உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸின் புதிய உருமாறிய வகையான ஒமிக்ரான் தொற்று கடந்த சில மாதங்களாக இந்தியாவில் பரவி வந்தது. ஒமிக்ரான் பரவல் தற்போது இந்தியாவில் ஒரளவு கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. எனினும் கொரோனா பரவல் இன்னும் சில இடங்களில் தொடர்ந்து கொண்டே வருகிறது. 


 


இந்நிலையில் துருக்கியில் ஒருவருக்கு 14 மாதங்களாக கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து இருந்து கொண்டு வருகிறது. துருக்கி நாட்டைச் சேர்ந்தவர் முஸாஃபர் கயாசென்(56). இவர் இரத்த புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார். இதன்காரணமாக இவருடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தி சற்று குறைவாக இருந்துள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 


 


அதைத் தொடர்ந்து இவர் 6 மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அப்படியும் அவருக்கு கொரோனா தொற்று சரியாகவில்லை. அதன்பின்னர் தற்போது நான்கு மாதங்கள் வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டு வருகிறார். கடந்த 14 மாதங்களில் சுமார் 78 முறைக்கு மேல் இவருக்கு தொடர்ந்து கொரோனா தொற்று உறுதியாகி வருகிறது. 




இதுகுறித்து கயாசென், “இது ஒரு பெண் வடிவ கொரோனா தொற்றாக இருக்கும். அதனால் தான் அது என்னை விட்டு செல்லவில்லை என்று காமெடியாக கூறி வருகிறார். அத்துடன் விரைவில் நோய் தொற்றிலிருந்து குணம் அடைந்து தன்னுடைய பேத்தியுடன் விளையாடுவேன்” எனத் தெரிவித்துள்ளார். 


 


பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக மீண்டு வர சில நாட்கள் எடுக்கும். எனினும் முஸாஃபர் கயாசென் 14 மாதங்களாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது சற்று அதிர்ச்சியாக உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இத்தனை நாட்கள் இவருக்கு கொரோனா பாதிப்பு தொடர  அவருடைய இரத்த புற்றுநோய் ஒரு முக்கிய காரணம் என்று தெரிவிக்கின்றனர். இவருக்கு 441 நாட்களுக்கு மேலாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து வருவதால் கொரோனா தடுப்பூசி இதுவரை செலுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண


மேலும் படிக்க: 13 ஆண்டுகளுக்குப் பின் பிரிட்டனை தாக்கிய ‘லஸ்ஸா’ காய்ச்சல்: அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை