பிரதமர் மோடி தலைமையிலான மத்திய  அரசின் செயல்பாடு தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றன. அந்தவகையில் நேற்று மக்களவையில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் விமர்சனம் செய்தனர். 


அந்தவகையில் தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ்  தொடர்ந்து மத்திய அரசை விமர்சனம் செய்து வந்தார். அதில்,”இந்தாண்டு மத்திய பட்ஜெட்டில் மக்களுக்கு சாதகமான விஷயங்கள் எதுவும் இல்லை. இது சாதாரண மக்கள், விவசாயிகள் மற்றும் ஏழைய எளிய மக்களுக்கு ஒரு பயனும் தந்ததாக தெரியவில்லை. இது மொத்தத்தில் ஒரு பூஜ்ஜிய பட்ஜெட். பாஜக ஒரு வெட்கம் இல்லாத கட்சி. அந்த கட்சி வங்காள விரிகுடாவில் மூழ்கடிக்கப்படவேண்டிய ஒன்று. அடுத்த பொதுத் தேர்தலில் மற்ற கட்சிகளுடன் இணைந்து பாஜகவை வீழ்த்துவோம்” எனக் கூறியுள்ளார். 






இந்நிலையில் இதுகுறித்து மத்திய இணையமைச்சர் ராம்தாஸ் அதாவ்லே ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். அதில், “தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் பாஜகவை வங்காள விரிகுடாவில் மூழ்கடிக்க வேண்டும் என்று கூறியது கண்டனத்திற்குரியது. அவருடைய கட்சியை கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமம் இடத்தில் மூழ்கடிப்போம்” எனத் தெரிவித்துள்ளார். 






முன்னதாக தெலங்கானா முதலமைச்சரின் கருத்திற்கு அம்மாநில பாஜக தலைவர் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து தற்போது மத்திய இணையமைச்சர் ஒரு கண்டனத்தை தெரிவித்துள்ளார். 


மேலும் படிக்க:"வானத்தில் கரைந்துவிட்ட நட்சத்திரம்” : முன்னாள் பிரதமரிடம் கல்பனா சாவ்லா பேசிய ஃப்ளாஷ்பேக் வீடியோ..