தமிழகம் முழுவது நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளதை அடுத்து இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் முடிவடைந்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய 2 நகராட்சிகள், குத்தாலம், தரங்கம்பாடி, மணல்மேடு, வைதீஸ்வரன்கோயில் ஆகிய 4 பேரூராட்சிகளில் உள்ள 123 வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு போட்டியிட 858 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், அம்மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. மனுக்கள் சரிவர நிரப்பப்படாதது, கையெழுத்து இல்லாதது, சரியான ஆவணங்கள் இல்லாதது, முன்மொழிவாளர் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், வேட்புமனு பரிசீலனையில் 20 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 838 மனுக்கள் ஏற்கப்பட்டன. மேலும் தரங்கம்பாடி தேர்வுநிலை பேரூராட்சியில் 3 வேட்பாளர்கள் பேட்டியின்றி தேர்வாகிய நிலையில் 835 வேட்பாளர்கள் மாவட்டத்தில் போட்டியிட்டுள்ளனர்.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சியில் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்த நிலையில் பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் மற்றும் பணம் பட்டுவாடா நடைபெறுவதை தடுக்கும் வகையில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் குத்தாலம் பேரூராட்சிக்குட்பட்ட 7 வது வார்டில் பணம் பட்டுவாடா நடைபெறுவதாக தேர்தல் பார்வையாளருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற பறக்கும் படை அதிகாரி சிவபழனி மற்றும் குத்தாலம் தலைமை காவலர்கள் செல்வேந்திரன், விக்ரம் தலைமையிலான குழுவினர் நேரில் சென்று ஆய்வு செய்த போது பறக்கும் படையினர் வருவதை அறிந்த அடையாளம் தெரியாத நபர்கள் 35 வெள்ளைநிற கவர்களில் தலா 500 ரூபாய் வீதம் வீதியில் வீசிவிட்டு சென்றுள்ளனர். மேலும் அந்த கவர்களுடன் 7 வது வார்டு வாக்காளர் பட்டியலும் கிடந்தது. இதன் அடிப்படையில் தூக்கி வீசப்பட்ட பணம் 17,500 ரூபாய் பணத்தை கைப்பற்றிய பறக்கும் படையினர் பேரூராட்சி அலுவலகத்தில் தலைமை எழுத்தர் அன்பழகனிடம் ஒப்படைத்து பணத்தை வீசி சென்ற அடையாளம் தெரியாத நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Covid-19: ஒயின் குடித்தால் கொரோனா குறையும்...! - ஆய்வில் வெளியான சுவாரஸ்ய தகவல் சொல்வது என்ன?