கடலூர் மாநகராட்சியில் விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தேசியத் தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் இந்த நிலையில் 1-வது வார்டில் போட்டியிடும் புஷ்பலதா அவர்களை ஆதரித்து செம்மண்டலம் நான்குமுனை சந்திப்பில் இறுதிகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், திமுக ஆட்சி அமைத்து அதில் இருந்து தமிழகம் தலைசிறந்த வளர்ச்சி மிகுந்த மாநிலமாக பத்தாண்டுகளில் சாதனை புரிந்துள்ளது மேலும் இந்தியாவின் தலை சிறந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் என்று சர்வே முடிவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலின் போது அதிமுக தலைமையில் கூட்டணி அமைத்தது ஆனால் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவித்த பிறகு அந்த கூட்டணி சிதறி போனது ஒற்றுமையாக இல்லை. கூட்டணியில் அதிமுக ஒருபுறம் பாமக ஒருபுறம் பாஜக ஒருபுறம் தனித்தனியாக செயல்பட்டது இதனாலேயே சிதைந்து போனது. ஆனால் திமுக சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி கட்டுக்கோப்பாக அமைத்தது அதே கூட்டணி தான் உள்ளாட்சித் தேர்தலிலும் அமைந்துள்ளது.
அதிமுக கூட்டணி பலவீனம் அடைந்தது திமுக கூட்டணி அதே கட்டுக்கோப்பாக பலமாக நிலைத்து நிற்கிறது. இதற்கு காரணம் அதிமுக கூட்டணியில் நல்ல தலைமை இல்லை அதிமுக விற்கு தலைவர்கள் இல்லை ஜெயலலிதா இறந்த பிறகு அதிமுகவிற்கு பொதுச்செயலாளர் பதவிக்கு ஆளே இல்லை கட்சித் தலைவரும் பொதுச் செயலாளரும் அவர்களால் அமைக்க முடியவில்லை. அதிமுகவிற்கு நல்ல ஆற்றல் மிக்க தலைவர் இல்லை என்ற போதிலும் கூட்டணிக்கு எப்படி நல்ல தலைமை வரும் திமுகவிற்கு கிடைத்தது போல நல்ல ஆளுமை வாய்ந்த தலைவர் அதிமுகவிற்கு இல்லை இதனை மக்கள் நன்கு அறிந்துள்ளார்கள்.
தமிழ்நாட்டின் மதவெறி சக்திகள் ஆக்கிரமிக்க முயற்சித்து வருகிறார்கள் ஊடுருவ நினைக்கிறார்கள் ஆர்எஸ்எஸ் சங்பரிவார் அமைப்புகள் மூலம் மறைமுகமாக முகமூடிகளை அணிந்து கொண்டு தமிழகத்தில் ஊடுருவ நினைக்கிறார்கள் இந்தியாவில் எல்லா மாநிலத்திலும் அவர்களால் ஆளுமை செலுத்த முடிகிறது ஆனால் தமிழகத்தில் வால் ஆட்ட முடியவில்லை காரணம் அவர்கள் வாலாட்டினால் வாலை ஒட்ட நறுக்க கூடிய ஆட்சி மற்றும் திமுக கூட்டணி இங்கு உள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வராமல் அதிமுக ஆட்சிக்கு வந்திருந்தால் இங்கு வாழ்வது அதிமுக ஆட்சியாக இருக்காது கை பாவையின் கட்சியாகத்தான் இருக்கும். ஏனென்றால் கடந்த 5 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியை நடத்தி வந்தது பாஜகதான் அவர்கள் அதிமுக ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காகவே அவர்கள் கட்டுப்பாட்டிலேயே செயல்பட்டு வந்தனர். எனவே மக்களாகிய நீங்கள் அனைவரும் இன்னும் தலைசிறந்த தமிழகம் முன்னேற திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.