நெல்லை மாவட்டத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான திருநாவுக்கரசர் இன்று பாளையங்கோட்டை பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார், அப்போது அவர் பேசுகையில், தற்போது தமிழகத்தில் உதய சூரியன் உச்சத்தில் உள்ளது,  மேலும் இந்தியாவிலேயே சிறந்த முதல்வர்களில் தமிழக முதலமைச்சர் மு. க ஸ்டாலின் முதலிடத்தில் இருப்பதாக பாராட்டு தெரிவித்த திருநாவுக்கரசர் இது மக்களுக்கு நன்மை செய்கின்ற தேர்தல் என்றும், எம்பி பதவியை விட கவுன்சிலர் பதவிதான் முக்கியம் என்றும் தெரிவித்தார், மக்களுக்கு அருகிலிருந்து நன்மைகளை செய்யும் கவுன்சிலர் பதவியில் ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றால் மட்டுமே நன்மை கிடைக்கும்,




ஆட்சியை பயன்படுத்தி அவர்கள் மக்களுக்கு நன்மை செய்வார்கள் என்றார். அதிமுக தற்போது இரண்டாக உடைந்து இருக்கிறது, இரு தலைமை பிரச்சினை, ஒருபுறம்  சசிகலாவின் தொல்லை என்றால் தினகரன் தொல்லை மற்றொரு புறம், இவற்றிற்கு இடையில் மத்தியிலிருந்து மோடியே ரிமோட் கண்ட்ரோல் மூலம் அதிமுக இயக்குகின்றது என விமர்சித்தார், மேலும் மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய பல்வேறு நிதியை தராமல் பாக்கி வைத்துள்ளது, குறிப்பாக ஜிஎஸ்டி நிலுவைத் தொகை ஏழாயிரம் கோடி ரூபாயை தராத ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது, இந்தியாவில் பெரும்பாலும் தங்காத பிரதமராக மோடி இருக்கிறார், கொரோனோ வந்த காரணத்தால் தான் மோடி இந்தியாவில் இருக்கிறார், இல்லாவிட்டால் பெரும்பாலும் அவர் வெளிநாட்டில் தான் இருப்பார், நான் கூட வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான பிரதமரா மோடி என்று கேட்டேன்,




எனவே மோடி ஆட்சியை அகற்றி விட்டு ஸ்டாலின் கூறியது போன்று ராகுல்காந்தி தலைமையில் மத்தியில் நல்லாட்சி அமைய வேண்டும், எல்லா ஜாதி, மதம் மக்களை நேசிக்கக் கூடிய தலைவர் வரவேண்டும், தமிழகத்தை நேசிக்கும் ராகுல் காந்தி பிரதமராக வரவேண்டும், ஆட்சிக்கு வந்த பிறகு திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு அப்படியே இருக்கிறதா என்று மக்கள் இந்த தேர்தலை எதிர்பார்க்கிறார்கள், எனவே அனைவரும் உதயசூரியன் மற்றும் கை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று பேசினார், இந்த தேர்தல் பரப்புரையின் போது, முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப், மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.