2020-ம் ஆண்டு முதல் கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் போராடி வருகிறது. நோய்த் தொற்று பரவலை குறைக்க, தடுப்பூசி தயாரிக்கப்பட்டது. எனினும், கொரோனா பரவல் இன்னும் முழுமையாக ஒழியாத நிலையில் ரெட் ஒயின் அருந்துபவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவதாக ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.


கொரோனா பரவல் தடுப்பு தொடர்பாக Frontiers in Nutrition என்ற பத்திரிக்கை, சமீபத்தில் மேற்கொண்ட ஓர் ஆய்வில், வாரம் 1 முதல் 4 கிளாஸ் சிவப்பு ஒயின் அருந்துபவர்களுக்கு, கொரோன பாதிப்பு அபாயம் 10% வரை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒயிட் ஒயின், சாம்பேன் என சொல்லப்படும் மற்ற பானங்கள் குடிப்பதாலும் கொரோனா பாதிப்பு அபாயம் குறைய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், சிவப்பு ஒயின் குடிப்பவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவது குறைவு என கண்டறியப்பட்டுள்ளது.



இதில், கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் ஒயின் குடித்தால் கொரோனா தொற்று இருக்காது என உறுதியாக சொல்ல முடியாது. அதற்கான தரவுகளும் இல்லை. ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஆய்வு முடிவுகள் பின்னாளில் மாற்றம் காணலாம். இதனால், கொரோனா பாதிப்பு இருக்காது என சொல்ல முடியாது, தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மட்டும் குறைவு என்பதாக மட்டும் சொல்லப்பட்டுள்ளது. மேலும், பீர் அருந்துவதால் கொரோனா பாதிப்பிற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.  எனவே, சில ஆய்வுகளின் அடிப்படை தகவல்களை வைத்து நோய்த்தொற்று ஏற்படாது என்பதை உறுதிப்படுத்த முடியாது. தடுப்பூசி செலுத்தி கொண்டும், முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளி கடைபிடித்தும் கொரோனா தொற்று பரவலில் இருந்து பாதுகாத்து கொள்ள வேண்டும் என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. 




மேலும் படிக்க: “இதற்காகவா உன்னை போன்ற நடிகரை உருவாக்க கஷ்டப்பட்டேன்...” - பாலச்சந்தரால் வாழ்க்கையை மாற்றிய ரஜினி!




தமிழ்நாடு கொரோனா அப்டேட்:


தமிழ்நாட்டில் நேற்று (பிப்ரவரி 17-ம் தேதி) ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,310 இல் இருந்து 1,252 ஆக குறைந்துள்ளது. 83,861 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,252  ஆக குறைந்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் 285 பேருக்கு ஒரே நாளில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் மேலும் 6 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,962 ஆக உயர்ந்துள்ளது. 




ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண