26 வது வார்டில் 21 வயது பொறியியல் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டதாரியும் நகர துணைத் தலைவருமான முகமது ஆசிப் ஆகிய இருவரும் அழைத்து வந்து வேட்புமனு தாக்கல் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று வரை மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய இரண்டு நகராட்சிகளில் 32 பேரும், குத்தாலம் ,மணல்மேடு, தரங்கம்பாடி, வைத்தீஸ்வரன்கோயில் ஆகிய நான்கு பேரூராட்சிகளில் 11 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட திமுக, அதிமுக வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்யாத நிலையில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும், சுயேட்சையாகவும் பலர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்று தளர்வுகள் காரணமாக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாக்கு சேகரிப்பு மாவட்ட முழுவதும் உள்ளாட்சி தேர்தலை சூடுபிடிக்க வைத்துள்ளது.
Local body election | பிபிஇ உடை அணிந்தபடி வந்து வேட்பு மனுத் தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர்