விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடித்திருக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் உருவாகி உள்ளது. அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தை நயன் - விக்னேஷ் ஆகியோரின் “ரௌடி பிக்சர்ஸ்” நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.

Continues below advertisement


இந்நிலையில், திரைப்படம் எப்போது வெளியாகும் என பெரும் எதிர்ப்பார்ப்பு இருந்தது. அதனை அடுத்து, இப்படம் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என அப்படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன் அறிவித்திருக்கிறார். மேலும், இப்படத்தின் டீசர் வெளியாகும் தேதியையும் அறிவித்திருக்கிறார்.


மேலும் படிக்க: Valimai Release Date: இன்னும் 22 நாட்களில் வலிமை ரிலீஸ்! அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்ட போனி..!






இது குறித்து அவர் பகிர்ந்திருக்கும் ட்வீட்டில், “2.2.2022-ம் தேதி அன்று, 2.22 மணிக்கு இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன். படத்தின் டீசர் 11.2.2022-அன்று வெளியாகும், ஏப்ரல் மாதம் திரைப்படம் திரையரங்குகளில் மட்டும் வெளியாகும்” என தெரிவித்திருக்கிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருக்கும் 25-வது படம் இது என்பதால், பாடல்கள் ஒவ்வொன்றும் தனித்தனியாக ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது. பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் ஹிட்டாகி உள்ளது.


முன்னதாக இந்த திரைப்படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஶ்ரீசாந்த் நடித்ததாக தகவல் வெளியானது. அந்த தகவலும் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது.  ஏற்கனவே கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கோப்ரா படத்தில் நடித்திருக்கிறார். அதேபோல் ஹர்பஜன் சிங், பிராவோ உள்ளிட்டோரும் திரையில் தோன்றியுள்ளனர். இந்தப் படத்தில் ஸ்ரீசாந்த் நடிப்பதன் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகும் நான்காவது கிரிக்கெட் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: Bharathi Kannamma | அடுத்த ஆளும் அவுட்! இந்த முறை கண்மணி!! காலியாகும் பாரதி கண்ணம்மா கூடாரம்.!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண